Skip to main content

Posts

Showing posts from 2011

7 ஆம் அறிவு - நம்மை இங்கு நாம் தொலைத்தோம் ! தொலைப்போம் !

 ஒரு முறை சுஜாதா அவர்களிடம் ஒருவர் 7 ஆவது அறிவு என்னவாக இருக்கும் என கேட்டதற்கு தொழிநுட்பத்தை .ஊடகங்கங்களை பயன்படுத்தி செய்யப்படுவது என கூறினார் . உதாரணமாக மனிதன் உருவாக்கிய கணணி மனிதனை விட வேகமாக வேலைகள் செய்யும் . அதே போல இயற்கை ஊடகங்களை(சக்திகளை ) பயன்படுத்தும் திறன் சித்தர்களுக்கு இருந்திருக்கிறது .அதானால் தான் இந்த பெயராக இருக்க வேண்டும் . 7 ஆம் அறிவு திரைப்படம் பற்றி விமர்சனமாக இந்த பதிவை வைக்க போவதில்லை . சில விமர்சகர்கள் என்போரின் விமர்சனங்களுக்காக எழுதும் பதிவு . அதற்கு முதல் இப்போது இருக்கும் தமிழ் மேதைகள் கூட்டம் பற்றி ஒரு வித அறிமுகம் கொடுக்கிறேன் . இந்த மேதைகள் கூட்டத்தால் எந்த பயனும் இதுவரை காலமும் தமிழுக்கு, சைவத்துக்கு இருந்ததில்லை . எழுத்துலக பிரம்மாக்கள் என்பவர்கள் இலக்கிய சொட்ட சிறு கதையையும் ,கவிதைகளையும் இணையம் முழுக்க கொட்டி வைத்திருக்கிறார்கள் . கவிதைகளுக்கு ,கதைகளுக்கும்,முக்கியமாக சினிமாவுக்கும் இணையத்தில் பஞ்சமில்லை . ஒரு விஞ்ஞானம் பற்றிய விடயமோ ,அது பற்றிய ஆராய்ச்சிகளோ இணையத்தில் இல்லை .தமிழை,தமிழின் தொன்மைகளை விஞ்ஞான பார்வையில் தே

பாரதியை முழுமையாக படியுங்கள் !

பாரதி கண்ட புதுமைப்பெண்,பாரதியின் கனவு,பாரதியின் கவிதைகள் என மூச்சுக்கு ஒரு முறை பாரதி பற்றி பேசுகிறோம் .ஆனால் பெரும்பாலும் பாரதி கூறியதில் ஒரு பகுதியை தான் எடுத்துக்கொள்கிறோம் .அது எம் மனோநிலையின் வெளிப்பாடோ தெரியவில்லை .பாரதியின் நினைவு தினத்தில் ,அவன் எண்ணங்கள் இறக்காத தினத்தில் இதை பதிகிறேன் . பாரதியை ஒரு சாதாரண நுகர் பொருள் கலாச்சாரத்தில் சிக்கிய மனிதர்கள் வட்டத்துக்குள் சேர்க்க முடியாது .தன் குடும்பம் தன் வட்டம் என்று நினைக்காத "வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே" என்ற வரிகளே பாரதியின் எண்ணத்தின் உயர்வை சொல்லும் . நேரடியாக விடயத்திற்கு வருகிறேன் . எப்போதும் நாம் பாரதி கூறியதில் பாதியை தான் நினைவில் வைத்திருக்கிறோம் .சில கருத்துகளை அப்படியே எம் தன்மைக்கு ஏற்ப மாற்றியிருக்கிறோம் .பாரதி கண்ட புதுமை பெண்களை உதாரணமாக  சொல்லலாம் .  முக்கியமாக "மெல்லத் தமிழினிச் சாகும்" என்று நாம் வெறுமனே கூறுவதுண்டு .பாரதி கூறியது இப்படி சொல்ல கூடாது என்றே !  புத்தம் புதிய கலைகள்-பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்; மெத்

மங்காத்தா பாடல்களில் ரசித்தவை -இனிமையான வரிகளின் நினைவுகள்

அண்மையில் வெளியான மங்காத்தா பாடல்களில் மென்மையான பாடல்கள் இரண்டு ரசிக்க கூடியதாக இருந்தது . ஒன்று என் நண்பனே ,மற்றொன்று கண்ணாடி நீ கண் ஜாடை நான் . "என் நண்பனே" பாடலின் வரிகளுக்கு கவிஞர் வாலி பலம் ,பாடலுக்கு யுவனின் குரல் பலம் . கண்ணாடி நீ கண் ஜாடை நான் பாடலுக்கு நிரஞ்சன் பாரதியின் வரிகளில்   சரணின் குரலும் ,பவதாரனியின் குரலும் சிறந்த மெல்லிசை பாடலை தந்திருக்கிறது . பாடலை கேட்க்க  கண்ணாடி நீ கண் ஜாடை நான் என் வீடு நீ உன் ஜன்னல் நான் என் தேடல் நீ உன் தேவை நான் என் பாடல் நீ உன் வார்த்தை நான் என் பாதி நீ உன் பாதி நான் என் ஜீவன் நீ உன் தேகம் நான் என் கண்கள் நீ உன் வண்ணம் நான் என் உள்ளம் நீ உன் எண்ணம் நான் என் மேனி நீ உன் ஆடை நான் என் பேச்சு நீ உன் மேடை நான் என் பாதை நீ உன் பாதம் நான் என் தென்றல் நீ உன் வாசம் நான்  நான் தான் நீ என்பதை சற்று வித்தியாசமாக வரிகளில் காதல் கலந்து இருக்கும் வரிகள் இவை . இதனை எழுதியவர் கவிஞர் நிரஞ்சன் பாரதி அவர்கள். இவர் வேறு யாரும் அல்ல மகாகவி பாரதியாரின் இரத்தவழி உறவு  . மகாகவியின் ஆசீர்வாதம் எப்போதும் இருக்கும் . இந்த தலைமுறைக்கு ஏற்ற படி காதல் கல

நேரத்தில் விஜயின் நெடும்பயணம்- கி பி 2050

திண்ணை இணைய வாரப்பத்திரிகையில் வெளியான எனது கதை ... http://puthu.thinnai.com/?p=3070 பாரிய அணு உலைகள் ,செயற்கை பசுமை, பறக்கும் மின்சார வாகனங்கள்  என  கி .பி 2050 இல் ஒரு இயந்திரச்சாலை போலவே  காட்ச்சியளித்தது ஜப்பானின் தலைநகரம் டோக்கியோ .இயந்திரங்களிடையே சில சில இடங்களில்  மனித நடமாட்டமும் இருந்தது .மனிதர்கள் புன்முறுவலுடனும் ஆச்சரியம் கலந்த முகத்துடனும் ஆங்காங்கே குழுக்களாக நின்று சாலையின் பாரிய திரைகளில் செய்தியை பார்த்துக்கொண்டிருந்தார்கள் . அவர்களின் எதிர்பார்ப்பு, மகிழ்ச்சிக்கு காரணம் உலகையே தமது பக்கம் திருப்பும் வேலையில் அவர்களின் விஞ்ஞானிகள் ஈடுபட்டுக்கொண்டிருப்பது தான் .  மத்திய விஞ்ஞான தொழில்நுட்ப மையத்தில் மும்முரமாக வேலைகளில்  ஈடுபட்டிருந்த விஜய்க்கு, இருந்த இடத்தில் ரோபோக்களின் உதவியால் உடல் அசையாத வேலை என்றாலும் மூளை படுவேகமாக இயங்கிக்கொண்டிருந்தது . காரணம் அடுத்த நாள் ஒளியின் வேகத்துக்கு இணையாக செல்லவிருக்கும் விண்வெளிக்கப்பல்  பயணத்திற்கு தயார்நிலையில் ஒரு குழுவே இயங்கிக்கொண்டிருந்தது .அதில் தொழில்நுட்பத்தை பரிசோதிக்கும்   பொறுப்பு விஜய்யிடம் இருந்ததால் குட்டித்தூக

கால பயணம் (Time travel)- இறந்த காலத்துக்கு செல்வதில் பரடோக்ஸ் பிரச்சனை

கால பயணம் பற்றிய முன்னைய ஆக்கம் . காலபயணம் பற்றிய அடிப்படை இல்லாவிட்டால் வாசிக்கவும் - அழுத்துக காலத்தில் பயணம் செய்வதில் உள்ள பிரச்சனை இறந்த காலத்துக்கு பயணம் செல்வது தான் . எதிர்காலத்தில் பயணம் செய்வதை இதுவரை யாரும் விமர்சிக்கவில்லை. இந்த பிரச்னையை இலகுவாக விளக்குவதானால் ,உதாரணத்திற்கு நீங்கள் 200 வருடங்கள் பின்னோக்கி  சென்று விட்டீர்கள் என்று வைத்துக்கொண்டால் நீங்கள் உங்கள் பிறப்புக்கு முன்னரான  காலப்பகுதியில் இருக்கிறீர்கள் .  அதாவது ஒரு விளைவுக்கு (பிறப்பு ) முன்னரே நிகழ்வு (வாழ்தல் ) நடக்கிறது . இது மிகவும் முரண்பாடானது . இதனை  விளக்குவது தான் பிரபலமான கிராண்ட் பாதர் பரடொக்ஸ். உதாரணத்திற்கு நீங்கள் உங்கள் இறந்த காலத்துக்கு சென்று விட்டீர்கள் .அந்த காலத்தில் நீங்கள் உங்கள் சொந்த தாத்தாவையே கொலை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது . நீங்களும் ஒரு துப்பாக்கியை  எடுத்து சுட்டு விட்டீர்கள் . ஆனால் நீங்கள் உண்மையிலேயே பிறக்கவில்லை . உங்கள் தாத்தா உயிரோடு இருந்தால் தானே உங்கள் தந்தை பிறப்பார்  .தந்தை இருந்தால் தானே நீங்கள். ஆகாவே இந்த தொடர்பு வட்டம் துண்டிக்கப்படுகிறது( inconsistent c

வெளிப்படையாக பேசுதல்? மறைத்து பேசுதல் ? - நீயா நானா

நீயா நானாவில் நல்ல தலைப்புக்கள் வரும் போது வார இறுதி நாள் ஒழுங்காக செல்லவில்லை என்ற குறையை அந்த இரவுகள் நிவர்த்தி செய்கின்றன .  அது போல இந்த ஞாயிற்றுக்கிழமை(31 /7 /2011 ) ஒளிபரப்பாகிய தலைப்பு மிகவும் சுவாரசியமானதும் ,எமது அன்றாட வாழ்க்கையில் கடந்து வரும் முக்கிய பிரச்சினையுமாகும் .காரணம்  தொடர்பாடல் தான் இந்த காலத்தில் எமது வேலைகளையும் அனைத்தையும் கொண்டு செல்கிறது . வெளிப்படியாக பேசுவது சரியா ? மறைத்து பேசுவது சரியா என்ற விடயத்தில் மிகவும் தெளிவாக இருபக்கம் ஆராயப்பட்டது . வெளிப்படையாக பேசுபவர்கள் ஏமாளிகள் என்றும் அளந்து  பேசுபவர்கள் வஞ்சம் வைத்து பேசுபவர்கள் என்றுமே ஒருவரையொருவர் நினைத்துக்கொண்டிருக்கிறோம் . ஆனால் இதை பொதுவாக பார்ப்பவர்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் வெளிப்படையாக பேசுபவர்களை நம்பலாம் அமைதியாக ,கமுக்கமாக பேசுபவர்களை நம்ப முடியாது என்ற எண்ணமே நிலவுகிறது .  இந்த இரு பிரச்சனைகளாலும் பாதிக்கப்பட்டவர்களே அதிகம் . வெளிப்படையாக பேசுதல் கூடுதலானோரை பாதித்து விடுகிறது .  முன் வைக்கப்பட்ட சில கருத்துகள் மிக பயனுள்ளதாக இருந்தது . வெளிநாட்டவர்கள் கலாச்சாரம் எப்படி வெளிப்ப

ஆடிப்பிறப்பு : தமிழர் திருநாள்

"ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை" என்று நவாலியூர் சோமசுந்தர புலவரது பாடப்புத்தகங்களில் படித்தது நினைவு. இன்று ஆடிப்பிறப்பு (17.7.2011) பனங்கட்டிகூழ் குடித்து மகிழ்ச்சியாய் கொண்டாடும் நாள் . ஆடிப்பிறப்பு தமிழர்களுக்கு என்றே தனித்துவமான திருநாள் . இன்றுவரை இது யாழ்பாண தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது .புலம்பெயர்ந்து வாழும் இடங்களிலும் கடைப்பிடித்து வருவது பாராட்டத்தக்கது . தமிழ் நாட்டு மக்கள் இதை பெரும்பாலும் மறந்துவிட்டனர் . மேலைத்தேய கலாசார திணிப்பு காரணமாக இருக்கலாம் . ஆரியர்களால் திணிக்கப்பட்ட தீபாவளி ,சித்திரை வருடப்பிறப்பு போல் அல்லாது தை திருநாளும் ,ஆடிப்பிறப்பும் தமிழர்களுக்கு என்றே தனித்துவமான திருநாளாகும் .  அப்படி மாதத்தின் முதல் நாட்களை கொண்டாட வேண்டிய காரணம் என்ன என்பதை பார்ப்போம் . தமிழர்களின் திருநாள் எதுவும் அறிவியலுடன் பிழைக்காது . இயற்கையோடு தொடர்புபட்டவை அவை. உலகிலேயே தமிழ் கலாசாரம் சிறந்து விளங்கியது என்கிறோம் என்றால் அதற்கான காரணம் விவசாயம் ,இயற்கையை மக்கள் மதித்தமை . தமிழர்களின் கலாசாரத்தில் கடவுள் என்ற பதத்திற்கு இடம் கொடுக்காமல்  இயற்கையையே

காமராஜர் - சுய அறிவு பிறந்த தினம்

‘ ஆ றா வது வரை படித்தவர்தானே! என்ற அலட்சியத்துடன் முதல்வர் காமராஜரின் அறைக்குள் அலட்சியமாக நுழைவார்கள் அதிகாரிகள். வெளியே வரும்போது அவர்களின் வால், கால்சட்டைக்குள் மடக்கிச் சொருகப்பட்டு இருந்தது!’ - ஆர் வெங்கட்ராமன்  இன்று ஐயா காமராஜரின் பிறந்தநாள். சிலருடைய பிறப்பு அர்த்தமுள்ளதாக இருக்கும் ,சிலருடைய பிறப்பு மற்றயவர்களுக்கு அர்த்தம் கற்பிப்பதாக இருக்கும் .இதில் இரண்டுக்கும் சொந்தக்காரார் காமராஜர் எனும் பெருந்தலைவர் .இன்னொருவர் சொல்லிக்கொடுத்து வந்த அறிவுக்கும் சுயமான அறிவுக்கும் உழல வித்தியாசத்தை காமராஜரை பார்க்கும் போது உணர முடியும் . காமராஜர் பற்றி படிக்க படிக்க சுவையாக இருக்கும் .அவரை பற்றிய சில குறிப்புகளை பகிர்ந்துகொள்கிறேன் . சினிமா என்றால் காமராஜருக்கு பிடிக்காதாம் .அதனால் தான் நிஜமாகவே நாம் சினிமாவில் பார்த்து மட்டுமே வியக்கும் போலி நாயகர்கள் போல அல்லாது நிஜத்தில் நாயகனாக வாழ்ந்திருக்கிறார் . படிப்பு ஏறாததன் காரணமாக 6 ஆம் வகுப்பிலேயே தனது படிப்பை நிறுத்தி விட்டார் . ஆங்கிலம் தெரியாமலும் 6 ஆண்டுகளே கற்ற கல்வியுடனும் முதல் அமைச்சர் பதவியேற்ற அவர் தான் தலை சிறந்த தலைமைத

ஒருவரால் என்ன முடியும்- ஒன்று செய்யுங்கள் !

எவருக்காகவும்  கடவுளை பிரார்த்திக்காதீர்கள்  .முடிந்தளவு கடவுளாக இருங்கள் அனைவருக்கும் .. மனிதனின் அடிப்படைத்தேவைகளில் உறையுளை இழந்து ,முதல் நாள் உண்ட உணவையும் ,உடுத்த உடையையும் மட்டுமே மூலதனமாக கொண்டு இடம்பெயரும் அகதிகளின் தினம் நாளை .   இன்னொருவருடைய துயரை அறிய நான் அப்படி இருந்தால் என ஒரு சுயசரிதையை  எம் மனதுக்குள் நாமே எழுதிக்கொள்வது நல்லது . எம்மால் என்ன செய்ய முடியும் ?- ஒருவரால் மாற்ற முடியும் ...   இந்த முறை அகதிகள் தினத்துக்காக(ஜூன் 20 ) ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் தாபனம் தனது இணையத்தளத்தில் "ஒன்று செய்யுங்கள் " என்ற தொனிப்பொருளில் தனது தளத்தை நேர்த்தியாக வடிவமைத்துள்ளது .   Click here இந்த தளத்தில் Learn ,Spread the world  ,Give என்று மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது .   வீடியோ பார்க்க  Learn பகுதியில் அகதிகள் படும் துயரங்களையும் ,அவர்களாகவே எம்மை  உணர்ந்து அவர்களின் துயரங்களையும் உணரும் வகையிலும் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது . 1 . அகதிகளின் உணர்வுகளை கேட்டல்  2 .உங்களால் போர் சூழலில் இருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டிய

காலத்தில் பயணிக்கும் துகள்

கால பயணம் பற்றிய முன்னைய பதிவு  இந்த நேரத்தை நான்காவது பரிணாமமாக சிந்தித்தால் மட்டுமே உணரமுடியும் . உதாரணமாக நீங்கள் இந்த ஆக்கத்தை ஒவ்வொரு சொல்லாக படிக்கும் போதும் நேரம் இறந்த காலத்துக்கு சென்று கொண்டிருக்கிறது .நேரத்தில் நாம் பயணிக்கிறோம் .  மனிதன் பயணித்த அப்பலோ விண்கலம் 25 ,000 mph எனும் வேகத்தை தான் இறுதியாக அடைந்தது.ஒளியின் வேகத்தில் பயணிக்க இதை விட கிட்டத்தட்ட 2000 மடங்கு வேகம் வேண்டும். அதுவும் சாத்தியமாகும் ,ஆனால் காலம் செல்லும்.  உண்மையில் நேரத்தில் இறந்தகாலத்துக்கோ,எதிர்காலத்துக்கோ பயணிப்பதில்  இது மாத்திரமல்ல பிரச்சனை .பரடொக்ஸ்(கிராண்ட்  பாதர்,மேட் சயன்டிஸ்ட் )  ,வோர்ம் ஹோல், லூப் பிரச்சனை என்றெல்லாம் பல பிரச்சனைகள்.  ஆனால் மனிதன் தன்னால் பயணிக்க முடியாவிட்டாலும் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் அணு துகள்கள் பயணிக்க கூடிய அளவு உலகின் மிகப்பெரிய துகள்களை முடுக்கி விடும்(  particle accelerator ) மையம் சுவிசில் ஜெனீவாவில் அமைக்கப்பட்டுள்ளது . அடித்தளத்தில் 16 மைல்கள் தூரமுள்ளதான வட்டவடிவில் அந்த சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது .அந்த துகள்களுக்கு சக்தியை வழங்கும் போது ஒரு செக்

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

மதன் கார்க்கி வரிகளின் ரசிகனாய் - 180 பாடல் வரிகள்

பாடல்கள் என்றால் முதலில் அதில் வரிகளை உன்னிப்பாக ரசிப்பவன் நான் . வரியோடு சேரும் போது தான் அதில் உயிரோட்டம் இருக்கும் . இதற்க்கு ஒரு காரணம் வைர வரிகளின் சொந்தகாரர் வைரமுத்து அல்லது  வரிகளிலேயே  இசை கொண்டுவரும் கண்ணதாசனின் வரிகளாகவும் இருக்கலாம் . எல்லாவற்றையும் விட தமிழின் அழகை உணருவது மிக முக்கிய காரணமாக இருக்கலாம் . ஆனால் அழகான தமிழ் சொற்களை கொண்டலாய்( :-) ) பொழியும்  மதன் கார்கியின்  மீதான ஈர்ப்பே இரும்பிலே ஒரு இருதயத்தில் இருந்து தொடர்கிறது  . புதிய படமான  180 இல் மதனின் பாடல் வரிகளை மிகவும் எதிர்பார்த்திருந்தேன். எதிர்பார்ப்பை சற்றும் குறைக்கவில்லை .முன்னைய கார்கியின் வரிகளுக்கான  பதிவு .. முதலில் ரசித்த பாடல் ..... சந்திக்காத கண்களில் .... -பாடலை  கேட்க்க சந்திக்காத கண்களில் இன்பங்கள்  செய்ய போகிறேன்  சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்  பெய்யப்போகிறேன் ... குவியமில்லாவுக்கு பிறகு ஈர்த்த சொல் கொண்டலாய் . கொண்டலாய் என்றால் மேகம்  . சிந்திக்காது சிந்திடும் மேகம் .அழிந்து வரும் அழகான சொற்கள் அறிமுகம் தொடரவேண்டும் . அன்பின் ஆலை ஆனாய்  ஏங்கும் ஏழை நானாய்  அன்பையே கொண்டிரு