Skip to main content

Posts

Showing posts from January, 2016

தினமும் 25 பக்கங்கள்!

புதிய வருடம் பிறந்திருக்கிறது. காலத்தை மீட்டிப் பார்ப்பதைப் போலவே, புதிய வருடத்துக்குரிய இலக்குகளை நிர்ணயிப்பதிலும் ஒருவித  புத்தின்பம் கிடைத்துவிடுகிறது. சென்ற ஆண்டின் இலக்குகளைச் சரிவர நிறைவேற்றினோமா, இல்லையா என்பது வேறு பிரச்சனை. ஆனால், புதிதாகச் சில இலக்குகளை நிர்ணயித்துக்கொள்வதே மனதிற்கு உற்சாகம் தரக்கூடியது. நற்றிணையில் "வினை முடித்தன்ன இனியோள்" என்று ஒரு வரி வருகிறது. ஒரு வினையை முடித்த பின்னர் கிடைக்கிற அக மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உங்களுடைய இலக்குகள் என்னவாக இருக்கும்! புதிய வருடத்தில், புத்தகம் வாசிக்க ஆரம்பிக்கவேண்டும் என்பது சிலரது இலக்காக இருக்கலாம். மனத்தடையின் காரணமாக அதனை நிறைவேற்ற முடியாமல் போகலாம். இதிலிருந்து எப்படி வெளிவருவது என,  டைம்ஸில் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. 'Farnam street' என்கிற தளத்தில் வெளியான கட்டுரையை எடுத்துப் போட்டிருந்தார்கள். பிரபலமானவர்களின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் ரகசியங்களை, 'ஷேன் பரிஷ்' என்பவர் தொடர்ந்து எழுதி வருகிறார். அதில் புத்தக வாசிப்பினைத் தொடருவதற்கு எளிமையான உத்தி ஒன்றினை எழுதியிருக்கிறார

அற்சிரம் - பனிக்காலம் 1

திகதிகளைக் கொண்டாடும் மனிதர்களைவிட, இயற்கை எழிலோடு காலநிலை மாற்றத்தைக் கொண்டாடிய பண்டைத் தமிழர்களின் வாழ்வினை, இப்பொழுது கவனித்தாலும்  தித்திக்கிறது. இயற்கை எழில், அறவாழ்வு, காதல், வீரம் என்று பழந்தமிழர்களின் வாழ்வினைக் காட்டிச் செல்லும் பாடல்கள் ஏராளம். அதிலும், தலைவியினதும் தலைவனினதும் பிரிவாற்றாமையை எடுத்துக்கூறும் பாடல்களில்  எல்லாம் காதல் உணர்வோடு காலமும் இழைந்திருக்கும்.  கூதிர்காலத்தைத் தொடர்ந்து வரும் முன்பனிக்காலம் ஆரம்பித்திருக்கிறது. மார்கழி, தை மாதங்களை உள்ளடக்கி, 'முன்பனிக்காலம்' என்று சொன்னார்கள். பனிக்காலத்தினைக்  குறிக்கும் 'அற்சிரம்' எனும் சொல் இப்பொழுது வழக்கில் இல்லை. 'அல்' என்றால் இரவு என்றும், 'சிரத்தல்' என்றால் அழித்தல் அல்லது நீக்குதல் என்றும் பொருள்படும்.  இரவின் குளிரை நீக்கிப் பகலிலும் பனிக்காற்று போட்டிக்கு வீசும் காலம்.  பொருள் ஈட்டும் பொருட்டு பிரிந்துசென்றுவிட்ட தலைவன், பனிக்காலத்தில் திரும்புவான் என்று காத்திருக்கும் தலைவியின் காமத்தையும், அது தரும் துயரையும்  நயத்தோடு விளக்கும் பாடல்கள் ஏராளம்.  தலைவன் பிரிந்து