பாரபட்ச்ச்சமின்றி ஒரு நாத்திகனுக்கும் ஆத்திகனுக்கும் இடையில் நடக்கும் உரையாடல் டாக்டர் பால் டேவிஸ் என்பவரால் "The mind of the god " என்ற புத்தகத்தில் எழுதப்பட்டதை சுஜாதா அவர்கள் பகிர்ந்திருந்தார் ..... நான் உங்களோடு பகிர்கிறேன் .... நாத்திகன் :- ஒரு காலத்தில் உலகத்தில் நடக்கும் அத்தனை காரியங்களுக்கும் கடவுள் தான் காரணம் .கல்லுக்குள் தேரை ,கருப்பை உயிருக்கு எல்லாம் கடவுள் தான் ஏற்ப்பாடு செய்கிறார் .அடுத்த பஸ் வருவது ,சிப்மண்டு பணம் திரும்பி வருவது கூட கடவுள் செயல் என்கிற விளக்கம் தேவைப்பட்டது .அது அறியாமையினால் வந்தது .மெல்ல மெல்ல அறிவியல் எல்லாவற்றின் இயற்கையையும் விளக்க கடவுளின் பொறுப்புக்கள் படிப்படியாக குறைந்து வருகிறது . அந்த முதல் வெடிவரை( பிக் பாங் ) கடவுளே இல்லாமல் போய்விட்டார்கள் . அதற்க்கு மட்டும் எதற்கு ஒரு கடவுள் தேவைப்படும் என்கிறாய் . ஆத்தீகன் :- உங்கள் அறிவியலால் எல்லாவற்றையும் விளக்க முடியாது . உலகில் பல விந்தைகள் உள்ளன. உதாரணமாக ,பெரிய வியப்பு உலகில் - முதல் உயிர் எப்படி உருவானது என்பதே சரியாக விளக்கப்படவில்லை .உங்கள் அறிவியலாளர்கள் இ