இரண்டாம் உலகம் திரைப்படம், Multiverse theory, Membrane theory போன்றவற்றை அடிப்படையாக் கொண்ட திரைப்படம். படத்தில், தியரி பற்றி பெரிய அறிமுகம் ஏதும் கொடுக்கப்படவில்லை. Michio kaku மற்றும் ஐங்ஸ்டைன் சொல்லிய கோட்பாட்டை டைட்டிலில் எளிமையாகப் போட்டார்கள். முக்கியமாக ஐங்ஸ்டைன் முடிக்காமல்( Theory of everything ) விட்டுப்போன கோட்பாடுகளில் ஒன்று. அதில் ஆர்வம் கொண்ட Michio kaku பின்னர் தானும் ஆய்வில் இறங்கினார். நம்மைப் போலவே நிறைய உலகங்கள் இருக்கின்றன, அதில் நம்மைப் போலவே பலர் இருப்பார்கள் என்கிற தியரி. உதாரணமாக, நீங்கள் இதை ஆர்வமாகப் படித்துக்கொண்டிருக்கிறீர்கள், நீங்களே வேறொரு உலகில் இருந்து திபெத்திய போராட்டம் பற்றி வாசித்துக்கொண்டிருக்கலாம். இன்னொரு உலகில், இணையமே இன்னமும் அறிமுகமாகாமல் இருக்கலாம். இன்னமும் நிறைய சாத்தியக்கூறுகள் இருக்கிறது.அங்கிருப்பவர்கள் தமிழை மொழியாகக் கொண்டவர்களாகவும் இருக்கலாம். அங்கு இயற்பியல் விதிகள் வேறுமாதிரியாகவும் இருக்கலாம். நம்மைப் போன்றவர்களை, அவர்களின் உலகை பார்க்க முடியாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது. சூரிய குடும்பத்தில் பூமி இருப்பது போல