"கன்னடத்தில் சிவராம காரந்தும் மலையாளத்தில் தகழி சிவசங்கரப்பிள்ளையும் இயல்புவாதத்தை முழுக்கமுழுக்க ஓர் இந்தியவகை அழகியலாக உருவாக்கிய மேதைகள் என்று சொல்லலாம்." - தகழி சிவசங்கரப்பிள்ளை பற்றி எழுத்தாளர் திரு.ஜெயமோகன் இந்த வருடம் ஆரம்பித்ததிலிருந்து மூன்று புத்தகங்களைப் படித்துமுடிக்க இயலுமானதாக இருந்தது. வேலை, கல்வி, மேலதிக வாசிப்பு மற்றும் இதரவேலைகளுக்கும் நடுவில் இதுவொரு நல்ல எண்ணிக்கை என்றே எனக்குத் தோன்றுகிறது. இறுதியாக, தகழி சிவசங்கரப்பிள்ளை என்பவர் எழுதிய மலையாள நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பான 'தோட்டியின் மகன்' என்கிற நாவலைப் படித்துமுடித்தேன். 1946 இல் எழுதப்பட்ட இந்த நாவலை சுந்தர ராமசாமி அவர்கள் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்திருந்தார். எப்போதோ மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு இருந்தாலும், அதன் முதற் பதிப்பை 2000ஆம் ஆண்டில்தான் நாவலாக உருக்கொடுத்து வெளியிடமுடிந்திருக்கிறது. ஒரு நல்ல இலக்கியத்தைத் தமிழ் வாசகர்களுக்குக் கொண்டுவந்த பெருமை சுந்தர ராமசாமியையே சாரும். எந்த இலக்கியவாதிகளாலும் பேசப்படாத தோட்டியினுடையை வாழ்க்கையை ஒரு இலக்கியமாக வடித்திருக்