ஒரு சமூகமோ, அமைப்போ அல்லது ஒரு படைப்போ திருத்தங்களுக்கு உள்ளாவது என்பது வேறு ,அழிவுக்குள்ளான ஒரு சமூகத்தை புதிதாக கட்டியெழுப்புவது என்பது வேறு . உதாரணமாக சொல்லப்போனால் நாம் செய்த விடயங்களில் தவறு இருந்தால் அதை திருத்தப்பார்ப்போம். சில விடயங்களை திருத்த முடியாமலும் ,தவறுகளை சரிவரக் கண்டுகொள்ள முடியாமலும் போகும் போது அதனை முற்றாக அழித்துவிட்டு மீண்டும் செய்ய முயல்வோம் . இது ஒருவித சௌகரியத்தை எமக்கு கொடுக்கும். புதிய அணுகுமுறைகளையும் பிரயோகப்படுத்துவது இலகு. பொருளாதாரத்தில் இதை Creative destruction என்று சொல்வார்கள் . ஆனால் இந்த பதிவு பொருளாதாரம் பற்றியது அல்ல. மனிதர்களின் நாகரிகமும் கலாச்சாரமும் மனித சிந்தனைகளின் வளர்ச்சி பற்றியதும். திருத்தங்களுக்கு உட்படுத்துவதை விட ,முழுதாக அழிவடைந்த ஒன்றை மீண்டும் கட்டியெழுப்பும் போது அது முற்றிலும் புதிய வடிவமாக உருவெடுக்கக் கூடும். மீண்டும் புதிதாய் உருவாக்கப்படும் போது அதில் நல்ல விடயங்களும் இருக்கக்கூடும் அல்லது மக்களை பின்தங்கிய நிலைக்கு இட்டுச்செல்லும் அளவுக்கு அடிமைபப்டுத்தும் விடயங்களும் தீய விடயங்களும் இருக்கக் கூடும்.