மேசை மீது ஒரு paperweight , அதன் கீழே பறக்கும் ஒரு சில கடதாசிகள், பேனை,புல்லாங்குழல் இசை என அனைத்தும் இன்னமும் நினைவில் இருந்தால் நீங்களும் பாலுமகேந்திராவின் 'கதை நேரம் ' தொடருக்கு இரசிகர் தான். அந்தளவுக்கு ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது அந்தத் தொடர். ஒவ்வொரு கதாப்பத்திரங்களுக்கும் செயற்கைத் தன்மை அற்ற உணர்வை கொடுத்திருப்பார் . நான் பார்த்த போது என் வயது நுண்ணிய உணர்வுகளை எல்லாம் உற்றுநோக்கும் அளவில் இருக்கவில்லை . இயற்கையாகவே ,கதையின் போக்கிலேயே பாத்திரங்களின் உணர்வுகளை பிரதிபலித்ததால் இன்று வரை அந்தக் கதாப்பாத்திரங்கள் கூட நினைவில் இருந்து அகலவில்லை. எத்தனை தடவைகள் பார்த்தாலும் சலிக்காத திரைக்கதை,இயக்கம். அது பாலுமகேந்திராவுக்கே உரிய வித்தை. இப்போது அந்தத் தொடர்களை மீண்டும் பார்க்கும் போது Lighting இல் இருந்து எத்தனை விடயங்களை இந்த மனுஷன் கவனித்திருக்கிறார் என வியப்பாக இருக்கிறது. அவர் ஒரு ஜீனியஸ். அவர் தொடக்கி வைத்த புதிய அத்தியாயத்தை யாரும் பின்பற்றவில்லை என்பது தான் கவலைக்குரியது. மனதினில் கொஞ்சம் அமைதி நிலவும் வேளையில் 'கதை நேரம் 'த