Netflix இல் டிசம்பர் 17 வெளியான 'Decoupled' தொடர், எனக்கு மிகமிக சுவாரசியமான ஓர் அனுபவமாக அமைந்தது. இது எல்லோருக்குமான தொடர் இல்லை. எல்லோருக்கும் சரியாகப் புரியவேண்டும் என்பதோ பிடிக்கவேண்டும் என்பதோ இல்லை. எனக்குத் தனிப்பட மிகமிகப் பிடித்திருந்தது. பார்க்கும் நிமிடங்கள் சுவாரசியமாகக் கரைந்தது. வசனங்களில் புத்திசாலித்தனத்துடனான நகைச்சுவை கலந்திருக்கிறது. Witty, Intellectual, சமூகத்தைப் பற்றியும் மனிதர்களின் நடத்தையைப் பற்றியும் அங்கங்கே வாள் போல ஆழமாய்க் கீறி அதை நகைச்சுவையால் மிகத் திறமையாகத் தழுவி மருந்திட்டிருக்கிறார்கள். மிகவும் இலேசான கதையோட்டத்துக்குள் நிறையக் கொண்டு வந்திருக்கிறார்கள். காதலித்து, சில வருடங்கள் இணைந்திருந்து பிரிதலுக்குத் தயாராகும் ஓர் எழுத்தாளருக்கும், பிஸினஸில் ஈடுபடும் பெண்ணுக்குமிடையிலான உறவினை அடிப்படையாகக் கொண்டு கதை நகர்கிறது. இதில் எல்லாவற்றையும் critical thinking ஊடாக அணுகி, எல்லா நேரமும் பெரும்பான்மைச் சமூகத்தின் சிந்தனைக்கு ஏற்றபடி தன்னை அமைத்துக்கொள்ளாத ஓர் எழுத்தாளருக்கு அவளால் தொடர்ந்து துணையாக இருக்கமுடியவில்லை. ஆனால், இருவரும் பிரிதலைப் பற்