Skip to main content

Posts

Showing posts from May, 2010

மரணத்தின் பின்னரான வாழ்க்கை - கனவு -கடவுள் - மர்மம்

மனிதன் எந்த மர்மத்தை கண்டு பிடித்தாலும் இறந்த பின்னரான மர்மத்தை தான் இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறான் . புரியாத பல புதிர்களையும்  கேள்விகளையும் , குழப்பங்களையும் சுமந்து நிற்கிறது . இந்த குழப்பங்களில் வாழ்கிறது கடவுள் நம்பிக்கை. விஞ்ஞானத்தால் எட்ட முடியாத இடம் அது , இருந்தாலும் அதனை அணுகும் முறையில் முன்னேறுகிறது மனோதத்துவமும் விஞ்ஞானமும்  .  மரணத்தை தொட்டுவிட்டு வந்தவர்கள் சிலர் இன்னமும் உயிர் வாழ்கிறார்கள் அதில் பலர் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம் . தமது கண்கள் மூடும் முன்னர் தமது வாழ்வு , தமது சூழல் அனைத்தும்   ஒளியால் நிரம்பி இருந்தது எனவும்  ஒரு வித அமைதி நிலை காணப்பட்டது எனவும் கூறியுள்ளனர் உயிர் பிழைத்து வந்தவர்கள். அமானுஷ்ய விடயங்கள் பல மரணத்தின் விளிம்பில் இருக்கும் போது நடைபெறும் . மரணத்திற்கு அருகாமையில் சென்று வருவது என்றால் என்ன ? அது  என்ன அமானுஷ்யமா ? ஏதாவது சக்தியா ? அல்லது மூளையின் திடீர் மாற்றங்களா ? என பல கேள்விகள் எழுந்தாலும் விஞ்ஞானம், சமய நம்பிக்கை , அறிவியல் எனும் பார்வையில்  கொஞ்சம் பார்க்கலாம் என எண்ணுகிறேன் . மரணத்திற்கு பின்னரான வாழ்க்கை பற்றி கிறிஸ்துவு

விமான விபத்திலிருந்து எப்படி தப்பலாம்..?

உலக உயிர்கள் எதனால் வாழ்கிறதோ தோன்றியதோ ,ஆனால் அனைத்தும் தக்கென பிழைத்தல் எனும் அடிப்படை தியரியை வைத்து தான் தோன்றின . தம்மை பாதுகாத்துக்கொள்ள , எச்சரிக்கையாக இருக்க தெரிந்த உயிர்கள் பிழைக்கும் வாய்ப்புகள் அதிகம் . அண்மையில் நடந்த மேன்களூர் விமான விபத்தில் பல உயிர்களை தீ விழுங்கியது . அதில் அந்த விமானத்தை தவறவிட்டவர்களுடன் மொத்தம் 15 பேர் உயிர் தப்பினர் . உயிர்களின் பெறுமதி மதிப்பில்லை . அதில் ஒரு அறுபது பேராவது தப்பியிருந்தாலும் மகிழ்ச்சி தான் . நம் அரசியல்வாதிகள் அதிகாரிகளின் நோக்கம் முழுக்க யார் மீது யார் பழியை போட்டு பிழைக்கலாம் என்பதே .அது தான் இப்போதும் நடக்கிறது . அதனால் பயன் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை . இனி எவ்வாறு இவ்வாறான விபத்துகளை எதிர் கொள்கிறோம் என்பதே முக்கியம் . இது குறித்து எவராலும் விழிப்புணர்வு நடவடிக்கை கொண்டு செல்லப்பட்டதாக காணவில்லை . விமானப்பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அவசியம். 1 .2 மிலியன் விமானங்களுக்கு ஒன்று என விபத்து நடந்தாலும் எச்சரிக்கை மிகவும் முக்கியம் . இதுவரை நடந்த அகோர விமான விமான விபத்துக்களில் இருந்து 56 % ஆன உயிர்கள் காப்பற்றப்பட்டிருக

இறந்த பின்னரான வாழ்க்கை - மம்மிபிகேஷன்

மம்மிகள் நாம் சினிமாவில் பார்த்ததோடு சரி . அவர்களின் இறந்த பின்னரான வாழ்க்கை பற்றிய நம்பிக்கை பற்றியோ  அவர்களின் ரகசியம் பற்றியோ அறிந்ததில்லை . மம்மிகள் சீனா மம்மிகள் , அரசியல் வாதி மம்மிகள் , குரு மம்மிகள், மிருக மம்மிகள் , உரிந்த மம்மிகள் , காய்ந்த மம்மிகள் என எத்தனையோ வகை . அவற்றையும் இறந்த பின் வாழ்க்கையையும் , பிரமிட்டையும் அவர்களின் முறைகளையும் பார்ப்போம் . உலகத்தில் எத்தனை கண்டுபிடிப்புகள் வந்தாலும் பெரும்பாலான விடயங்கள் எகிப்த்தியர்களின் வழிகாட்டலிலேயே தோன்றியுள்ளது . ஏன் இப்போது உலகில்  உள்ள இரு பெரிய மதங்களும் அவற்றின் கதைகளும் எகிப்தியர்களிடம் இருந்து எடுக்கப்பட்டவை என்றும் கூறலாம் .அதன் காரணம் எகிப்தியர்கள் அனைத்து  விடயங்களையும் தமது கல் வெட்டுகளில் பொறித்து விட்டு  சென்றமை . எகிப்த்தியர்களின் (கி மு (4650 - 3050 ))  கல் வெட்டுகளில் அவர்களின் பொருளாதாரம் , விஞ்ஞானம், கணிதம் , போக்குவரத்து என அனைத்தும்  குறிக்கப்பட்டுள்ளது . இவை அனைத்தையும்  பொறித்து விட்டுசென்றவர்கள் அவர்களின் இறந்த பின்னரான வாழ்க்கை பற்றியோ அல்லது அவர்கள் இறந்த உடல்கள் பாதுகாத்தல் தொடர்பையோ எந்த கு

ஏலியன்ஸ் - பிரபஞ்ச தேடல் 2

எனது அடுத்த பதிவு :- ஒன்று ஏன் ஒன்று இரண்டு ஏன் இரண்டு ???  கிளிக்      முன்னைய பதிவில் நூறு பில்லியன் பால்வீதி உள்ள  இந்த அண்டத்தில் நம்மைப்போல ஒரு சூரிய குடும்பமோ அல்லது எமது பூமி போலவே ஒரு பூமி இருப்பதற்கோ  எவளவோ சாத்தியங்கள் உண்டு என பார்த்தோம் . எமது பூமியில் உயிர்கள் எதிர்பாராத ஒன்றாகவே உருவாகியது என பார்த்தோம் . மற்றும் அடிப்படை மூலக்கூறுகள் எரி கற்கள் மூலம் எங்கிருந்து எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லப்படலாம் எனவும் பார்த்தோம்  . போதுய ஓட்டுகள் இல்லாததால் அந்த பதிவு அனைவரையும் சென்றடையவில்லை . முதல்   பதிவை வாசிக்க :--  ஏலியன்ஸ்  பாகம்  1 ================================================================================== அவ்வாறு  எதிர்பாராத விதமாக எமது உலகில் தோன்றிய உயிர்கள் நாமாக இருந்தாலும் அனைத்திற்க்கும் ஒரே தியரி தான் . அது தான் தக்கன  பிழைத்தல் . எத்தனையோ உயிர் பிணைப்புகள் வந்தாலும் சூழலுக்கு  ஒத்துப்போகக்கூடிய உயிர்கள் தான் நிலைத்திருக்கின்றன . இவ்வாறு வந்த உயிரினங்களுக்கு  சக்தி (உணவு) தேவைப்பட்டது . அப்போது தொடங்கியது தான் தேடலும் உயிரினங்களின் பரம்பலும் . இதற

12 B திரைப்படமும் பார்க்காத உலகமும்

குப்பைகளுக்குள் முத்து போல வந்த சில அருமையான தமிழ் திரைப்படங்கள் , கிட்டத்தட்ட நாம் வாழ்க்கையில் அன்றாடம் எதிர்கொள்ளும்  சில  தியரிகளை வைத்து வந்த படங்கள் சரியான விளக்கமின்மை காரணமாக பெரிதாக பேசப்படவில்லை . அவ்வாறான படங்களில் தசாவதாரம்( வண்ணத்து பூச்சி விளைவு ) , அதாவது இந்த உலகில் நடக்கும் ஒவ்வொரு விடயங்களுக்கும் இடையில் ஒரு தொடர்புண்டு, ஒரு சிறிய மாற்றம் பெரியதொரு விளைவை கொண்டு வரும் என்கிறது அந்த தியரி .கயோஸ் தியரியை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது . ஒரு வண்ணத்து பூச்சியின் இறக்கையின் படபடப்பு ஒரு பெரிய சூறாவளியையே உருவாக்கலாம் என்கிறது கயோஸ்  தியரி .   இன்னொரு அருமையான பேசப்படாத படம் தான் 12 B . அநேகருக்கு படம் விளங்கியிருக்க வாய்ப்பில்லை . போதிய விளக்கமின்மை காரணமாக இருக்கலாம் . விளக்கம் போதாது என்றும் கூற முடியாது . ஒரு படத்தில் வெறுமனே தியரியை விளங்கப்படுத்திக்கொண்டு இருக்க முடியாது .ஒரு வேளை நம்மவர்கள் ( பெரும்பாலான சதவீதம் ) இன்னும் அந்த நிலையை அடையவில்லையோ என்னவோ . அநேகரின் கருத்து விமர்சனங்கள் கூட அந்த படம் நேரத்தின் முக்கியத்துவம் கூறுவதாக மாத்திரம் அமைகிறது என நினைக

ஏரியா 51

சுற்றி சுற்றி பார்த்தா எப்பிடியும் ஏலியன்ஸ் க்கும்  எல்லாத்துக்கும் தொடர்பு எப்படியோ வருகிறது .  படித்தவற்றை தொகுத்தவற்றை இங்கே தொகுக்கிறேன் . ஏலியன்ஸ் இருக்கிறதா இல்லையா என்பது பற்றிய வாதங்கள் நடந்துகொண்டிருக்கிறது . ஏலியன்ஸ் யாரும் நேரே பார்க்கவில்லை ஆனால் பறக்கும் தட்டு ? வீடியோக்களில் கூட கண்டு விட்டோம் .  ((UFO ) Unidentified flying object ) என அழைக்கப்படுகிறது. அதாவது கண்டுகொள்ளப்படாத பறக்கும் பொருள் . அது எங்கிருந்து வருகிறது ? உண்மையில் ஏலியன்ஸ் எனும்வேற்றுக்கிரக வாசிகளுடையதா ? கற்பனைக்கு  எட்ட முடியாத உலகின் தொழில்நுட்பம் நிறைந்த மிக மிக ரகசியமான ஒருவரும் போக முடியாத இடம் தான் ஏரியா 51 . 1990 வரை அமெரிக்க அரசு இப்படியொரு இடம் இருப்பதையே மறைத்து வந்தது .  மிக பெரிய ரகசிய இராணுவத்தளம் . இது லெஸ் வேகஸ்( அமெரிக்காவின் லொஸ் என்ஜெல்சில் இருந்து 250 மயில்கள்  ) நகரத்திலிருந்து சுமார் 100 மயில்களுக்குள் அமைந்துள்ளது . இந்த இடத்தின் மேலே ஒரு விமானம் கூட பறக்க முடியாது . இன்று வரை யாரும் அங்கு சென்றது கிடையாது .   1955 ,1960  களில் உருவாக்கப்பட்ட இந்த தளம் முன்னர் (NTC ) என அழைக்க