![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiurAhklZSN6-kc9GNk0i4sLSoKIGCerUGFrwSvXrzFUzZV7LJdjoUSeiYcsOQk4wOqqHxKgsv5R9StXsX-Cw860O2MiD-Vckv8b6b4_01h5XYDPEd9sI_mxNiHeQ8kT7dQKw0UsuptuLM/s400/48420251_1981459165295482_8356320626301992960_o.jpg)
அவள்
மண் உறு வளம் எங்கும்
ஊறும் பனிச் சிரிப்பினொடு
பொன் உறு பூ மேனியை
புனை துகிலாடிப் பொருத்தினள்
மண் உறு வளம் எங்கும்
ஊறும் பனிச் சிரிப்பினொடு
பொன் உறு பூ மேனியை
புனை துகிலாடிப் பொருத்தினள்
நனி விண்மீன் நிரை கிள்ளி
நுனி வெள்ளி மாலை அள்ளி
சென்னிய மார்வம் சேரும்
அணி நகை பல திருத்தினள்
அங்கே அவள்
கண் இரு பெருங் கயலாட
புனற் தாமரைத் தண்டாட
தான் உண்டாடவொரு நறுமலரின்றி
வண்டு நின்றாடும் வகை ஒரு
நாட்டியம் எழுதினள்.
கண் இரு பெருங் கயலாட
புனற் தாமரைத் தண்டாட
தான் உண்டாடவொரு நறுமலரின்றி
வண்டு நின்றாடும் வகை ஒரு
நாட்டியம் எழுதினள்.
Comments