11.2.2016 அன்று மனித வரலாற்றில் ஒரு மகத்தான கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ஐங்ஸ்டைனின் ஈர்ப்பு அலைகளை நவீனத் தொழில்நுட்பத்தால் கண்டறிய முடிந்திருக்கிறது. ஐங்ஸ்டைன் தனது கோட்பாடுகளை முன்வைத்தபோது நிறையவே எதிர்ப்புகள் வந்தது . காரணம், அது மற்றவர்களின் சிந்தனைக்கு எட்டாமல் இருந்தது. அவர்களுக்கு ஒரு 'கிரியேட்டர்' என்பவர் சௌகரியமாகத் தோன்றினார். ஒரு முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் போகலாம். ஈர்ப்புச் சக்தி இருக்கிறது என்பதை நியூட்டன் அப்போது நிரூபித்தார். ஆனால், அது எப்படி வேலை செய்கிறது என்பது நியூட்டனுக்குத் தெரியவில்லை. தெரியாத ஒன்றுக்கு 'கடவுள்' என்று பெயர்வைப்பது தானே வழக்கம். அவர், ஈர்ப்புச் சக்தியைப் பற்றி பென்ட்லிக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில், ஈர்ப்புச் சக்தியானது ஒருவித கிரியேட்டரினால் நிகழ்த்தப்படுகிறது என்கிற மாதிரியாக எழுதுகிறார். நியூட்டனுக்கு ஒரு கிரியேட்டர் தேவைப்பட்டது. அதேநேரம், கிறிஸ்தவ அமைப்பின் உயர்பீடத்தின் கொள்கைகளை பென்ட்லி நிறைவேற்றி வருகிறார். கடவுள் மறுப்புக் கொள்கையை வெளியிடுபவர்களுக்கு எதிராக நியூட்டனின் இயற்பியலைப் பயன்படுத்த...