அவளுக்கு, வாளினிற் கொடிய வயமான் கண்கள், அம்மம்ம! செந்தூரப் பொட்டும், சீரான பூந்துகிரும், கொண்டைக்குச் சில சின்மலர்களும் சூடியபடி நின்றாள். கண்ணாடி முன்னால், வளைகள் ஆர்க்க, அம்மம் ததும்ப, இரு கைகளையும் உயர்த்தி, குழலை வாய்ப்பாகச் சொருகி முடிந்தாள். இதழில், செம்முகை முத்தங்கள் பல வரச்செய்து, குதிக்கால்கள் தத்தி எழ, காற்றை முத்திமுத்திச் சிரிக்கும் குழந்தை அவள். இப்படி எல்லாமும் கோர்த்து, புறத்தில் இயற்கை போற்றி வளர்த்த பொம்மல் மலரழகுபோல், அழகினை வாரிக் கட்டிக்கொண்ட பதுமைபோ ல், பொலிவான தோற்றம் அவளுக்கு. அகத்தின் ஆழத்தில், மிகையான அழகுகள் கண்டால், அவளுக்கு அதைக் கண்ணீர் விட்டுக் கொண்டாடத் தோன்றும். இப்படி அழகினால் மனதைப் பழக்கிக்கொண்டவளிடம் மிகுதிப் பண்பெல்லாம் வந்து வணங்காதா என்ன? இதற்குமேலும் அவள் மனதின் வடிவைச் சொல்ல உவமைகள் வேண்டுமா? ஆனால், இவை மட்டுமா மதிப்பிற்குரிய பெண்ணின் இலட்சணைகள்? அவளின் இன்னொரு முகமும்தானே அரவணைப்புக்குரியது? ஒரு நாளின் இரகசிய யோசனைகளில், மாராப்புப் பெருமூச்சில், தன் அழகைத் தானே மெச்சி மருவும் மோகப் பொழுதுகளில், அவளிடம் தோன்றும் அந்த வாளின...