உயிரே படத்தில் நெஞ்சினிலே பாடலில் மலையாளம் கலந்து வருவது இனிமை தருவது போல, ஆரம்பத்தில் இருந்து தனித்து,பின் பிற வாத்தியங்களோடு இணைந்து ஒலிக்கும் மோர்சிங் இசை இனிமை. இந்த மூர்சிங்(ஆபிரிக்க வாத்தியம்) இசை பற்றி சுஜாதா பகிர்ந்திருக்கிறார் . இதை ரஹ்மான் அவ்வப்போது திறமையாகப் பயன்படுத்துவார் என்கிறார். கேட்பதற்கு 'டொன்ட்டி டொன்ட்டி' என்று சுவர்ப்பூச்சி போலத்தான் ஒலிக்கும். இந்த மூர்சிங் இசையை உற்றுக் கவனித்தால் தான் லய வின்னியாசங்கள் புரியுமாம். இதனை வாசிப்பது கடினமாம். உள்ளுக்குள்ளே கொன்னக்கோல் போல அந்தத் தாளத்தை சொல்லிக்கொண்டு வரவேண்டுமாம். வாசித்த பின் கேட்டுப்பார்த்தேன். இயற்கை ஒலிகளோடு ஆரம்பமாகும் மூர்சிங் ஏதோ புரிகிறது.