Skip to main content

Posts

Showing posts from July, 2010

வெள்ளிக்கிழமை அதிர்ஷ்டமில்லாத நாளா ? - 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை

உண்மைகள் அறிவியல் நோக்கில் வெளிவரவேண்டும் .. யார் மனதையும் புண்படுத்த அல்ல . . 13  ஆம் இலக்கம் அதிர்ஷ்டமற்றது ,13 ஆம் இலக்கத்தில் வீடு வாங்குவது நல்லதல்ல என்று  கேள்விப்பட்டிருக்கிறோம் . ஆனால் கிறிஸ்தவத்தில் இன்னொரு கதையும் உண்டு . மேலைத்தேய நாடுகளிளும் வெள்ளிக்கிழமை  அதிர்ஷ்டமற்ற நாளாக நடைமுறையில் உள்ளது . நேரத்தை சரியாக ஒழுங்கு படுத்த மனிதனால் தான் நாட்க்காட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் தான்  7 நாட்களாக பிரிக்கப்பட்டு 12 மாதங்களாகவும் பிரிக்கப்பட்டது . ஆனால் இந்த பதின்மூன்றாம் திகதி மர்மத்தின் படி இறைவன் முதலிலேயே நாட்க்காட்டி படைத்து விட்டு மனிதனை படைத்தது போலவே கதை உள்ளது . paraskevidekatriaphobia என்றழைக்கப்படும் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மீதான பயம் மேல் நாட்டில்   பெரும் தொகையான மக்களால் நம்பப்படுகிறது . இந்த பயங்களுக்கு கட்டுக்கதைகளே காரணம் (எந்தவித ஆதாரமும் அற்ற )... இயேசு தனது 12 தோழர்களுடன் இருந்த போது பதின் மூன்றாவதாக வந்தவர் யூதாஸ் . அவர் தான் இயேசுவை காட்டி கொடுத்தவர் .  வெள்ளிக்கிழமை மீதான பயத்துக்கு காரணம் .. . இயேசு  

தேஜா வு - முன்னரே பார்த்திருக்கிறேன் 2

தேஜாவு என்பது பிரெஞ்சு சொல் என்றும் நாம் பார்க்கும்  சில விடயங்கள் ஏற்க்கனவே பார்த்துள்ளோம் ஏற்க்கனவே இதைப்பற்றி பேசியுள்ளோம் ஏற்க்கனவே இந்த  விடயம்  நடந்துள்ளதே  போன்ற எண்ணங்களை தோற்றுவிக்கும் .இது அனைவருக்கும் தோன்றும் உணர்வு . அது பற்றிய முதலாவது பதிவு  முதலாவது  பதிவு   இதற்க்கு பலர் பல  தியரிகள் சொன்னாலும் பலவற்றின் தொகுப்பாக டச்சு மனோதத்துவவியலாளர் ஹெர்மன் ஸ்னோ   (Hermon Sno ) ஒரு விளக்கத்தை தொகுத்து வெளியிட்டிருந்தார் .நாம் பார்த்த  முப்பரிமாண தோற்றங்களை உடைந்த காட்ச்சிகளோ நிகழ்வுகளையோ நம் மூளை  தொகுக்க முற்ப்படும் . காரணம் நாம் உணரும் பல விடயங்கள் மீண்டும் பல வழிகளிலேயே பல புலன்கள் மூலம் மூளையை வந்தடைகிறது .   அதாவது நாம் பார்த்த சத்தமோ அல்லது மனமோ மீண்டும் மூளையால் தொகுக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது. ஆனால் இது சில செக்க்கன்களே நீடிக்கும் . இதை உணர்ந்திருப்பீர்கள் . வேறு ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக சில வேளைகளில் நாம் ஏற்க்கனவே உணர்ந்த நிகழ்வுகளில் சிறு உணர்வுகள் அதிர்வுகள் மீண்டும் நினைவை கொண்டு வரும் என்பதே . சில வேளைகளில் நீங்கள் ஒரு பழைய காரை ஓட்டி  செல்லும் போது

கனவுகள் - காரணங்கள்

கனவுகள் இதுவரை யாராலும் சரியான விளக்கம் கொடுக்கப்பட முடியாத ஒன்று . விஞ்ஞானிகளின் கருத்துப்படி மூளையில் ஏற்ப்படும் மாற்றங்களே கனவுகளுக்கு காரணம் எனப்படுகிறது . இருந்தாலும் சரியாக இதுவென கணித்து கூற முடியாத இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்கும் விடயம் தான் கனவுகள் . முதலாவது  பதிவு    ஆனால் கனவுகள் பற்றிய  தொடர் ஆய்வாளர்கள் ஒவ்வொரு கனவும் எமது எண்ணங்களின் வெளிப்பாடு எனவும் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு அர்த்தங்களும் கொண்டன என கண்டறிந்துள்ளனர் . பொது இடத்தில் ஆடை இல்லாமல் இருத்தல்  நாம் பொது இடங்கள் பாடசாலை அல்லது வேலைத்தளத்தில் இருப்போம் திடீரென ஆடை இல்லாதது போல உணர்வு தோன்றும் . இவ்வாறான கனவுகள் நாம் எமது நிஜ வாழ்க்கையில் இருந்து எதையாவது  மறைக்க முற்ப்படும் போது இவ்வாறான கனவுகள் தோன்றும் . நாம் அந்த விடையத்தை மறைக்க இன்னும் தயாராகவில்லை என உள் மனதில் எண்ணம் தோன்றும் போதும் அவ்வாறான கனவுகள் தோன்றும் . விழுந்துகொண்டிருப்பது போல கனவு ... . ஏதாவது உயரமான இடத்திலிருந்து விழுவது போல கனவு தோன்றும் ,திடீரென எழுவோம் . ஏதாவது பிரச்சனைகள் தோன்றும் போது அதை எம்மால் தடுக்க முடியாவிட்டா

ஒக்டோபஸ்...

இந்த உலக கோப்பையில் ஸ்பெயின் வெல்லும் என கூறிய அக்டோபஸ் மிகவும் பிரபலம் . இந்த விடயம் அந்த அக்டோபஸ்க்கு தெரியுமோ தெரியா ? இருந்தாலும் இந்த  அக்டோபஸ்கள் பற்றி உங்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் . அதனால் உங்களோடு பகிர்கிறேன் . உங்கள் மனைவி உங்களை விட பல மடங்கு பெரியவளாக இருந்தால் எப்படி இருக்கும் . ஆனால் அக்டோபஸ் அதை பற்றி கவலைப்படுவதில்லை . ஆண் அக்டோபஸ் சில சென்டி மீட்டர்கள் நீளமும் சில கிராம் நிறையையுமே கொண்டிருக்கும் . ஆனால் பெண் அக்டோபஸ் இறுதி 6 அடி (2 மீட்டர்கள் ) வரை வளரும் . கிட்டத்தட்ட 100 பவுண்ட்ஸ்(45 .4 கிலோ கிராம் ) எடை கொண்டவை . அதாவது ஆண் அக்டோபஸ் விட பெண் அக்டுபஸ் 40 ,000 மடங்கு நிறை கொண்டது . Blue-ringed octopus male and female mating (இனப்பெருக்கம் )_ ஆனால் நல்ல வேளை முழு தொடர்புடன் இனப்பெருக்கம் நடப்பதில்லை . விசேடமாக வடிவமைக்கப்பட்ட கை போன்ற அமைப்பில் காணப்படும் நீண்ட வாழ போன்ற அமைப்பினூடு விந்துகளை பெண் அக்டோபசிடம்   ஒப்படைக்கும் . pilow அக்டோபஸ் ,அக்டோபோடா(octopoda ) எனும் வகைகளிலேயே  சிறந்த உதாரணம் . அவைகள் ஒரு கிராமில் இருந்து நான்கு கிர

பொது இடத்தில் , வேலைத்தளத்தில் கூச்சம் இல்லாமல் பேசலாம்

பேசுவதற்கு  கூச்சமா ?அதுவும் ஒரு சமூகத்தில், வேலை பார்க்கும் இடங்களில் அல்லது முதன்முதலாக ஒரு மேடையில் ஏறி பேசுவதோ அல்லது ஒரு குழு முன்பாக கதைப்பதற்கோ பலருக்கு தயக்கம் உண்டு .. ஆனால் இவற்றை இல்லாமல் செய்யலாம் . முன்னோர்கள் உரைகளை பின்பற்றல்  நீங்கள் எதிர் காலத்தில் மேடையில் ஏறி  பேசுவதற்கு  வாய்ப்பு கிடைத்தால் கூச்சம் வேண்டாம் . மிகத்திறமையான பேச்சாளர்களை இப்போதே பின்பற்றுங்கள் .அவர்களின் நடை உடை பாவனை ,கருத்துகளை வெளிப்படுத்தும் விதம் என்பவற்றை கவனியுங்கள் .. அப்பிள் நிறுவன CEO வின் பல்கலைக்கழக உரை .- ஸ்டீவ் ஜொப்ஸ்  கூர்மையான கவனம் - நிலைத்திருத்தல்  சுய நினைவை நிலை நிறுத்த வேண்டும் . ஒரு பொது அறையில் பேசும் போது அனைவரும் உங்களையே கவனிப்பார்கள் என்பதை ஞாபகப்படுத்தவேண்டும். நீங்கள் சிறப்பாக உள்ளீர்கள் என உறுதிப்படுத்த வேண்டும் மிகவும் சௌகரியமாகவும் தொழிலாளியாகவும்(proffesional ) உடை அணிவது முக்கியம் . கருவை உள் வாங்கல்  என்ன  பேசப்போகிறோம் என்பதை சரியாக விளங்கி கொள்ள வேண்டும் . தன்னம்பிக்கை மிகவும் முக்கியம் . எண்ண பேசப்போகிறோமோ அதை  உள் வாங்கி அதன் திட்டத்தை க

வைரம் (தமிழ்) முத்து பிறந்த நாள் - வைரமுத்து

வைரமுத்து தமிழுக்கு கிடைத்த முத்து என்றே சொல்லலாம் . வைரமுத்து வந்த பின்பு  தான் கவிதை என்ற முறை மாறி பாடலுக்கேற்றவாறு வரிகள் எழுதும் முறைமை வந்தது . இன்று அவரின் பிறந்த நாள் ... ஜூலை  13 பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் ....... இளையராஜாவின் மிக மிக அருமையான இசை அமைப்பில் உருவானா சுஜாதா அவர்களே பீதொவனை மிஞ்சும் இசை என பாராட்டிய  பாடல் இது "ஒரு பொன் மாலை பொழுதே" அவரது முதல் பாடல் . இந்த முதல் பாடலே அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது . அதிலும் இரவை பற்றிய இயற்க்கையுடன் கூடிய வர்ணனை எந்த காலத்தை சேர்ந்தவர்க்கும் பிடிக்கும் . அது போன்ற ஒரு உச்ச  கற்ப்பனை  பிரமிக்க வைக்கும் . " வான மகள்  நானுகிறாள் " வேறு உடை பூணுகிறாள் "  என்ற  இரவின்  வருகையை வர்ணிக்கும் பாடல் மிகவும் பிடிக்கும். " வானம்   எனக்கொரு   போதி   மரம் , நாளும்   எனக்கது   சேதி   தரும்" .. போன்ற வரிகள் முதல் பாடலிலேயே அவரை தூக்கி நிறுத்தியது . பின்னர் ரஹ்மானுடன் இணைந்த போது ரஹ்மான் பாடல்கள் வெற்றிக்கு வைரமுத்து மிக துணையாக இருந்தார் . வெண்ணிலவே வெண்ணிலவே பாடலில் மிக அருமையான வ

வாழ்க்கை பரிசுகள்

வாழ்வில் பரிசுகள் வெறும் அட்டைகளிலும் பொருட்களிலும் இல்லை அவை மனது சம்மந்தப்பட்டவை மனதையே பரிசாக கொடுக்க வேண்டும் . ஆனால் ஒரு ரூபாய் செலவில்ல்லாத பரிசுகள் இவை ... கிரகித்தல் பரிசாக  கூறுவதை முதலில் வேறு எந்த தலையீடும் எதிர் சிந்தனைகளும் எண்ணமும் தோன்றாது கிரகிக்க வேண்டும் உறுதுணை பரிசாக  கட்டிபிடித்தல் , முத்தம் , தோளில் தட்டி கொடுத்தல், கைகளை இறுக பிடித்தல் போன்ற வழிகளில் பாசத்தை உற்ச்சாகத்தை வெளிப்படுத்தல் . சிரிப்பு பரிசு  நகைச்சுவையான வீடியோக்கள் , கதைகள் போன்றவற்றை பரிமாறல் .. அதன் அர்த்தம் "உன்னுடன் சேர்ந்து  சிரிக்க வேண்டும் " என்ற  பரிசு  .  எழுத்தில் நன்றி  செய்த உதவிக்கு ஒரு நோட்டில் "உதவிக்கு நன்றி" என்று எழுதி கொடுக்கலாம் .அது இறுதி வரை அவர்கள் கையில் இருக்கும் ... பாராட்டு பரிசு  மிகவும் அருமையான வேலை செய்தீர்கள் , இந்த உடையில் அழகாக உள்ளீர்கள் என சிறு உற்சாகமும் பாராட்டும் தெருவிக்க வேண்டும் ..முக்கியமாக சிறு பிள்ளைகளுக்கு  பாராட்டு  என்பது  மிக முக்கியம் .. தோள் கொடுத்தல்    துன்பமான நேரங்களில் மற்றயவர்களுடன் இருந்து அவர்களுக்கு தோ

இந்த வார சிறப்பு : பாடகர் உன்னிகிருஷ்ணன்

இந்த வாரத்தின் சிறப்பாக எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடகரது பிறந்த தினம் அண்மையில் வந்தது . அதுதான் ஜேசுதாசுக்கு அடுத்த படியாக எண்ணும் போது மனதில் தோன்றும் ஒருவர் உன்னி கிருஷ்ணனாக தான் இருக்க முடியும் . தனது அருமையான குரல்களில் உன்னி கிருஷ்ணன் தந்த பாடல்கள் இப்போது கேட்டாலும் இனிக்கும் . அதிலும் "தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு " பாடலில் உண்மையாக தென்றல் போன்றே அவரது குரல்  இருக்கும் .  "என்னவளே அடி என்னவளே" பாடல் முதலிலேயே அவரை  உச்சத்துக்கு கொண்டுசென்றது . ஆனால் அவர் பாடிய "உயிரும் நீயே உடலும் நீயே  உறவும் நீயே தாயே  " பாடல் என்னை மிகவும் கவர்ந்தது .  அவர் பாடிய இந்த இரு பாடல்களும் தேசிய விருதையும் சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான விருதை பெற்று தந்தது .  9 ஆம் திகதி ஜூலை மாதம்  1966 ஆம் ஆண்டு கே ராதாகிருஷ்ணனுக்கும்  டாக்டர் ஹரிணி ராதாகிருஷ்ணனுக்கும் மகனாக பிறந்தார் .    Kesari Kuteeram  எனும் சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற மருத்துவமனை அவரது குடும்பத்திற்குரியது . அவரது தாத்தா கேசரியிடம்  வந்து சிறப்பான இசை திறமையை காட்டுபவர்கள் திமைகளை காட்டி வெ

தேஜா வு .. முன்னரே பார்த்திருக்கிறேன் (Already seen ) ....

சாதாரணமாக இளைஞர்கள் பெண்களிடம் பாவிக்கும் வேண்டுமென்றே பாவிக்கும் சொல் . ஆனால் நம்மில் பெரும்பாலானோர் இதை உணர்ந்திருப்போம் . சில இடங்கள் ஏற்க்கனவே பார்த்தது போல இருக்கும் !!! சிலரை ஏற்க்கனவே பார்த்தது போல இருக்கும் .  அந்த நினைவுகள் வந்த நொடி எமக்கே வியப்பாக இருக்கும் . ஏற்க்கனவே இதே நிகழ்ச்சி நடந்திருக்கிறதே . இதே இடத்திற்கு வந்திருக்கிறேனே ? மீண்டும் அதே நிகழ்ச்சி நம் வாழ்வில் அந்த நிமிடம் நடப்பது போல உணர்வு . அனைவருக்கும் வாழ்க்கையில் சில தடவைகள் கட்டாயம் வந்திருக்கும் . உதாரணமாக அதே உணர்வு மீண்டும் எழுவது போல இருக்கும் . திடீரென நண்பனுடன் கதைத்துக்கொண்டிருக்கும் போது ஏற்க்கனவே இந்த தலைப்பில் பேசியிருக்கிறோம் என்ற எண்ணம் தோன்றும் . அது தான் தேஜா வோ என அழைக்கப்படுகிறது . தேஜா வோ என்பது ஒரு நிகழ்வு முன்னர் நடந்தது போல நம் உணர்வில் தோன்றும் ஆனால் அது நடைபெறவில்லை என்று எமக்கு தெரிவது தான் . already experienced;  déjà senti , already thought; and  déjà visité , already visited   என பிரெஞ்சு விஞ்ஞானி  Emile Boirac என்பவர்    இப்படி ஒன்று நம்முள் இருப்பதை  இனம்கண்டு வெளியில் கொ

கனவுகள் - தொடரும் மர்மம் - தகவல் அறிவோம் 2

கனவுகள் எவராலும் அறியப்படாத ஒன்று . இன்னும் ஆராய்ச்சி தொடர்கிறது .  ஆனால் எம்  வாழ்வில் நாம் அன்றாடம் எதிர் கொள்ளும் ஒன்று . முதலாவது  பதிவு  மரணம்  - கனவு    கனவு பற்றிய தகவல்கள்  1 . கூடுதலான கனவுகள் 5 தொடக்கம் ௨௦ நிமிடங்கள் வரையே நீடிக்கிறது .... 2 . முன்னர் நம்பியது போல கறுப்பு வெள்ளையில் மட்டும் கனவு தெரிவதில்லை ..  3 . ஒவ்வொருவரும் ஒரு இரவில் பல தடவைகள் கனவு காண்கிறோம் ஆனால் எமது ஆயுளில் நாம் காணும் கனவு நீளம் 6 வருடங்கள்  (கால நேர அளவில் மொத்தமாக ) 4 .குருடர்கள் தொடுதல் , நுகர்தல், ஒலி போன்ற வடிவுகளில் கனவை உணர்வார்கள்  5 .   REM உறக்க நிலை அல்லாத போது யானை எழுந்து நிற்கும் . REM உறக்க நிலையின் போதே சரிந்து படுக்கும் . (வேறு விலங்குகளும் ) REM உறக்க நிலை பற்றி கீழே பார்த்துள்ளேன் ஆனால் கனவுகள் என்ன ? அன்றாடம் நடைபெறும் விடயங்கள் வழமை போலவே உறக்கத்திலும் மூளை செயல்ப்படுத்துகிறதா ? அல்லது மூளையின் எழுந்தமானமான  செயல்ப்பாடா ? அல்லது  கனவுகளால் எமது வாழ்வின் பிரச்சனைகளுக்கு முடிவு  கிடைக்குமா ?   நடக்க இருக்கும் நிகழ்வுக்கு முன்னெச்சரிக்கையா?  என பல கேள்வி