எவருக்காகவும் கடவுளை பிரார்த்திக்காதீர்கள் .முடிந்தளவு கடவுளாக இருங்கள் அனைவருக்கும் .. மனிதனின் அடிப்படைத்தேவைகளில் உறையுளை இழந்து ,முதல் நாள் உண்ட உணவையும் ,உடுத்த உடையையும் மட்டுமே மூலதனமாக கொண்டு இடம்பெயரும் அகதிகளின் தினம் நாளை . இன்னொருவருடைய துயரை அறிய நான் அப்படி இருந்தால் என ஒரு சுயசரிதையை எம் மனதுக்குள் நாமே எழுதிக்கொள்வது நல்லது . எம்மால் என்ன செய்ய முடியும் ?- ஒருவரால் மாற்ற முடியும் ... இந்த முறை அகதிகள் தினத்துக்காக(ஜூன் 20 ) ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் தாபனம் தனது இணையத்தளத்தில் "ஒன்று செய்யுங்கள் " என்ற தொனிப்பொருளில் தனது தளத்தை நேர்த்தியாக வடிவமைத்துள்ளது . Click here இந்த தளத்தில் Learn ,Spread the world ,Give என்று மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது . வீடியோ பார்க்க Learn பகுதியில் அகதிகள் படும் துயரங்களையும் ,அவர்களாகவே எம்மை உணர்ந்து அவர்களின் துயரங்களையும் உணரும் வகையிலும் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது . 1 . அகதிகளின் உணர்வுகளை கேட்டல் 2 .உங்களால் போர் சூழலில் இருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டிய