Skip to main content

Posts

Showing posts from July, 2013

'நெஞ்சுக்குள்ள' - வைரமுத்துவும் குறுந்தொகையும்

'நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் ' பாடலில் 'பட்சி ஒறங்கிருச்சு பால் தயிரா தூங்கிருச்சு, நொச்சி மரத்து இலைகூட தூங்கிருச்சு' என்றொரு வரி. அதென்ன 'நொச்சி மரத்து இலை கூட தூங்கிரிச்சு'? குறுந்தொகையில்(138) வருகிறது :  கொன்னூர் துஞ்சினும் யாந் துஞ்சலமே எம் இல் அயலது ஏழில் உம்பர் மயிலடி இலைய மா குரல் நொச்சி அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே. 'ஊரே தூங்கிடிச்சு,நான் மட்டும் தூங்கல்ல. என் வீட்டுக்கு பக்கத்துல உள்ள ஏழில் மலைல , மயிலோடை கால்களை மாதிரி இலைகளைக் கொண்ட நொச்சி மரத்தோட பூக்கள் உதிர்கிற சத்தத்தை இரவெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன்' என தலைவனுக்காக காத்துக்கொண்டிருக்கும் தலைவி சொல்கிறாள். ஆனால் வைரமுத்து அந்த நொச்சியும் தூங்கிடிச்சு என்கிறார். இலக்கியத்தை எவ்வளவு அழகா தொடர்புபடுத்துகிறார்.

வைரமுத்து : தேடல் உதிர்த்த வரிகள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் இன்று. கவிஞனுக்குக் கவிதை எழுதி வாழ்த்துவதா !  நினைச்சுப் பார்க்க  முடியவில்லை .அதனால் இந்தப் பதிவு.  வரிகளை / இசையோடு சேர்ந்துகொள்ளும் தமிழ்ச் சொற்களின்  அழகை   இரசிக்கும்  பெரும்பாலானோர்களிடம் போய் எந்த வரிகள் அதிகம் பிடிக்கும் எனக் கேட்டால், உடனே ' நறுமுகையே நறுமுகையே' என்று பதில் வரும். விதிவிலக்காக யாராவது இருந்தால் மன்னிக்க :) . அந்தளவுக்கு இலக்கியப் பாடல் வரிகளையும் சினிமாப் பாடல்களில் தைரியமாகப் புகுத்தி இரசிக்க  வைத்தவர்.  'தீண்டாய் மெய் தீண்டாய்' பாடல் தொடங்கி  'நறும்பூக்கள் தேடும் திருத் தும்பியே' வரை சில பாடல்களை சங்கத் தமிழ் கலந்து எழுதினார். காதலன் படத்தில் சில நிமிடங்கள் வரும் பாடலில் குற்றாலக் குறவஞ்சியையும், தீண்டாய் மெய் தீண்டாய் பாடலின் ஆரம்பத்தில்  குறுந்தொகையையும் அப்படியே பயன்படுத்தியிருப்பார். வரவிருக்கும்  கோச்சடையானில் கூட  இலக்கியத் தமிழில்  பாடல் எழுதுவதாகப் பகிர்ந்திருந்தார். இலக்கியத்தையும் அவர் பயன்படுத்திய உவமைகளையும் விட்டுவிட்டு கொஞ்சம் விஞ்ஞானம் பற்றி பேசுவோம் . விஞ்ஞானம் என்றால்