தமிழ் இயக்குனர்களால் சரியாக இனங்காணப்படாத ,பயன்படுத்தப்படாத மிகவும் திறமையான இசையமைப்பாளர்கள் வரிசையில் ரமேஷ் விநாயகத்துக்கும் ஒரு முக்கிய இடம் கொடுக்கலாம் . இசையமைப்பாளரும் பாடகருமான ரமேஷ் விநாயகம் பற்றிய அறிமுகம் பெரும்பாலானவர்களுக்கு நளதமயந்தி , அழகிய தீயே திரைப்படங்களுக்கு பின்னர் கிடைத்திருக்கும். அதற்கு முன்னரே வசந்தின் "ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே " படத்தில் ஒரேயொரு பாடலுக்கு மட்டுமே இசையமைத்து இருக்கிறார். அவர் முழுமையாக இசையமைத்த முதல் திரைப்படம் யுனிவேர்சிட்டி. அவர் பாடி இசையமைத்த பாடல்களில் சில எப்போது கேட்டாலும் சுகமான இசை அனுபவத்தை தந்துவிட்டே செல்லும். "ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே" திரைப்படத்தில் ரமேஷ் விநாயகம் இசையமைத்து பாடிய தொட்டு தொட்டு செல்லும் பாடல் அதிகமானோரைக் கவர்ந்தது. குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால் அவர் கொடுத்த மெல்லிசைகளை கேட்க்கும் போது , அதில் இரண்டு எப்போதுமே தென்றலில் ஈரம் கலந்து மனதை நனைத்துவிட்டே செல்லும் . இன்று கேட்டாலும் நம்மை இன்னொரு உலகத்துக்கு அழைத்துச் செல்