நீண்ட நாட்களுக்கு முதல் எண்ணங்களில் மெல்லிய வண்ணங்களை தீட்டிய ஒரு பாடல். இந்தப் பாடலை ஒவ்வொரு முறை கேட்க்கும் போதும் ஏதோ ஒன்றை இரசித்துக்கொண்டே இருக்க முடிகிறது. பின்னணி இசை , காட்சியமைப்பு ,வரிகளில் விரகதாபமும் மௌனமும் கலந்திருக்கிறது. உணர்வுகளை சரியாகக் கோர்த்து உருவாக்கப்படும் படைப்புகள் மனதை கொஞ்சம் கனமாக்கிப் பின் காற்றில் ஆடும் ஒரு இறகு போல் ஆக்கிவிட்டே செல்லும். அந்த விதி இந்தப் பாடலுக்கு பொருந்தும். பாடல் வரிகளில் இன்னொரு தனித்துவம் படர்ந்திருக்கிறது. அந்த வரிகளுக்குத் தன் இனிய குரலால் அழகு சேர்த்தது பாடகி சௌமியா. அந்தக் குரலில் இருக்கும் ஏக்கம் , வேதனை சில வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. கார்த்திக் ராஜாவின் பாடகித் தேர்வு சிறப்பு. காதலனை /கணவனை நண்பனாக நினைத்துப் பாடுவது போன்ற வரிகள்.இலக்கியங்களில் தோழி என்பது போல , இந்தப் பாடலில் நண்பனாக நினைத்துப் பாடுவது ஒரு தனி அழகு. // கோபங்கள் பேசும்போது வேதனை கூடும் ப்ரேமைகள் பேசும் போது மோகம் கூடும் // வடமொழிச் சொற்களும் தமிழும் கலந்து வரும் வரிகள். வரிகளின் ஆழ...