Skip to main content

Posts

Showing posts from December, 2014

சுஜாதாவிடமிருந்து வாசியுங்கள் 2

'சுஜாதாவிடமிருந்து வாசியுங்கள்' என்ற முதலாவது பதிவு பொதுவானதாக அமைந்திருந்தது.  மேலும் சில உதாரணங்கள், காரணங்களோடு, 'உள்ளம் துறந்தவன்' நாவலை முன்னிலைப்படுத்தி இரண்டாவது பதிவு.. *********************************************************************************  எதிர்பாராத தன்மைதான் அவள் சிறப்பம்சம். இத்தனைக்கும் அழகி என்று உடனே சொல்லிவிடமுடியாது. பத்து நிமிஷம் உற்றுப் பார்த்துப் பேசினால் அவள் உண்மை அழகு புலப்படும். உயரமும் இல்லாமல் குள்ளமும் இல்லாமல் கச்சிதமான உடலமைப்பு. இடக்கைப் பழக்கம், aquiline nose (டிக்க்ஷனரியைப் பாருங்கள்). எல்லாவற்றிலும் ஓரளவுக்கு ஆர்வம். எதில் ஆர்வம் என்பது தினம் தினம் மாறும். ஒருநாள் இகேபானா, ஒருநாள் கர்நாடக சங்கீதம், ஒருநாள் சூடான் நாட்டு பட்டினிக் குழந்தைகள். - சுஜாதா (உள்ளம் துறந்தவன்) மில்லியன் யூரோக்கள் பெறுமதியான தொழில் நிறுவனக் குழுமத்தின் உரிமையாளர் ராகவேந்தர். அவரின்  அன்பிற்குரிய வளர்ப்பு மகள் மஞ்சரி. அந்நிறுவனத்தின் பெரும்பாலான ஷெயார்களை அவள் பேரிலேயே எழுதி வைத்துவிட்டார். ஏழையான அழகேசன் என்பவனைக் காதலிக்கிறாள்.  இந்நி

கம்பரும் கார்க்கியும்..

என் காட்டுக்குள் கிளியாகினாய்  கிளி ஒன்றின் கீச்சாகி.. இலை ஒன்றின் மூச்சாகி.. முகில் ஒன்றின் பேச்சாகி.. எனில் வீழ்கிறாய்! ~ கார்க்கி  யுவனின் இசையமைப்பில் வெளியான 'வை ராஜா வை' திரைப்படத்தின் பாடல்களை சில தினங்களுக்கு முன் கேட்டேன். என்றும் தனித்துவமும் புதுமையும் காட்ட விரும்பும் மதன் கார்க்கியின் வரிகளில் என்றுமுள்ள ஈர்ப்பு இருந்தது. 'பச்சை வண்ணப் பூவே'  பாடலில்  இடம்பெற்ற மேலே குறிப்பிட்ட வரிகள்  ஒரு சினிமாட்டோகிராபருக்கு தேவையான காட்சியையே முன்னே விரித்துப் போகிறது.  அதன் பின்னர் கம்பரும் கார்க்கியும் சேர்ந்து எழுதிய பாடலை இரசித்தேன். வைரமுத்துவும் வாலியும் தமிழ் சினிமாப் பாடல்களில் சங்க இலக்கியத்தை மெதுவாகப் புகுத்தி இரசிக்கச் செய்தவர்கள். அந்த வகையில் மதன் கார்க்கியின் முதல் முயற்சி இதுவென்று நினைக்கிறேன். எல்லோரும் காதல் என்றதும் சங்க இலக்கியத்தைப் பொருத்தினர். கார்க்கி சற்றே வேறுபட்டிருக்கிறார். 'பூக்கமழ் ஒதியர்' பாடலை  'சங்ககாலத்து club song' என்று சொன்னால்  பொருத்தமாக இருக்கும். பெண்ணை மானென்றெண்ணாதே

சுஜாதாவிடமிருந்து வாசியுங்கள்...

தமிழ்ச் சூழலில் இருந்து புதிதாகப் புத்தகங்கள் வாசிக்க வருபவர்களுக்கு எந்தப் புத்தகத்திலிருந்து வாசிப்பினை ஆரம்பிப்பது என்பதில் நிறையக் குழப்பங்கள் இருக்கிறது. யாராவது புத்தகம் வாசிப்பவர்களைக் கண்டால் அவர்கள் கேட்கும் இரண்டாவது கேள்வி இதுதான் என்று நினைக்கிறேன். ஒருசிலரின்  'பிஸி' எனக் காட்டிக்கொள்ள விளையும் செயற்கைத் தன்மையால், அவர்களாகவே வலிந்து ஏற்படுத்திக்கொள்ளும் 'உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது?' என்கிற முதலாவது கேள்வியை இப்போதைக்கு ஒத்திப்போடுவோம்.  புத்தகங்களைப் படிக்க விரும்புபவர்கள் சுஜாதாவிடம் இருந்து வாசிப்பினை ஆரம்பிக்கவேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து. இதுவரை நான் படித்த புத்தகங்கள் ஒப்பீட்டளவில் மிகச் சொற்பம். தீவிரமான இலக்கிய வாசகன் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. ஒரு புத்தகத்தை இரண்டு, மூன்று தடவைகள் வாசித்தால் தான் தலைக்கு ஏறும். ஒருபோதும் எண்ணிக்கையினை நோக்கி ஓடி வாசிப்பின் நோக்கத்தைச் சரித்திட முயல்வதில்லை. வார்த்தைகளில் நின்று செல்லும் நிதானமான வாசிப்பு மிகவும் பிடிக்கும். ஒரு எழுத்தாளனை முழுமையாக உள்வாங்கி மரியாதைப்படுத்த வேண்டும் என எ

மீனோட்டம் - லா.சா.ராமாமிர்தம்

லா.சா.ராமாமிருதம் அவர்கள், எழுத்தின் ஒலிப்பு முறையில், வசனங்களில் இருக்கும் கவிநயத்தில் அதிகம் கவனம் செலுத்துபவர். அவர் உருவாக்கும் கதாப்பாத்திரங்களில் உள்ள சோகமும் கவிநயம் மிக்கவை. லா.சா.ராவின் கரைபுரண்டோடும் எழுத்தை நான் முதன்முதலாகக் கண்டுகொண்டது 'அபிதா' என்கிற நாவலில் தான். அவருடைய மற்றைய படைப்புகளையும் படிக்க வேண்டும் என்கிற விருப்பத்தில் நிகழ்ந்தது தான் 'ஜனனி' என்கிற சிறுகதைத் தொகுப்பின் மீதான வாசிப்பு.  இதில் 'மீனோட்டம்' என்கிற சிறுகதைத் தொகுப்பில் உள்ள லா.சா.ராவின் அடையாளங்கள் ஏராளம். "நெஞ்சின் அடிவாரத்தில் ஏதோ புற்று இடிந்து அதனுள் ஜன்மக்கணக்கில் உறங்கிக் கிடந்த ஏதேதோ விஷயங்கள், பேச்சுகள், வாக்கியங்கள், வார்த்தைகள், பதங்கள் பத-ஸரி-க-ஸா-ம-த  ஸ்வரங்கள் ஓசைகள், ஒலிகள், மோனங்கள். திக்கித் திகில்கள். திமிதிமி எழுந்து மிரண்டு ஒன்றுடன் ஒன்று உருண்டு புரண்டு நெஞ்சமுட்டில் கவிந்த நஷத்ர இருட்டில் கருங் குதிரைகள் மின்னிடும் வெண்பிடரிகளை சிலிர்த்துக்கொண்டு தங்கத்துடைப்பம் போன்ற வால்களைச்  சுழற்றிக் கொண்டு இதய விலாசத்தில் ஓடுகையில் திடும் திடும் திடு