"ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை" என்று நவாலியூர் சோமசுந்தர புலவரது பாடப்புத்தகங்களில் படித்தது நினைவு. இன்று ஆடிப்பிறப்பு (17.7.2011) பனங்கட்டிகூழ் குடித்து மகிழ்ச்சியாய் கொண்டாடும் நாள் . ஆடிப்பிறப்பு தமிழர்களுக்கு என்றே தனித்துவமான திருநாள் . இன்றுவரை இது யாழ்பாண தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது .புலம்பெயர்ந்து வாழும் இடங்களிலும் கடைப்பிடித்து வருவது பாராட்டத்தக்கது . தமிழ் நாட்டு மக்கள் இதை பெரும்பாலும் மறந்துவிட்டனர் . மேலைத்தேய கலாசார திணிப்பு காரணமாக இருக்கலாம் . ஆரியர்களால் திணிக்கப்பட்ட தீபாவளி ,சித்திரை வருடப்பிறப்பு போல் அல்லாது தை திருநாளும் ,ஆடிப்பிறப்பும் தமிழர்களுக்கு என்றே தனித்துவமான திருநாளாகும் . அப்படி மாதத்தின் முதல் நாட்களை கொண்டாட வேண்டிய காரணம் என்ன என்பதை பார்ப்போம் . தமிழர்களின் திருநாள் எதுவும் அறிவியலுடன் பிழைக்காது . இயற்கையோடு தொடர்புபட்டவை அவை. உலகிலேயே தமிழ் கலாசாரம் சிறந்து விளங்கியது என்கிறோம் என்றால் அதற்கான காரணம் விவசாயம் ,இயற்கையை மக்கள் மதித்தமை . தமிழர்களின் கலாசாரத்தில் கடவுள் என்ற பதத்திற்கு இடம் கொடுக்காமல் இயற்கை...