Posts

Showing posts from February, 2011

நடுநிசி நாய்கள் - வீராவின் பக்கங்கள்

Image
முதலில் பாலியல் தெளிவூட்டும் இப்படி மன பக்குவம் அடைந்தவர்களுக்கான(18 +) படங்கள் எடுப்பதற்கு தைரியம் வேண்டும்.அதுவும் முக்கியமாக எமது சமுதாயம் இன்னும் பகுத்தறிவு ,மனப்பக்குவம் அடையாத நிலையில் .ஆனாலும் கவுதம் தெளிவாக சொல்லியிருக்கிறார் பக்குவநிலையை அடைந்தவர்களுக்கான படம் என்று . பலரின் தவறான புரிதலுக்கு உள்ளான ஆரம்ப கதையின் சுருக்கம் . சிறுவயதிலிருந்தே பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் வீராவிடம் சில வருடங்கள்  கழித்து இளம் பராயத்தில் ஏற்ப்படும் மனோநிலை மாற்றமே பல பிரச்சனைகளுக்கு வழிகோலுவதுடன் வாழ்க்கையையும் புரட்டிப்போடுகிறது . சிறுவயதில் தாயை இழந்து ,தனது தந்தையால் பாலியல் வன்புணர்ச்சிக்கு,துஷ்பிரயோகத்திற்கு  உட்படுத்தப்படும் சமீரிட்க்கு(வீராவுக்கு அல்ல ) அவனது பதின்ம வயதில் (Teenage (13 )) அவன் மீது அக்கறை செலுத்தும் பக்கத்து வீட்டு பெண் மீனாட்சி என்பவருடன் பார்த்தவுடனேயே காதல் ஏற்ப்படுகிறது . இந்த கொடுமைகளை தெரிந்துகொண்ட மீனாட்சி சமீரை காப்பாற்றி தன்னுடன் வைத்துக்கொள்கிறார் .சமீரின் பெயரை வீரா எனவும் மாற்றி அவனை வளர்ந்தார் .வீராவும் மீனாட்சி அம்மா என்று அழைக்க வீரா மீனாட

பேய்கள் - விஞ்ஞான விளக்கம்

Image
இ ந்த கடவுள் பேய் இரண்டும் சிறுவயதில் இருந்து குழந்தைகள் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாதவர்கள் கிளப்பிவிட்ட புரளியாக இருந்தாலும் பேய்களின் பாதிப்பு வெளிநாடுகளில் நடந்தால் அவர்கள் வேற்று வழிகளை விட இப்போது அதற்கென்று  படித்த ஆய்வாளர்களை வைத்தே ஆராய்ச்சி  செய்கின்றனர் . இதுவரை காரணம் தெரியாமல் இருந்திருக்கலாம் ,அதற்க்கான விஞ்ஞான அறிவியல் விளக்கங்களை கொஞ்சம் ஆராய்வோமே . பேய் அடித்தல் அல்லது பிடித்தல் என்று சொல்லுமிடங்களில் ஆய்வாளர்கள் மின்காந்த சக்தியை அளந்து பார்த்திருக்கிறார்கள் . அதில் கிடைத்த அளவு  சாதாரண இடங்களில் இருக்கும் மின்காந்த சக்தியின் அளவை விட மிக அதிகம் . வழமைக்கு மாறான மிகப்பெரிய மாற்றம் என்றும் சொல்லலாம் . இது அருகில் இருக்கும் மின் சாதங்களில் இருந்து வரலாம் அல்லது பூமியின் காந்த சக்தியின் பாகமாக இருக்கலாம். ஆனாலும் சில ஆய்வாளர்கள் அதாவது Paranormal Investigators என்று சொல்லப்படுபவர்கள் .இது ஒரு அமானுஷ்ய சக்தி அதாவது Supernatural இருப்பதற்கான சான்று என்றும் பேய்கள் தான் இதை தோற்றுவிக்கின்றன என்று கூறுகிறார்கள் . பொய்யோ உண்மையோ ஆனால் நாம் அனுபவித்திருக்கிற

அர்த்தமுள்ள இந்து மதம் : போகி - தைப்பொங்கல் அர்த்தம்

Image
//அர்த்தமுள்ள இந்துமதத்தின் விளக்கத்தையும் அதனோடு விஞ்ஞான விளக்கத்தையும் ஆராய்ந்து எழுதும் 8 ஆவது பதிவு // முன்னைய ஏழு பதிவுகள் : அழுத்துக  வேறு எல்லா மதங்களும் தமது இறைவன் பிறந்த நாளை அல்லது அதனோடு ஒட்டிய நாளை பிறந்த தினமாக/புதுவருடமாக  கொண்டாடும் போது தமிழன் உழவுக்கு முக்கியத்துவம் கொடுத்து உழவர் திருநாளாக தைப்பொங்கலை கொண்டாடி வருகிறான் . தற்ப்போது உழவர்களுக்கு மரியாதை இல்லை என்பதும் மரியாதை கொடுக்கும் சீனா எப்படி வளர்ந்திருக்கிறது என்றும் பார்த்தாலே தெரியும் . இந்த தைப்பொங்கல் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது . இந்த நான்கையும்  பற்றி பலர் தவறாகவே புரிந்து வைத்துள்ளனர் . போகி நாள் என்பதை "போக்கி" நாள் என்கிறார்கள் . அதாவது வீட்டில் உள்ள கழிவுப்பொருட்கள் பழையனவற்றை போக்கும் நாள் என்கிறார்கள் .இது முதலாவது தவறு .  எப்போதும் சுத்தப்படுத்தும் நாளை ஒரு திருநாளாக கொண்டாடியதில்லை .இதென்ன உழவர் சம்மந்தமான நாளில் சம்மந்தமே இல்லாமல் இந்த போகி வருகிறது என சிந்தித்து பார்த்ததில்லையா . "போகி" என்ற வார்த்தையை தெளிவாக கவனித்தால் தெளிவு பிறக்கலாம் . விளைச்சல் என்பது போகம்

ராதாமோகனின் வேகமான பயணம் போகலாம் (எனது பார்வையில்)

Image
//இலங்கையில் பல மசாலா படங்களை நடிகர்களுக்காக அவர்கள் ரசிகர்களுக்காக வெளியிடும் திரையரங்குகள் இதை வெளியிடாததால் ராதாமோகனின்  "பயணம்" பார்க்கும் ஆர்வத்தில் திருட்டு  வி சி டியில் பார்த்த அனுபவம் .DVD வந்ததும் ஒளிப்பதிவை  ரசிப்பதற்கு மீண்டும் பார்க்க வேண்டும் // பிரகாஷ் ராஜின் பணச்செலவில் ராதாமோகன் வேகமாகவும் விறுவிறுப்புடனும் தமிழ் சினிமா காணாத, காட்டாத நிலைக்கு  விமானத்தில் பட குழுவுடன் சேர்ந்து கூட்டிச்சென்றுருக்கிறார் . இடையிடையே பயணத்துக்குள் ஒவ்வொரு தனி மனித வாழ்க்கையின் பயணத்தையும் சேர்த்து நகைச்சுவையாக கேலியான தமிழ் சினிமாவையும் பார்த்த படியே பயத்துடன் சிரிப்பு  கலந்த  பயணம் இனிது . சென்னையில் இருந்து டெல்கி செல்லும் பயணிகளை பாகிஸ்தான் கடத்திச்செல்லும் தீவிரவாதிகள் யூசுப் கான் எனும் இன்னொரு தீவிரவாதியை விடுதலை செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்து தமது கோரிக்கையை முன் வைக்கின்றனர் . இந்த வழமையான சினிமா திரைக்கதையில் யதார்த்தமான  மாற்றம் ஏற்ப்படுகிறது .அது ராதாமோகனின் சாமர்த்தியம் . இடையே தீவிரவாதி சுட்டதில் விமான கட்டுப்பாட்டில் பாதிப்பு ஏற்ப்பட்டு திருப்பதியில் தரைய

கலிலியோ கலிலி - வானவியல் அறிவியலின் ஆரம்பம்

Image
ந வீன அறிவியலின் தந்தை ,அறிவியலுக்காய்  தன்னையே அர்ப்பணித்த அந்த மனிதன் கலிலியோ கலிலியின் பிறந்தநாள் இன்று (கி பி 1642 ). அறிவியலின் பிறப்பு என்றும் சொல்லலாம் .கலிலியோ இறந்த தினத்தன்று 300 ஆண்டுகள் கழித்து பிறந்தவர்  ஸ்டீபான் ஹவ்கிங் என்பது மேலதிக தகவல் . சூரியனை தொடர்ந்து அவதானித்து சூரியப்புள்ளிகளை கண்டுபிடித்தவர் .அதனாலேயே தனது கண் பார்வையை இறுதிக்காலத்தில் இழந்தவர் . மதத்தின் கொடும்கோல் ஆட்சி நிலவிய வேளையிலும் தனது கொள்கைகளை நிரூபிக்க தவறாதவர் பற்றி பெரிதாக அறிந்திராதவை பற்றி பார்ப்போம் . அ றிவியல் அவதானிகள் ,விஞ்ஞானிகள் வளர்ந்த காலம் அது . அவர்கள் மதங்கள் அழுத்தம் பிரயோகித்தன . விஞ்ஞான ,அறிவியல் வளர்ச்சியை அடக்கி ஒடுக்கிய காலம் அது . அவரது முதல் கண்டுபிடிப்பு பைசா நகர தேவாலயங்களில் தொங்கிக்கொண்டிருந்த எண்ணெய் விளக்குகள் ஆடிக்கொண்டிருந்தன.அவர் அதன் நேரத்தை கணக்கிட்டார் .நேரத்தை கணக்கிட தனது நாடித்துடிப்பையே பயன்படுத்தினார் .அது பிற்காலத்தில் ஊசல் மணிக்கூடுகள் வர உதவின . ஊசலை அதன் அலைவு  வைத்து(அலைவில் எந்த நிறையை ஊசலில் கட்டினாலும் ஒரே மாதிரி தான் அலைவு இருக்கும் ) மேலிருந்த

காதல் - ஹார்மோன்களினூடு ஒரு பயணம் !

Image
இந்த காதலை ஹார்மோன் செய்யும் கலகம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம் . நீங்க காதலிக்காம இருந்தா கூட இந்த அடுத்த,பக்கத்துவீட்டு ,நண்பர்கள்  காதலை கவனித்தாலே போதும் எவ்வளவு அடிமையாகி இருக்கிறார்கள் என தெரியும். பேஸ்புக் வாலில் கவிதை கிறுக்கல்கள் ,எஸ் எம் எஸ் என அனைத்திலும் அதன் அடிமைத்தன வெளிப்பாடு பார்த்திருபீங்க . எதனால் இப்படி ? ஏன் இவ்வாறான அடிமைத்தனம் என்ற கேள்விகளுக்கு சேதன இரசாயனத்தோட கொஞ்சம் அறிவியலையும் குழைத்து பயணம் செய்து பார்ப்போம் . எதிர்ப்பு பதிவல்ல ,காரணம் தெரிந்துகொள்வதில் தவறும் இல்லை . குருநாதர் சுஜாதா அவர்கள்  ஆயுத எழுத்தில் எழுதிய வசனம்  சுருக்கமாக இருக்கும் .  காதல்னு ஒன்னு கிடையவே கிடையாது . நாம் பிறந்ததெல்லாம் , நாமண்ணா நான் நீ இதோ இந்த பச்சை சட்டை மஞ்ச சுடிதார் போலீஸ்காரர் எல்லாரும் பொறந்தது எதுக்காக நம்மோட நலத்துக்காக . இந்த காதல், பாட்டு, ஓவியம் ,கண்ணீர் இதெல்லாமே இருட்லையும் ,ஹோடேல்லையும் ,பெட்லையும் முடியிறது தானே . estrogen    testosterone   Vasopressin   வெறும் ஒர்கனிக் கெமிஸ்ட்ரி . x கிரோமொசொம் y கிரோமொசொம் xx ,xy அவ்வளவு தான் மேட்டர்" .என்று

இமான் மலேகி(Realistic painter) - ஒரு ஓவியனின் ரசனை

Image
நவீன ஓவியங்களை(Modern Arts) பெரிதாக ரசிப்பதில்லை . காரணம் ஒன்றுமே புரிவதில்லை அதை வரைந்தவர்  விளக்கினால் மட்டுமே விளங்கும். ஆனால் நான் பார்த்து பிரம்மித்த ஓவியங்கள் அப்படி அல்ல. சாதாரண கண்களுக்கு ரசிப்புத்தன்மை என்பதை விட வியப்பை தரக்கூடியது . ஓவியங்களில் பல வகைகள் இருக்கலாம் அதில் இமான் மலேகி  என்ற மிகச்சிறந்த ஓவியனை  R ealistic painter   என்ற வகைக்குள் சேர்க்கலாம் .அதாவது ஒரு நிகழ்வை புகைப்படம் எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் ஓவியங்கள் .   வியப்புக்கான காரணங்களை  பகிர்ந்துகொள்கிறேன் . இந்த படத்தில் சுவரிலிருந்து தரை வரை வந்திருக்கும் நிழல் .சீமெந்து தரையின் மீது இருக்கும்  வெடிப்புகள் , சுவரில் இருக்கும் அழுக்குகள் ,மாலை வேளை அல்லது காலை வேளையில் வெயில் மரக்கிளைகள் இடையே  வரும் அழகு . தரையில் ஊற்றப்பட்டிருக்கும் நீர் சில இடங்களில் காய்ந்திருக்கிறது என ஒவ்வொன்றையும் ரசிக்கலாம் . . அமைதியான பெண் போன்ற  முக பாவனை ,தோலில் இருக்கும் மென்மை,உடையில் இருக்கும் மடிப்புகள்,ஓரத்தில் இருக்கும் முடி ஆடைகளில் பட்டு தெறிக்கும் வெளிச்சம் .ஒரு பொருளை பிடித்திருக்கும் போது கை

மதன் கார்க்கி : நெஞ்சுக்குள் பெய்திடும் தமிழ் மழை

Image
இறுதியாக வெளியாகிய  பயணம்  பாடலுக்கு  கீழே செல்லவும்  ... பூச்சியம் ஒன்றோடு பூவாசம் இன்றோடு என்று பைனரிக்குள் பூவாசத்தை கொண்டு வந்து தமிழையும் அழகாக தொழில்நுட்பத்தோடு ஒருமைப்படுத்தி என்னை மிகவும் கவர்ந்தவர் மதன் கார்க்கி . ஏன் பெரும்பாலானவர்கள் அறிந்துகொண்டதும் இரும்பிலே ஒரு இருதயம் முளைத்ததோ என்ற இந்த பாடல் மூலம் தான் . ஆனால் அவர் தான் கண்டேன் காதலே பட பாடல்  ஓடோ ஓடோ ஓடோடிப்போறேன் என்ற பாடலை எழுதினார் என்று பிறகு தான் தெரியும் . ஆனால் அப்போதே அவர் புதிய ஆரம்பங்களை வரிகளுக்கு கொடுக்க எத்தணித்தது பாராட்டுக்குரியது. மிதவை மனமே.. மிதவை மனமே.. என்னை முந்திச் செல்லாதே என்று ஆரம்பிக்கப்பட்ட அந்த பாடல் இசையமைப்பாளர் வித்தியாசாகரின் வேண்டுகோளுக்கு இணங்க மாற்றியிருக்கிறார் . எந்திரனில் தன் திறனை காட்டிய மதன் கார்க்கியின் பயணம் நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ விலும் தொடர்ந்தது . வரிகள் அனைத்தும் புதிது .ஏதோ ஒன்று இருக்கிறது வரிகளில்  . தமிழ் அழாகான மொழி என வெளிப்படுத்தும் எழுத்து , அவரின் பார்வையில் இருந்து பார்க்கும் போது ஆச்சரியம் . ஒரு மௌனம் பரவும் சிறு காதல் பொழுதில் விழியில் விள