ஏன்? எதற்கு ? என்ற கேள்விகள் எழும் போது தான் மனித அறிவும் மூட நம்பிக்கைகள் பலவற்றிலிருந்தும் விடுபடும் . ஏன் ஆப்பிள் மேலே போகாமல் கீழே வருகிறது என நியூட்டன் மனதிற்குள் கேட்ட கேள்விகள் தான் அன்று புவியீர்ப்பு விசை என்று இருப்பதை உலகிற்கு உணர்த்தியது . பல அடிப்படை கேள்விகள் மனித மனகளுக்குள் இருந்து வருவதே இல்லை ..அவற்றில் ஒன்று தான் இது . ஏன் வானம் நீலம் ? இதுவரை காலமும் இறைவன் வானையும் மண்ணையும் படைத்தான் என்றனர். மண் இருக்கிறது ஆனால் வானம் என்று ஒன்றே இல்லை என்பது சிலர் சிந்தனைகளுக்கு மட்டும் தான் எட்டிய விடயம் .. அது பற்றி கொஞ்சம் பார்ப்போம் . சூரியனில் இருந்தோ அல்லது மின்குமிழில் இருந்தோ வரும் ஒளி வெள்ளை நிறமாக இருக்கும் ஆனால் பல நிறங்களை உள்ளடக்கியது .இதனை வானவில்லில் அவதானிக்கலாம் . வாயுமண்டலத்தில் ( ATMOSPHERE ) கூடுதலான சதவிகிதம் (78 % நைற்றஜென்,21 % ஒக்சிஜென்) வாயுக்களும் மிகுதி நீராவியும் மாசுத்துணிக்கைகளும் உண்டு . அவற்றினூடே ஒளி பூமியை வந்தடைகிறது . ஒளி அலைகள் வேறுபட்ட அலைநீளத்தை உடையவை . சிவப்பு நிறம் கூடிய அலை நீளம் கொண்டது. நீல நிறம் குறைந்த அலைநீளம் உடைய