சில பதிவுகள் காணாமல் போவது போல சில படங்களும் காணாமல் போவதுண்டு .. அதற்க்கு காரணமில்லாமல் இல்லை .. 3 இடியட்ஸ் படம் போலவே ஒரு அருமையான படைப்பு தான் அமீர்கானின் தரே சமீன் பர் (Tare zameen par ). . குப்பைகளுக்கு நடுவே கமல் போலவே சிந்தனை உடைய படைப்பாளி அமீர் கான்.. இந்த படம் தமிழ் வடிவிலும் உள்ளது . இந்த படத்திற்கு விமர்சனம் எழுத எனக்கு தகுதியே இல்லை .. தயவு செய்து பார்க்காதவர்கள் பாருங்கள் . இந்த படம் மழலைகளின் வாழ்க்கை விதையிலேயே கிள்ளி எறியப்படுவதை உணர்த்துகிறது .. கல்வி முறையையும் அன்பையும் உணர்த்துகிறது .. இலங்கை இந்திய கல்வி முறைகளுக்கு விழுந்த செருப்படி இந்த படம் .. இந்த பாடல் தமிழில் கேட்க்கும் போதுமிக மிக கவர்ந்தது .. கேளுங்கள் .. வரிகள் நான் எழுதியதால் சிலவை தவறவிட்டிருப்பேன் .. பெற்றோர்கள் சமூகம் எவ்வாறு குழந்தைகளை புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறும் திரைப்படம் ... பார்க்க வேண்டிய காட்ச்சியும் பாடலும் ...காட்சி மாத்திரம் வேறு (காட்ச்சிக்கு நன்றி ) லோட் ஆகினால் யூ டியூபில் சென்று பார்க்கவும் http://www.youtube.com/watch?v=opNSFkcciFg யார் இந்த பாக்கள் ? வேரில்லா பூக்கள்