Skip to main content

Posts

Showing posts from November, 2016

அச்சம் என்பது மடமையடா

கௌதமின் 'அச்சம் என்பது மடமையடா' மசாலாத் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டிருக்கிறது.  பயணம், காதல், அதிரடி என்று மூன்றையும் இணைத்திருக்கிறார்.  பயணத்தில், ஊருக்கொரு காற்றின் மணம் கமழ்வதை நிதானமாக உணரமுடியவில்லை.மிக அவசரமான பயணம். எல்லாவிதமான ரசிகர்களையும் திருப்திப்படுத்த முயன்றால் எதிலுமே நிறைவு காண்பது கடிது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனாலும் இது கௌதம் மேனன் படம்தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. கௌதம் மேனன் படங்களுக்கேயுரிய, பொதுவான அடிப்படை அம்சங்கள் உள்ள திரைப்படம்.  பயணத்தில் கௌதமுக்கு எப்போதுமே ஒருவித ஈடுபாடு உண்டு.  மணிரத்னத்தின் "எவனோ ஒருவன் வாசிக்கிறான்" பாடல் தந்த தாக்கத்தை வைத்தே ஒரு பத்துத் திரைப்படம் கொடுத்துவிடுவேன் என்று சொன்னவர். அவர் படங்களில் பெரும்பாலும், காதலைத் தேடிச் செல்லும் பயணமாக இருக்கும். அல்லது, ஒருவித அதிரடித் தேடல் தரும் சுகத்தினை நோக்கிய பயணமாக இருக்கும். காதல் தேடலுக்கு, "வாரணம் ஆயிரம்" மேக்னாவையும், "நீதானே என் பொன்வசந்தம்" வித்யாவையும் தேடிச்செல்லும் காட