Skip to main content

Posts

Showing posts from August, 2014

பிரிவோம் சந்திப்போம் : ஆனந்தத் தாண்டவம்

அவ்வப்போது ஆனந்தத்தாண்டவம் படத்தைப் பார்த்து யாராவது சமூக இணையத்தளங்களில் சிலாகித்துக்கொள்வார்கள். அப்போதெல்லாம் எனக்கு சுஜாதா எழுதிய 'பிரிவோம் சந்திப்போம்' நாவல்தான் நினைவுக்கு வரும். என்னைப்பொறுத்தவரை அந்தத் திரைப்படம் நாவலைப் பூர்த்தி செய்யவில்லை என்றே சொல்வேன். உண்மையிலேயே தமிழ்த் திரைப்பட உலகில்  நாவல்களைத் திருப்தி செய்த படமென்று ஒருசிலவற்றைத் தான் குறிப்பிடலாம். அதற்குக் காரணம், நாவலில் இருந்த ஆழமான தன்மை திரைபப்டங்கள்ல இருக்காது.  'இங்கு எல்லாமே மிகைப்படுத்தல்கள் தான்' என நாவலில் ஒரு வசனம் வரும். அது எவ்வளவு பெரிய உண்மை என்பது நான் சந்தித்த, எதிர்கொள்கிற மனிதர்களைப் பார்த்துப் புரிந்துகொண்டேன். மிகைப்படுத்தல்களை கண்மூடித்தனமாக நம்புகிற சமூகமாக மாறி வருகிறது. இவர்களாகவே காதலுக்கென்று ஒரு தியரி அமைத்துக்கொண்டு, எதிர்கால உலகினை  இப்படித்தான் அமைத்துகொள்வார்கள், வாழ்வார்கள்  என சுஜாதா எண்பதுகளிலேயே எழுதிய நாவல் இது. "ரகுபதி ஒரு இஞ்ச் உயரத்தில் மிதந்து சென்று வீட்டுக்கு வந்தான். மதுமிதாவைத் திறந்து மதுமிதாவை முகத்தில் இறைத்துக்கொண்டு, மதுமிதா போ

விடிந்தாலும் பெண்ணழகு!

திருமணமாகிக் கிட்டத்தட்ட நான்கரை நாட்கள் நகர்ந்திருக்கும். இன்றைய அதிகாலைப்பொழுதுவரை கணக்கில் எடுத்துக்கொண்டால் என் கணிப்புச் சரியாக இருக்கும். இருளும் ஒளியும் கலவி கொள்ளும் விடிந்தும் விடியாத பொழுது அது. காற்று அல்ல, என் தலையை அவள்தான் கோதுகிறாள். மூச்சுக்காற்று என்னவோ நெஞ்சில்த்தான் பட்டுப் படர்ந்துகொண்டிருந்தது. அதோடு அவள் விரல் வருடும் சுகமும் பிடித்திருந்தது. இன்னும் கொஞ்சம் வருடட்டுமே என்றுதான் மெதுவாகக் கண் விழித்தேன்.  நிமிர்ந்து, என் கண்களைப் பார்த்துப் புன்னகை செய்தாள். ஆமாம் உதடுகளில் புன்னகையைச் செய்துகொண்டாள். இந்த முறை உதடு மட்டும்தான் சிரிப்புக்குரிய அறிகுறிகளைக் காட்டியதே தவிர, கண்கள் சிரிக்கவில்லை. சிரிக்கும்போது  அவள் கண்கள் ஒரு குட்டி ஹைக்கூ போல இருக்கும்.  இந்தமுறை அந்தக் கண்கள் 'என்னை ஆச்சரியப்படுத்து' எனக் கேட்பதுபோல இருந்தது. அந்தக் கண்கள் இப்படித்தான் புதுமை செய்து என்னை அடிக்கடி ஆச்சரியப்படுத்தும். சற்றும் எதிர்பார்க்காதபோது, ' விடியும் வரை பெண்ணழகு' என்றாரே உங்க கவிஞரு என்று கேட்டாள். அதுவும் இந்த நேரம் இந்தக் கேள்வியை நான் எதிர்பார்த்த