"முத்தம் கொடுத்தாரா! கன்னத்துலையா கையிலையா" "எங்க ரெண்டுபேருக்கு இடைல ஒன்னும் இல்லை" "அந்தளவுக்கு டைட்டா கட்டிப்பிடிச்சாரா" "மீனு,இது உன்னோட கவிதையும் இல்லை; காதலும் இல்லை" "பின்ன என்ன" "ஒரு மாதிரி நேசம்னு சொல்லலாம்" "நேசமா ! டெட்டோல் போட்ட வார்த்தை எல்லாம் வேணாம். லவ் பண்றேன்னு பளிச்சுன்னு சொல்லு" Jane Austin எழுதிய "Sense & Sensibility" என்கிற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்தான் "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்". இருந்தாலும், அந்தந்தக் கதாப்பாத்திரங்களின் தன்மையைத் தீர்மானிப்பதில் சுஜாதாவின் வசனங்களின் பங்கு அதிகம். அவர் வசனத்தில் உருவான திரைப்படங்களில் வரும் வசனங்களையும், அந்த வசனங்களின் தன்மையால் அந்தந்தக் கதாப்பாத்திரங்களுக்குக் கிடைக்கப்பெறும் பிம்பத்தையும் கவனித்துக்கொண்டே இருக்கலாம். அந்தத் தன்மைக்காகவே இந்தத் திரைப்படத்தையும் பல தடவைகள் பார்த்துவிட்டேன். ஐஸ்வர்யா ராய் ஏற்று நடித்த 'மீனாட்சி' என்கிற கதாப்பாத்திரத்தில் ஒட்டியிருக்கும் சுஜாதாவின் ப