அன்றொரு நாள் என் கனவில் உரையாடலின் பிறழ்வில் அவள் தன் சேலைத் தலைப்பினை தோள்களால் வாரிக்கொண்டு மார்பை மறைத்து மேனியால் சிரித்ததில் நெற்றி வரிகள் கொஞ்சம் நெறி தவறி அசைந்ததில் பிழம்புக் குங்குமங்கள் பூப்போல உதிர்ந்துவிட்டன. அங்ஙனமே வெள்ளைச் சேலை நதியாகி அலையடித்ததில் தென்றல் விளையாடித் தோற்றதில் அவள் பெண்ணழகு மட்டும் வெற்றிகொண்டு கிடந்த அழகினை நான் எப்படிச் சொல்லி மகிழ்வேன்!