Skip to main content

Posts

Showing posts from July, 2015

பாகுபலி

நீங்கள் வரலாற்றுப் படங்களிலும் அதன் காட்சியமைப்பிலும் திளைப்பவராக இருந்தால் இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்கலாம். சின்ன வயதில் மகாபாரதக் கதைகளைப் படித்து, குருச்சேத்திரப் போரைக் கற்பனையில் நிகழ்த்திப் பார்த்த அனைவருக்கும் இந்தப் படம் நிச்சயம் மிகப் பிடித்தமானதாக அமையும். எங்கள் வரலாற்றிலும் சூப்பர் ஹீரோக் கதைகள் உண்டு. அதைக் கற்பனை கலந்து நேர்த்தியான 'பிரமாண்டம்'  கொடுக்க யாரும் முன்வர மாட்டார்களா என்கிற ஏக்கம் பலருக்கும் இல்லாமல் இல்லை. 'நான் ஈ' என்கிற காதல், fantasy கலந்த திரைப்படத்துக்குப் பிறகு ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகியிருக்கிற படம்தான் 'பாகுபலி'. தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. இந்தப் படத்துக்காகக் கிட்டதட்ட மூன்று வருடங்கள் மெனக்கெட்டிருக்கிறார். மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படமானது  ராஜமௌலியின் பதினோராவது படம். 'பாகுபலி' ஒரு  கற்பனை கலந்த வரலாற்றுக் கதையாக அமைகிறது. இரண்டு பாகங்களைக் கொண்ட இந்தத் திரைப்படத்தின் முதலாவது பாகம் தான் இப்போது வெளியிடப்பட்டிருக்கிறது. பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா,...

ஜூலை மலர்களே!

ஜூலை மாதம் என்றாலே சட்டென்று இரண்டு பாடல்கள் நினைவைத் தட்டும். ஒன்று, ரஹ்மானின் இசையில் அனுபாமா பாடிய "ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் மனசு" என்கிற பாடல். இன்னொன்று, "ஜூலை மலர்களே... ஜூலை மலர்களே...உங்கள் எதிரியாய் ஒரு அழகி இருக்கிறாள்" என்கிற பா.விஜயின் வரிகள்.  கொன்றைப் பூக்கள் ஜூலை மாதத்தில் பூக்கும். மரம் முழுவதும் நிறைந்திருக்கும். அதனால் "ஜூலை மலர்கள்" என்கிறார் பா.விஜய். கொன்றைப் பூக்களைத் தான் "ஜூலை மலர்கள்" என்றிருக்கவேண்டும். கொன்றைப் பூக்கள் அவ்வளவு அழகு. ஆனால் சிங்கள மொழியில் இதனை "Esala Mal" என்று அழைப்பார்கள். அதாவது ஜூலை மலர் என்று அர்த்தம். "கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்" சங்ககாலத்தில் கொன்றைப் பூவின் நிறத்தை பெண்களின் மேனி நிறத்துக்கு ஒப்பிடுவார்கள்.  சிவனுக்குப்  பிடித்தமான பூ என்பதால் சிவனைக் 'கொன்றை வேந்தன்' என்றும் அழைப்பதுண்டு. வண்டுபடத் ததைந்த கொடியிண ரிடையிடுபு  பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்        கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றைக்     ...

பாபநாசம்

கமல்ஹாசன் நடித்த பாபநாசம் என்கிற திரைப்படத்தை வெளியிடப்பட்ட தினமான இன்றே பார்க்கக்கிடைத்தது. கமலுக்கு ஒரு தரமான சினிமா அமையவேண்டும் என்பதுவே எனது  நீண்டநாள் எதிர்பார்ப்பு. இந்தத் திரைப்படம் அதனைப் பூர்த்தி செய்திருக்கிறது.  பாபநாசம் என்கிற ஊரில் மகிழ்ச்சியாக இருக்கிற ஒரு குடும்பத்தின் வாழ்க்கையில் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. அந்தப் பிரச்சனை  ஒரு குற்றச்செயலில் போய் முடிகிறது. குற்றத்தை மறைத்து தனது குடும்பத்தைக் காப்பாற்ற நினைக்கும் ஒரு மனிதனைப் பற்றிய கதை.  ஒரு சாதாரண மனிதனின் புத்திசாலித்தனத்துக்கும் போலீஸ், சட்டம் போன்ற அமைப்புக்கும் இடையிலான போராட்டம்தான் இந்தப்படம். மோகன்லால் நடித்த  'திருஷ்யம்' என்கிற திரைப்படத்தின் ரீமேக்தான் இந்தத் திரைப்படம். இரண்டுக்கும் சுவாரசியமான திரைக்கதை அமைத்து  இயக்கியது ஜீது ஜோசெப் என்கிற இயக்குனர்.  நடிப்பைப் பொறுத்தவரையில் அந்தந்தக் கதாப்பாத்திரங்கள் சிறப்பாக நடித்திருந்தாலும் கமலின் நடிப்புத்தான் ஒட்டுமொத்தப் படமுமே என்றும் சொல்லலாம். ஒரு சாதாரண மனிதனின் நிலை தடுமாற்றம் காணவேண்டிய இடத்தில் தடுமா...