கூதிர்காலம் ஆரம்பித்திருக்கிறது. பனியும் மழையும் ஒன்றாகப் பொழியும்போது அதற்குப் பொருத்தமான ஒரு அழகான குறுந்தொகைப் பாடலோடு காதல் காலத்தை வரவேற்பது அழகாக இருக்கும் என நினைக்கிறேன். தலைவன் பிரிவைத் தலைவி தாங்கிக்க மாட்டான்னு கவலைப்பட்ட தன் தோழியிடம் தலைவி தன் மனநிலையைச் சொல்லுகிறமாதிரியான பாடல். படம் : இணையம் தோழியே கேளு, ஈரத்தைச் சுமந்துவந்து என்மேல தூவுகிறபடி பனிக்காற்று வீசுகிற கூதிர்காலம் இது. நடுக்கம் தருகிற இந்தக் குளிர்கால இரவின் அமைதியில் மெல்லிய மணி ஒலி மட்டும் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறது. தொலைவிலிருந்தாலும் துல்லியமாகக் கேட்கிறது. இரவுல நல்லாத் தூங்குற பசுவை ஈ/நுளம்பு உறங்கவிடாம கடிச்சு தொந்தரவு செய்கிறது. ஈ அமரும் இடத்தை எல்லாம் தன்னோட நாக்கால தடவுவதற்காக பசு தன்னோடை தலையைத் தூக்கிவிட்டு மறுபடியும் உறங்குகிறது. இதையே திரும்பத் திரும்பச் செய்திட்டிருக்கு. அது இப்பிடி செய்யும்போதெல்லாம் அதோடை கழுத்துல இருக்கிற குட்டி மணி அசைந்து அசைந்து சின்ன ஒலி எழுப்புது. அந்த ஒலி என்னை ஏதோ செய்கிறது. என் தனிமைக்கு துக்கத்தை இன்னும் அதிகரிக்கிறது. இந்தச் சத்தம் மற