child prodigy பற்றிய தேடலில் பல அறியக்கிடைத்தது . குறைந்த வயதிலேயே சாதனை படைத்தார், குறைந்த வயதிலேயே பட்டம் பெற்றார் வளர்ந்தவர்களே சித்தியடைய கடினப்படும் பரீட்ச்சையில் எல்லாம் சித்தி பெற்றார்கள்னு கேள்விப்படுவோம் இல்லையா ! இப்படிப்பட்டவர்களை தான் child prodigies என அழைக்கின்றனர் . சின்ன வயதிலேயே பெரியவர்களுக்குரிய அறிவை பெற்றவர்கள் தான் இவர்கள் . ஆனால் இதில் நாம் அதிகம் கேள்விப்பட்டது கணித மேதை ராமானுஜன் , இசை மேதை பீத்தோவன், மொசார்ட் பற்றி தான் . ஆனால் விக்கியில் பெரியதொரு வரிசை இருக்கிறது . Wiki ஆனால் இவர்களில் அண்மையில் அதிகம் அறியப்பட்டவர் அண்மையில் ஜனவரி 2012 இல் தன்னுடைய 16 வயதில் மூளை பாதிப்பு ஏற்பட்டு இறந்து போன அர்பா கரீம் . பாகிஸ்தானை சேர்ந்தவர் 9 வயதிலேயே மைக்ரோசொப்டின் MCP முடித்தவர் . இயல்பாகவே குழந்தைகள் திறமைசாலிகள் ஆனால் மேலதிக எதிர்பார்ப்பால் / அழுத்தங்கள் அவர்கள் மீது பிரயோகிக்கப்படும் போது அவர்கள் தொடர்ந்து சாதிக்க முடியாமல் போகிறது என்னும் கருத்து பல கட்டுரையாசிரியர்களால் முன் வைக்கப்படுகிறது . சின்ன வயதில் சாதிப்பவர்கள் பெரும்பாலானோ