அவளொரு நல்ல வாசகி. ஒரு மாலை மையலில், ஆடையின் நூலிழை யாவும் பொன்னிழையாகும் நேரத்தில், தன் தேகப் போர்வை மீது ஒரு புத்தகம் வைத்துப் படித்திருந்தாள். அதன் உச்சந்தலையை மார்போடு மூடி அணைத்து, அதன் வகிடு முகந்து, அதன் மூலைத் தாளில் ஏறி முனை திருகப் பார்த்திருந்தாள். திருக மனம் வரவில்லை. இதுவரை கடந்திட்ட பக்கங்களின் கனம் அது தாளவில்லை. அப்படியே அமர்ந்திருந்தாள்.
கருக்கல் பொழுது வந்து கதிரவனைக் கவ்வ, பொன் ஆர்ந்த மார்பினைப் பூரண நிலவின் புழுக்கம் விழுந்து கவ்வ, பூ ஆர்ந்த கூந்தலைத் தென்றல் மோதிக் கவ்வ, அண்ணாந்து பார்த்தால் அநியாயச் சின்னமாய் மின்னும் மதன நட்சத்திரங்கள்...
Comments