Skip to main content

Posts

Showing posts from April, 2015

அமெரிக்காவின் புதிய வெளியுறவுத்துறைக் கொள்கை - QDDR 2015

அமெரிக்காவானது தனது புதிய இராஜதந்திரக் கொள்கைகள்  மற்றும் அபிவிருத்திக்கான திட்டங்களையும் உள்ளடக்கிய இரண்டாவது அறிக்கையினை வெளியிட்டிருக்கிறது. இது 'QDDR' என அழைக்கப்படுகிறது. இதனை அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கைகளுக்குப் பொறுப்பான  திணைக்களம் வெளியிடுகிறது. அமெரிக்க அரசினதும் சர்வதேச அபிவிருத்திக்கான ஏஜென்சியினதும்(USAID) நீண்டகால மற்றும் குறுகிய இலக்குகளைக் கொண்ட வெளியுறவுக்கொள்கைகளை நன்றாக ஆராய்ந்து, நன்கு நெறிப்படுத்தக்கூடிய திட்டங்களை வடிவமைத்து  இந்த அறிக்கை தயாரிக்கப்படுகிறது. கொள்கைகளையும் திட்டங்களையும் ஒவ்வொரு வருடமும் மீளாய்வு செய்வதை விடுத்து, நான்கு வருடங்களுக்கு உண்டான  நீண்டகாலத் திட்டங்களை இது முன்வைக்கிறது.  ஒபாமாவின் தலைமையின் கீழ், அப்போதைய(2009-2013) அமெரிக்கச் செயலாளராக  இருந்த ஹிலாரி கிளிண்டனால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் இந்த முறைமை. முதலாவது அறிக்கையானது ஹிலாரி கிளிண்டன் தலைமையில் 2010 இல் வெளியிடப்பட்டது. அதில் 'மக்கள் சக்தி மூலம் முன்னோக்கிச் செல்லுதல்' என்கிற சாராம்சம் முன்னிலைப்படுத்தப்பட்டது.  Smart Power என்றால்  "Sp

நிறம்

எங்கள் நிறுவனத்தில் வேறு பிரிவிற்கு புதிதாக மனேஜர் ஒருவர் வந்திருக்கிறார். வெளித்தோற்றத்திலேயே ஒரு நல்ல படிப்பாளிக்குரிய விபரங்கள் தெரிந்தது. அதிகமாகப் புத்தகங்கள் வாசிப்பவர் என்று அவருக்கு நெருங்கியவர்கள் சொன்னார்கள். நான் அடிக்கடி வாசித்துக்கொண்டிருப்பதை பார்க்கிறவர்கள் என்கிறபடியால் எனக்கென்று அந்தச் செய்தியை விசேஷமாகச் சொல்வதுபோலச் சொன்னார்கள். பொதுவான விடயங்களில் விவாதம் வரும்போது, தன்னைவிட உயர்நிலை அதிகாரிகளுக்கு புத்தகங்களிலிருந்து சில எடுத்துக்காட்டுகளைச் சொல்லி விளங ்கப்படுத்துவார். இவர்களும் கைபேசியைத் தடவுவதை நிறுத்திவிட்டு அவர் சொல்வதை ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருப்பார்கள். அவர் சொல்கிற விதமும் அப்படியிருக்கும். சிங்களவராக இருந்தபோதிலும் தமிழர்களே தெரிந்துவைத்திருக்க ஆர்வம் காட்டாத தமிழர் வரலாற்றின் நுணுக்கமான விபரங்களை மிகவும் தெளிவாகப் புரியவைப்பதைப் பார்த்திருக்கிறேன். அன்று சோழர்களின் இலங்கை வருகையைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். இருந்தாலும் அதெல்லாம் one-way communication தான். உரையாடல் நீட்சி அடைவதற்கு மற்றப் பக்கத்தில் இருபவருக்கும் கொஞ்சம் விஷயங்கள் தெரிந்திருக்க

சிறுபேச்சு : நகுலன்

நகுலனின் 'சில அத்தியாயங்கள்' எனும் நெடுங்கதையில் கிறிஸ்தோபர் மார்லோ எழுதிய எட்வர்ட் II ....  அவனைச் சிறையில் அடைத்துவிட்டார்கள்... அவன் அவனைக் கொல்ல  வருகிறான்... அவனுக்கு அது தெரியும்... இருந்தாலும் கேட்கிறான்... என்னைக் கொல்லத்தானே...  சே, உனக்குத் துணையாக...  இல்லை, போய்விடு..  அவன் போகையில் கூப்பிடுகிறான்...  தனியாக இருக்க பயமாக இருக்கிறது, போகாதே...  எனக்குத் துணையாக இரு...  இருக்கிறேன். தூங்கு...  தூக்கம் வரமாட்டேன் என்கிறது...  ஏன்?...  நீ என்னைக் கொல்லத்தான் வந்திருக்கிறாய். எனக்குத் தெரியும்.

புதுவெளி

“There is music in words, and it can be heard you know, by thinking.”   -   E.L. Doctorow மணிரத்னம், வைரமுத்து, ரஹ்மான் கூட்டணியில் 'ஓ காதல் கண்மணி' பாடல்கள் நவீன வடிவம் பெற்றிருக்கிறது. ஜதிகள், மிகவும் குறைவான வரிகள், மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் சொற்கள், இடையிசை, ஆரம்ப இசை அளவீடுகள்  என ரஹ்மானின் முயற்சிகள் அனைத்தும் பாடல் முழுதும் புதிதாக வெளிப்படுகிறது. ஆனால் கவிதை மொழிக்கான வெற்றிடம் நிரப்பப்படாமலே இருப்பாதாகத் தோன்றுகிறது. வெளிப்படுபவை எல்லாமே மொழிகளாகும்போது, இசைபோல சொற்களுக்கும் எப்போதும் இணையான இடம் கிடைக்கவேண்டியது அவசியம். இந்தக் கூட்டணியின் முன்னைய படைப்புகளில் கவிதை உயரும் இடங்களில் இசை நெகிழ்ந்துகொடுத்தும், இசை உயரும் இடங்களில் மொழி மௌனித்தும் இயங்கியிருக்கிறது. தன்னுடைய மொழிக்கு சரியான இடம்தேடிக் காத்திருந்தபோது வந்தவர் ரஹ்மான் என வைரமுத்து கூறியிருந்தார். இந்தக் கூட்டணியின் முன்னைய படைப்புகள் எல்லாம் இன்றுவரை சலிக்காத்திருப்பதன் ரகசியமும் அதுதான். மெதுவாய் நுழைந்து பரவுகிற தந்திரத்தை தமிழ் ஓசைகள் அறிந்திருக்கின்றன. அவை இசைவந்த பாதையின்வழி இன்ற