Skip to main content

Posts

Showing posts from February, 2015

நண்ணு முகவடிவு

பாரதி எழுதிய 'கண்ணன் என் காதலன்' பாடலை வெவ்வேறு குரல் வடிவங்களில் கேட்டிருக்கிறேன். டி.கே ஜெயராமன் முதல் கார்த்திக் வரை பாரதியின்  மொழியைப் பாடிவிட்டார்கள். அவற்றில் பின்னணிப் பாடகியான சுசித்ராவின் குரலும்,  அதனை அவர் பாடிய விதமும்  மிகவும் வசீகரமானது. தமிழ் உச்சரிப்பின் தெளிவு, அழுத்தம், உறுதி  எல்லாம்  அத்தனை அழகு.அவன் மொழியைச் சந்தேகமாகப் பாடினாலே அழகு சிதைந்துவிடும். எழுத்தில் மட்டுமல்லாது, இசையோடு நெகிழ்ந்துகொடுக்கும்போதும் தமிழ்ச் சொற்களின்  வளைவுகள் எல்லாம் அழகு. அதிலும்  'சொற்தேர்வு' என்று வரும்போது   பாரதியை மிஞ்ச வேறொருவரும் இல்லை. அதைப் பிரதியீடு செய்யவோ, உடைக்கவோ முயன்றால் தோல்விதான். சுசித்ராவைத் தவிர  பலரும் "ஆரிடம்" என்பதை "யாரிடம்" என்று பாடிவைக்கிறார்கள். "நண்ணு முகவடிவு" என்று உச்சரிக்கிறபோதே கற்பனை பயனுறுகிறது. ஒரு பெண்ணினுடைய துயரமாக இருந்தாலும் இதில் காதலின் இன்பமான துன்பமும், இழந்த இனிமையும்  இழையோடுகிறது. சில நினைவுகள் பரிணமிக்கும்போதேல்லாம் இதைக் கேட்பதுண்டு. பெண்களினிடத்திலிது போலே -- ஒரு பேதையை முன்ப

புத்தகங்கள் 5/36 [2015] Business Model Generation

வளர்ந்துவருகிற தொழில்நுட்பம் காரணமாகப்  புத்தகங்கள் தமது இருப்பினைத் தொலைத்துவிடும் என்பதே பலரதும் எண்ணம். தொழில்நுட்ப வளர்ச்சியில் சில விடயங்கள் பிரதியீடாகவும் சில விடயங்கள் மெருகேறிக்கொண்டும் வருகின்றன. புத்தகங்களை இரண்டாவது வகையில்தான் இணைத்துக்கொள்ளவேண்டும். அதாவது, மாற்றமடைந்து  வருகிற விடயங்களின் பட்டியலில் சேர்த்துக்கலாம். புத்தகங்களின் எதிர்காலம் பற்றிய விடயத்தில், அமெரிக்காவினைச் சேர்ந்த Brian Dettmer என்பவரின் கருத்து கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டியது. புகைப்படத் தொழில்நுட்பமும் அச்சுத் தொழில்நுட்பமும் முன்னேறியபோது ஓவியங்கள் அழிந்துவிடும் என்பதே பலருடைய கருத்தாக இருந்தது. ஆனால் ஓவியங்களோ தம்மை  அன்றாடப் பயன்பாட்டிலிருந்து விடுவித்துக்கொண்டன.  கிட்டத்தட்ட அதனை ஒரு விடுதலை என்றே சொல்லவேண்டும். தனக்கென ஒரு சுயமான கௌரவத்தோடு ஓவியங்கள் வேறு வடிவங்களையும் நிலைகளையும் தொட்டன. அதே நிலையில்தான் புத்தகங்களும் இருக்கின்றன என்பதே அவருடைய கருத்து.  ' Business Model Generation' என்கிற புத்தகத்தை ஒரு நவீன புத்தக வடிவமைப்பு என்று சொல்லலாம் . அதன் வடிவமைப்புக்கே அதன

எப்போதும் பெண் 4/36 [புத்தகங்கள் 2015]

ஒரு ஆணினுடைய பார்வையில், சொட்டுச் சொட்டாய் உயிர்பெறும்  பெண்மையின் துல்லியமான உணர்வுகளைப் படிப்பதென்பது தமிழ்ச் சூழலில் எப்போதேனும் ஒருமுறை நிகழ்கிற விஷயம். ஒரு பெண்ணினுடைய விரகதாபத்தை வெளிப்படுத்தும் புதுமைப்பித்தனின் 'வாடாமல்லிகை', 'கல்யாணி' மாதிரியான கதைகள், வைரமுத்துவின் கவிதைகள் போன்றவற்றை உதாரணங்களாகச் சொல்லலாம். ஆனால் ஒரு பெண்ணினுடைய வாழ்வினை முழுவதுமாகப் பதிவுசெய்கிற தமிழ் நாவல்களைக் காண்பது அரிது.  சுஜாதா தன்னுடைய "எப்போதும் பெண்" என்கிற நாவலில் ஒரு பெண்ணினுடைய பிறப்பு முதல் இறப்பு வரை நிகழக்கூடிய விடயங்களைப் விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார்.  ஒரு பெண்ணானவள் எப்படி வளரவேண்டும் என்பதை ஒரு சமூகம் எப்படி முன்கூட்டியே நிர்ணயித்து வைத்திருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை முன்வைக்கிறார். அந்தத் தீர்மானத்தின் வழியிலேயே இந்தப் புத்தகத்தில் வருகிற பெண்ணும் பிறந்து வளருகிறாள். பிரான்ஸ்ஸினைச் சேர்ந்த  பெண் எழுத்தாளரான  Simone de Beauvoir என்பவரின் "The Second Sex" என்கிற பிரபலமான புத்தகத்தை உதவியாகக் கொண்டே இந்தப் புத்தகத்தை எழுதியதாக சுஜாதா கூறுக