Skip to main content

Posts

Showing posts from September, 2010

குவாண்டம் சூசயிட்

பல்கலைக்கழக ஆய்வாளர் Max Tegmark  என்பவரால் இது 1997 இல் உலகின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது .ஒருவர்  துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்க்கொலை  தயாராக உள்ளார் .  துப்பாக்கி மணிக்கூட்டு திசைக்கு  எதிராக சுழன்றால் சுடாது , மணிக்கூடு திசையில் சுழன்றால் சுடும் . தற்கொலை செய்பவர் முதல் தரம் சுடுகிறார் துப்பாக்கி இடது பக்கம் சுழல்கிறது சுடவில்லை .இரண்டாவது தடவையும் சுடவில்லை .மூன்றாவது தடவையும் சுடவில்லை .  மீண்டும் ஆரம்பத்திற்கு சென்றால் , அதாவது தன்னை தானே சுட ஆரம்பிக்கும் முதல் :-  முதல் தடவை சுடும் போதே இறந்து விடுகிறார் . பொறுங்கள் .... . முதலில் இறக்கவில்லை , இரண்டாவது சந்தர்ப்பத்தில் ஆரம்பத்திலேயே இறந்து விடுகிறார் . அதெப்படி இரண்டும் சாத்தியம் ? அதாவது ஒவ்வொரு தடவை சுடும் போதும் உலகம் இரண்டாக பிரிகிறது . இது தான் நாம் எடுக்கும் தீர்மானங்களை ஒவ்வொரு நொடியும் நாமே தீர்மானிக்கிறோம் என்பது . ஒவ்வொரு முடிவும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை . அதாவது ஒருவர் உயிரோயல்லாத போது அவரின் பிரதி  உயிரோடு இருக்கலாம் .  இதை பற்றி ...

எந்திரன் - சரியாக போய் சேருமா ?

உயர் தொழில்நுட்பத்தில் ஒரு திரைப்படம் அதிக செலவில் எடுக்கப்படும் போது வர்த்தக ரீதியில் அதை வெற்றியடைய செய்யும் கட்டாயத்தில் தயாரிப்பாளர் இருக்க(அதில் தவறில்லை ) , ஷங்கர்  மீதான விமர்சனங்களும் ஒரு புறம் இருக்க , தமிழில் அறிவியல் திரைப்படம் எனும் கோணத்தில் பார்க்கும் போது அனைத்தையும் உடைத்துப்போட்டு விடுகிறது இத்திரைப்படம் . தமிழ் அறிவியல் எழுத்தில் எதிர்காலமாகவும் நிஜத்தில்  இறந்தகாலமாக திகழும்  என் இனிய எழுத்தாளர் சுஜாதாவின் கதை "என்  இனிய இயந்திரா" , எந்திரன் திரைப்படமாக  பரிணாம வளர்ச்சி அடைந்ததன் விளைவு  பட்டி தொட்டி எங்கும் குப்பன் ,சுப்பன் வரை எந்திரனையும் எந்திரன் பற்றிய அறிவியலையும் எடுத்துச்செல்லும் என்பதில் ஐயமில்லை .ஆனால் அந்த எந்திரன் ரஜனிகாந்தாக செல்லுமா அல்லது தொழிநுட்பப நிஜ எந்திரனாக அறிவியல்  சார்ந்து  செல்லுமா என்பதே இன்றைய கேள்வி . அறிவியல் திரைப்பட வெற்றிக்கு கோவில் படியில்  முட்டியால் நடந்து சென்ற ரசிகர்கள் .. சுஜாதாவின் என் இனிய இயந்திராவில் ஹீரோ என்று யாரும் கிடையாது . சிபி ,நிலா ...

இந்துக்களும் பிரபஞ்ச கொள்கையும் - முடிவிலிப்பக்கங்கள்

மதம் என்ற பெயரில் பதிவு எழுத ஆரம்பிக்கிறேன் என்றவுடன் எனது எண்ணங்கள் மதங்களை திருபுபடுத்திய/திருபுபடித்திக்கொண்டிருக்கும் , தவறான எண்ணக்கருவில் உள்ளவர்களை , இழிவானவர்களை நினைவு படுத்துவதால் பிரபஞ்ச கோட்பாடு அடிப்படையில் எழுத்துகளை பதிகிறேன் . மதங்களை உருவாக்கிய மனிதன் அதற்க்கு பெயரும் வைத்தான் என்று சொல்வதில் சந்தேகம் இல்லை . இந்து என்ற பெயரும் இதற்க்கு விதிவிலக்கல்ல ஆனால்  இந்து மதத்தின் உருவாக்கத்திற்கு எந்தவித கதைகளுமோ இல்லை .உரிமையாளரும் இல்லை . அது ஒரு விஞ்ஞான ரீதியாக முதலே விருத்தியடைந்த மனித இனம் .அதன் அடையாளம் . உதாரணத்திற்கு இந்தியா ஆரியபட்டாவின் (பூச்சியத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்  ) காலத்தில் உலக நாடுகளை விடவும் மிகச்சிறந்த அபிவிருத்தி அடைந்த  நாடாக இருந்ததாக உலக வரலாறுகள் கூறுகின்றன . இதன் வீழ்ச்சிக்கு காரணம் புரோகித சூழ்ச்சிகளும் , சில சமூகத்தவரின் தன்னலம் கருதிய நடவடிக்கைகளும் சமயத்தின் போக்கையே  மாற்றிவிட்டது .  வெறுமனே பணமும் ,காவடிகளும் ,திருவிழாக்களும் , பரிகாரமும் பூஜைகளுக்குளும் அடங்கி விட்டது . ...