Skip to main content

Posts

Showing posts from July, 2012

உகரச்சுட்டும்(முன்மைச்சுட்டு )ஈழத்தமிழும்

மொழிஞாயிறு என்றழைக்கப்படும்  ஞா.தேவநேயப் பாவாணர் எழுதிய வேர்ச்சொற் கட்டுரைகள் படிக்க நேரிட்டது .   அதில் உ என்னும்  வேர்ச்சொல் பகுதியில் உகரச்சுட்டு பற்றி பகிர்ந்திருப்பார் .  உகரம்  ஒலிக்கும் போது இதழ் குவிந்து முன்னோக்குவதால் உகரச்சுட்டும், பேசுபவரின் முன்னிடத்தை குறிக்கும் .  ஒருவரை நோக்கி சொல்கிறோம் என்றால் அவர் முன்னிலையில் (மிக நெருக்கமாக ) உகரச்சுட்டு பயன்படுத்தப்படும் . உதாரணமாக : உதுக்காண்                                உந்தா                                உந்த                                உவன்                                உது                                உவை உந்த ( இந்த ) சொற்கள் ஈழத்தமிழ் பேச்சுவழக்கில் இன்றும் உள்ள சொற்கள் . இந்த உகரச்சுட்டு யாழ்ப்பாணத்தில் உண்டு தமிழ் நாட்டில் வழக்கற்றதாகி விட்டது என்று தன் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கார் தேவநேயப் பாவணார் . ஈழத்தமிழில் இவற்றின் பயன்பாடுகள் : உதுக்காண் ( என் முன் பார் ) இருக்கும் நல்லா தேடிப்  பார் . உவனிட்ட (முன் நிற்ப்பவர் ) எத்தனையோ  தடவை சொல்லீட்டன்  சும்மா  உவ்விடமா (உ + இடம் ) வ

கங்கை கொண்ட சோழபுரம் பயணம் - பகுதி 1

ஒரு வரலாற்று இடத்தின் சிறப்பை கேள்விப்பட்டு , அந்த தகவல்களை கொண்டு அந்த இடம் இப்படித்தான் இருக்குமென  மிகப்பெரிய  பிம்பத்தை முன்கூட்டியே ஏற்படுத்திக்கொண்டு அங்கு எப்போது செல்வோமென  எதிர்பார்த்திருப்பது ஒரு தனி சுகம் என்றால் , அதை நேரில் பார்த்து பிரமிக்கும் சந்தர்ப்பம் கிடைப்பது என்பது அதை விட அதீத மகிழ்ச்சியும் ஆச்சரியமும்  தரும் . அப்படியானதொரு சந்தர்ப்பம் ,  இரண்டாவது முறையாக இந்தியாவுக்கு  பிரயாணம் செய்த போது கிட்டியது . இந்த தடவை கங்கை கொண்ட சோழபுரம் முதல்  தராசுரம் ,தஞ்சைப் பெருங்கோயில், மதுரை , குமரிமுனை  வரை செல்வதென  நீண்ட தெரிவை மேற்க்கொண்டேன். முதலாவது இலக்கு சென்னையிலிருந்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் நோக்கியதாக அமைந்திருந்தது . சென்னை நோக்கி மீண்டும் திரும்பி வரும் வழியில் மாமல்லபுரம் செல்லலாம் என எண்ணமிருந்தது. வாகனம் கங்கை கொண்ட சோழபுரத்தை நெருங்கிக்கொண்டிருந்த போது சோழப்பேரரசு பற்றிய எண்ண  ஓட்டமும் மனதில் தொற்றிக்கொண்டது . தரையில் தன் பேரரசை நிறுவியதோடு மட்டுமல்லாது மிகப்பெரிய கப்பற்படை கொண்டு கடல் தாண்டி மலேசியா , இலங்கை என அனைத்து நாடுகளை

ஒரு லட்சம் புத்தகங்கள் - சுஜாதா

சுஜாதா தன் கதைகளாக இருந்தால் கூட அதில் தனக்கு தெரிந்த  தகவல்களை பகிர்வது சாதாரணம் . கதையின் ஓட்டத்தின் வேகத்தையும் சுவராசியத்தையும் அவை இன்னும் அதிகரிக்க செய்யுமே தவிர குறைவடைய செய்யாது . அண்மையில் வாசித்த சுஜாதாவின் " ஒரு லட்சம் புத்தகங்கள் " கதை மிக சுவாரசியமானது. சமூகத்தில் உள்ள அத்தனை கதாப்பாத்திரங்களையும் ,அத்தனை அழுக்குகளையும் ஒரே கதையில் சுட்டிக்காட்டுவது என்பது மிக கடினம் . மாகாகவி பாரதி போன்றவர்களை சமூகம் எப்படி பார்த்தது ,பார்க்கிறது என்பதிலிருந்து யாழ் நூலகம் , இலங்கை தமிழர் ,தனி நபர்களின் அரசியலும் நாட்டின் அரசியலும் எப்படி இந்த சமூகத்தை கையாள்கிறது என்பது வரை இந்த கதையில் தொட்டுவிட்டு சென்றிருப்பார் . நம்ம சமூகத்திலை ஒரு பழக்கம் ஒன்றிருக்கு , ஏதாவது ஒன்றை சின்னதாக கடமைக்கு செய்து விட்டு செய்து விட்டேன் செய்து விட்டேன் என்று இறக்கும் வரை  சொல்லிக்கொண்தே இருப்பது . அதை அரசியல் வாதிகள் பார்வையில்  " நாங்க தான் கடையடைப்பு நடத்தினோமே " என்று சொல்வதோடு அவர்கள் கடமை முடிந்து போவதை சுட்டிக்காட்டி இருப்பார் . இதனை சமூகத்தில் இருந்து கண்டறிய நுணுக்கமானதொ

இரண்டு இணையத்தளங்கள்

நான் தினமும் வாசிக்கும் தளங்களில் புதிதாக இணைந்திருக்கும் தளங்கள் இவை . தமிழின் சுவையை எளிமையாக்கி அனைவரையும் சேரும் வண்ணம் பகிர்ந்து வருகிறார்கள். தினம் ஒரு பா  வலைத்தளம் :  தினம் ஒரு பா  நன்னூல் ,கம்பராமாயணம் , சிலப்பதிகாரம் ,அகநானூறு ,நளவெண்பா , தேவாரம்  என அதில் வரும் பாடல்களை  எளிமையான உரை நடையில் விளக்கம் கொடுக்கும் தளம் . கம்பனின் தமிழ் மீது அதிக ஈர்ப்பு ஏற்ப்பட காரணமான தளமும் கூட . தமிழ் பாடல்களில் சுவாரசியம் நிறைந்த கணக்கதிகாரம் , புதிர்   போன்றவை மிகவும் பிடித்தமானவை . எழுத்தாளர் என் சொக்கன் அவர்கள் இதனை தொகுத்து பகிருகிறார் . குறுந்தொகை குறு டுவீட்டுகளாக  குறுந்தொகைகளை எளிய உரைநடையில் பகிருவதோடு ,அதனை இன்னமும் சுருக்கி 2 வரிகளில் எளிமைப்படுத்தி விடுவார் . குறுந்தொகைகளை   வரலாற்று ஆவணமாக அணுகாமல் கவிதைகளாக  உணர வைப்பது  சிறப்பு. குறுந்தொகைகள்  எந்த காலத்துக்கும் , எவருக்கும் பொருந்தக்கூடியது . அதனை சுவை குன்றாது எளிமைப்படுத்துவது என்பது தனி சிறப்பு . இவற்றை தொகுத்து வரும் விஜய் ரெங்கராஜன் அவர்களுக்கு வாழ்த்துகள் . வலைத்தளம்  : குறும்பா  குறுந்தொகைகளை க

காரணங்கள்

காரணங்கள் சௌகரியமானவை  மறதி என்பது மறக்கப்படாத தருணம்  மறுக்கிறேன் என்பதை மறைக்க    தவறுகளை நியாயப்படுத்த காரணங்கள் தேடுகிறேன்  அனைவரும் செய்வதுதானென இன்னொரு காரணத்தை வைத்துக்கொண்டு !