இலக்கியத்தையும் கவிஞர்களின் பாடல் வரிகளையும் ஒப்பிட்டு எழுதப்பட்ட ஆக்கங்களில் சிலவற்றை இங்கே தொகுப்பாகப் பகிர்கிறேன். இலக்கியத்தின் மீது காதல் கொண்ட கவிஞர்கள், அவற்றை எளிமைப்படுத்திக் கொடுத்த அழகினை இந்தப் பதிவுகள் சொல்கின்றன. ஆழ்ந்த இலக்கியப் புரிதல் உள்ளவர்களால் ஆழமான உணர்வுகளை அழகாகப் பதிவுசெய்ய முடிந்திருக்கிறது. கம்பனின் பாடல்கள் மனித உணர்வுகளின் மென்தன்மையை நன்றாக எடுத்துச்சொல்லக்கூடியது. அதில் பெண்களின் அச்சச் சிறப்பினைச் சொல்கிற ஒரு அழகான பாடல் இருக்கிறது. அதில் "வாளைமீன் உகள. அஞ்சி. மைந்தரைத் தழுவுவாரும்" என்றொரு வரி வருகிறது. ஆற்றில் நீராடிக்கொண்டிருக்கும் பெண்கள் வாளை மீன்களுக்குப் பயப்படுவதுபோல நடித்து கணவரைத் தழுவிக்கொள்கிறார்கள். கணவரைத் தழுவுவதற்கு இதுவொரு பொய்க் காரணமாக அமைந்துவிடுகிறது. இதை வைரமுத்து மிகவும் அழகாக கிராமியச் சூழலுக்குள் புகுத்தியிருப்பார். "சேத்து மட தொறக்க, செவ்வால மீன் குதிக்க, தாவி குதிச்ச மீனு, தாவணிக்குள் விழுந்துவிட பாம்பு புகுந்ததுன்னு, பருவ பொண்ணு கூச்சல் இட முறைமாமன் ஓடிவந்து முந்தானைக்குள் மீன் எடுக்க" &qu