Skip to main content

Posts

Showing posts from November, 2018

அவனும் அவளும்

நாளும் புது விந்தையுடன், வேள் வேட்கையுடன், கவி வாஞ்சையுடனெல்லாம், அவள் திரட்டி வைத்திருந்த அந்த இரகசிய வெற்றிடங்களுக்கெல்லாம் அவன் தேவைப்பட்டான். சிலநேரங்களில் அவளுக்கு, அவனுடனான ஓர் உரையாடலை அள்ளி, மூலவேரில் ஓர் உற்சவம் நிகழ்த்தி, ஆதி இச்சையில் எழுந்த ஆசைத் தேரில் நிறுத்தி, உயிரின் உயிரிலெல்லாம் உழவேண்டும் என்றிருக்கும். மறுகணமே, வாழ்வை நல்ல திருமண நிறுவனமாகவும், காதல் நிறுவனமாகவும், பார்த்துக் கட்டிய தன் காலக் கோட்டைக்கெல்லாம், ஆயுட்காப்புறுதி இட்டு வாழும் இந்தக் காப்புறுதிப் பண்பாட்டுச் சமூகத்தின் முன்னால், வேறொருவனுடன் தன்னைப் பிணைத்துக்கொண்ட அவளுக்கு, அவன்  ஒன்றுமில்லாதவனாக காட்சியளித்தான்.  ஆதலால், அவனுடைய உயிரொன்றும் அவ்வளவு அவசியமில்லை என்கிற பாசாங்குத்தனத்தை அவளுக்குள்ளேயே வளர்த்து, அதில் தன் சுயமரியாதை, சுய இச்சை எல்லாவற்றையும் கட்டிக்காத்து வாழப் பழகினாள். இந்தக் கட்டிக்காப்புக்கும் அவசியத்துக்கும் இடையில் நடைபெறும் போராட்டத்தில் அவனை வெறும் உரையாடல் துணையாக வைத்திருக்க விரும்பினாள். ஓர் உயிரின் தனித்த தேவைக்கும் தேடலுக்கும் முன்னால்,...

கண்ணனும் ராதாவும்: ஆசைப்பெருக்கு

ராதாவுக்கு கவிதைகளென்றால் அவ்வளவு பிடித்தம். ஒன்றைப் பிடிக்கிறதென்றால், அதை ஏன் பிடிக்கிறது என அவளுக்குள்ளேயே ஒரு கேள்வி கேட்டுக்கொள்வாள். ஆதலால், தனக்குப் பிடிக்கிற விஷயங்கள் மீது, அவளுக்கு ஓர் ஆழ்ந்த புரிதல் இருந்தது. அதனால் அவளால் ஒன்றில் தனித்து இலயிக்க முடிந்தது. அவளுடைய இந்த இலயிப்பையும் புரிதலையும், அவசர உலக மாந்தர்களால் உடைக்க முடியாமல் போகிறபொழுது, ஒருவித எரிச்சலையும், கோபத்தையும், அவள் மீது வளர்த்துக்கொண்டார்கள். அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. கவிதையென்பது, ஓர் உயிர் தன்னுள் தான் மூழ்கி, தன் உயிரின் வடிவங்களில் ஓர் அழகினையும், ஒழுங்கினையும் கண்டு தெளிந்து, அதை மொழியில் வார்த்து, மீண்டும் விழுங்கிக்கொள்ளும் வளமான செயலென்று கருதுவாள். கவிதைக்கு, வடிவம் ஒன்று இல்லையென்றும், மனதில் ஆசைப்பெருக்கம் செய்யும் அத்துணை அழகையும் கவிதையென்றும் நம்பினாள். அவளுக்கு அவை, பண்டைய மொழிபோல, படவெழுத்துக்களால் ஆனவையாக இருந்தால் மேலும் மகிழ்ச்சி. அந்தப் படவெழுத்துக்களால் கண்ணன் அவளைப் புனையும் பொழுதெல்லாம், கண்களை மூடிக்கொண்டு அந்தக் காட்சியாகிக் கரைந்து போவாள். இப்படி அவள், எதில்...

எங்கே எனது கவிதை - மிருதங்கம்

விரல்களால் இடையிடுதல், இடையிட்டு உந்தல், உருட்டல், அஞ்சுகையில் அள்ளல், ஆராய்தல், ஆராய்ந்ததை மீறல், மீறியதைப் பெருக்கிப் புது இராகம் பிடித்தல், விவரித்தல், விவரித்ததை மேலும் தெளிவித்து வருடல், வருடியதை அள்ளல், அள்ளியதைச் செவிகுளிர அருளல் எல்லாம் மிருதங்கத்தின் செயல்கள். செவியில் விழும் இந்த மிருதங்கத்தின் கோதுதலை, அத்துணை அழகாய் இந்தப் பாடலில் கேட்கலாம். பாடலின் ஆரம்பத்தில் ஒலிக்கும் தவில் ஓசை, சித்ராவின் பல்லவிக் குரல், முதலாவது இடையிசை எ ல்லாம் முடிந்த கையோடு வருகிற முதலாவது சரணத்தில், "மையல் கொண்டு மலர் வாடுதே" எனும் வரிகள் முடியும்பொழுது மிருதங்கம் பாடலை உயிர்ப்பிக்க ஆரம்பிக்கும். அழகிய திருமுகம் - ஒரு தரம் பார்த்தால்   அமைதியில் - நிறைந்திருப்பேன் இந்த வரிகளில், மிருதங்கம் இடையிட்டு உந்தும் அழகிருக்கும். இசையின் இடைவெளிகள் வரிகளுக்கு இடங்கொடுக்கும்அழகிருக்கும். இரண்டும் சேர்ந்து நல் அகம் பாடும் அழகிருக்கும். எல்லா இசையையும் விட்டுவிட்டு, மிருதங்கத்தை மட்டும் கவனித்திருந்தால், வரிகளும் மிருதங்கமும் செய்யும் ஆலிங்கனத்தை இரசிக்கலாம். மொத்த உற்சவத்தில் அது ஒர...

முகிலென மகிழுவன்

மழைநாட் காலைகளில், வீட்டின் கதவுச் சட்டத்துக்கென்று ஓர் அழகு வரும். மழையை அளவாய் அடக்கிக்கொண்டு காட்டும்போது, எதுவும் அழகுதானே! இதை நினைத்தே, யாரோ செதுக்கியதுபோல, அற்புதமான செவ்வக மரவேலைப்பாடு. அதன் விளிம்பில் நின்றபடி, நீரின் நூலினால் நெய்த கண்ணாடித் துமிகளின் முன்னால், தன் தோளினை நிதானமாய்ச் சாய்த்துக்கொள்ள அவளுக்குப் பிடிக்கும். சாய்ந்தவள், ஒரு பாதத்தின் சாய்வின் மீது, மறுபாதம் வைத்துக் கவவிக்கொண்டு, என் பார்வையின் பள்ளத்தில் கருப்பஞ்சாறு ஊற்றினாள். இடைவெளிக்கும் தீண்டலுக்கும் நடுவில் நின்று, 'உன்னை விரைந்துவந்து வரைபவன் என்ன செய்வன்' என்று வினவினேன். தமிழை நிறுத்தி, 'வெறும் மழையைச் சேர்ந்து ரசிப்பவன் என்றும், கூடச் சேர்ந்து நனைபவன் என்றும் கருதிதியோ?' என நகைத்தேன். ' 'தூவானத்  துமி பட்டுத் துளிர்த்த நெஞ்சின் வியர்ப்பினை, மழையின் நீர்த்தாரை அள்ளித் துடைப்பதுபோல் பாவித்து, என்னை நனைத்து மன்றாடி மகிழுவன். அது அவன் கவிச்செயல்' எனத் தலை சாய்த்தாள். கவவவுகவெனத் தமிழ் ஓசையுடன் பொழிந்தது காதல் மழை.