Skip to main content

Posts

Showing posts from January, 2013

பூ பூக்கும் மாசம் தை மாசம்..

நம்மை முழுதாய் ஆட்கொண்டு உணர்வுபூர்வமாக  புதியதொரு நிலைக்கு  அழைத்துச் செல்லும் பாடல்கள் என்று , ராஜா இசையில் அமைந்த ஏராளமான பாடல்களை குறிப்பிடலாம். ஆனால் பருவ நிலைகள் , காலநிலைகள் , இயற்கை  என  நம்மை அழைத்துச் சென்றுவிடும் பாடல்கள் தரும் சுகம் அலாதியானது. தென்றல் வந்து தீண்டும் போது பாடலை எப்படி வெறும் காதல் உணர்வு தூண்டும் பாடல் இது என கடந்து  போக முடியாதோ  அது போன்றதொரு பாடலே பூ பூக்கும் மாசம் தை மாசம். வருஷம் 16 படத்தில் அமைந்த பாடலை காலைப் பனி படர்ந்திருந்த வேளை கேட்பது தனி சுகம். தையை வரவேற்க்க தயாராக இருக்கும் இந்நேரத்தில் மனதை சிதறடித்து கரைத்துக் கொண்டு செல்லும் இதமான கீரவாணி இராகத்தில் அமைந்த பாடல் இது . பனி படர்ந்த சூழலை இசையே உருவாக்கிவிட அதை ஊடறுக்கும் தென்றல் போல் நுழைகிறது சுசிலாவின் தேன் குரல். கிராமிய சூழல் , மகிழ்ச்சி கலந்த சுதந்திரமான  காதல் நிலை, புதிய  பருவநிலையை  மகிழ்ச்சியுடன் வரவேற்பது என அனைத்தையும் ஒன்று சேர்த்து தரும் பாடல். அதற்கேற்றபடி  காட்சியமைப்பையும் மாற்றி மாற்றி அமைத்துள்ளது இயக்குனர் பாசிலின் சிறப்பு . இடையிசை  ,சுசிலா குரல் , பெண்கள்

பகிர்வுகள் - சுஜாதா - கலைச்சொற்கள் 1

தமிழ்மொழியை அடுத்த நிலைக்கு கொண்டுசெல்வது பற்றி எழுத்தாளர் சுஜாதா அவர்கள் பகிர்ந்துகொண்ட   ஆக்கபூர்வாமான செயற்திட்டங்கள் பல உண்டு. அவற்றில் அவர்  கலைச்சொற்களின் முக்கியத்துவம் பற்றி பகிர்ந்த சில விடயங்களை பகிர்கிறேன்.. 'களஞ்சியம்' இதழில் முனைவர் ப.அர நக்கீரன் கட்டுரைகள் போன்றவை நமக்கு அதிகம் தேவை. மாட்டு வண்டியின் பல உறுப்புகளை குறிப்பிடும் கலைச் சொற்களை ஆராய்ந்திருக்கிறார்.இந்தச் சொற்கள் பண்டிதர்கள் யாரும் உட்காராமல் இயல்பாக, தேவை ஏற்பட்டு அமைந்தவை. நுகத்தடி , பூட்டுத்துளை ,சுள்ளாணி ,முகமுட்டு ,பார்/பார்பட்டை கோணாவட்டம் ,மையக்கட்டை ,சக்கரம்,உழல்வாய் (குடத்தில் உள்ள உராய்வினால் தேய்ந்து விரிவடையாமல் இருக்கப் பயன்படும் இரும்பினால் ஆன குழாய் ) ,ஆரக்கால்,வட்டை ,இருசு,கடையாணி,கூசு,தொட்டிக்கூண்டு,சவாரிக் கூண்டு. எத்தனை வார்த்தைகள் ! நாம் இன்னும் மாட்டுவண்டி யுகத்திலே இருக்க விரும்புகிறாரா சுஜாதா ,என்று கடிதம் எழுத உடனே சில பேனாக்கள் திறக்கப்படும் சப்தம் கேட்கிறது. இந்த வார்த்தைகள் அனைத்தும் சக்கரங்கள் உள்ள Mechanical Engineering சாதனத்துக்கும் பயன்படுத்தலாம். ஆங்கிலக் கலைச்சொற்கள்