மனிதன் ஏன் இரண்டு கால்களால் நடக்கிறான் ?? மனிதன் உருவாக்கிய கடவுளும் இரண்டு கால்களுடன் இருப்பதாலா ? டார்வினி கூர்ப்பு கொள்கைக்கு எதிராக சில கேள்விகள் கேட்க்கப்பட்டு மதவாதிகளால் அலட்ச்சியப்படுத்தப்பட்டாலும் இன்றும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது . இறைவன் இந்த பூமியை ப்ராஜெக்ட் எடுத்து மனிதனை படைத்து அவனுக்காக எல்லாம் படைத்தது என்று பல ஆண்டுகளுக்கு முன் பகுத்தறிவு குறைவான காலத்தில் எழுதியவற்றை இன்றும் பின் பற்றி வருகிறான் . அப்படியானால் எதற்கு மனிதனுக்கு முதல் டைனோசர்களை படைத்தார் ? இவ்வாறான கேள்விகளை மீண்டும் கேட்டாலும் அவற்றிற்க்கு பதில் அளிப்பதில்லை .. ஆனால் மனிதன் இரண்டு காரணங்களால் இன்று மற்றைய உயிரினங்களை விட அறிவாலும் அனைத்து விடயங்களாலும் முன்னேறி உள்ளான். அதற்க்கு முக்கிய காரணம் மனிதனின் சிந்தனை . இதில் முக்கிய பங்கு பகுத்தறிவு ... ஆபிரிக்காவில் 4 மிலியன் ஆண்டுகளுக்கு முதல் ஒரு வகை குரங்குகளில் (Apes ) இருந்தே கூர்ப்பின் அடிப்படையில் மனிதன் முழுமையாக ஆனான் என்பது நிரூபிக்கப்பட்டு வருகிறது ஆய்வாளர்களால் ... australopithecin...