Skip to main content

Posts

Showing posts from September, 2012

ஒன்றை இன்னொன்றோடு தொடர்புபடுத்தல் ..

சமூக நிகழ்வுகள் ஒன்றை இன்னொன்றோடு தொடர்புபடுத்தி (எல்லாமே தொடர்புடையுடையவை ) அவை உளவியல் ரீதியில் சமூகத்தை எப்படி பாதிப்படைய செய்யும் , மாற்றத்தை ஏற்படுத்தும் , அதன் பின்னர் அந்த சமூகத்தை எப்படி கொண்டு செல்லுமென தொலைநோக்கில் எழுதப்படுவதோ பேசப்படுவதோ கிடையாது. சமுதாயமும் ஒன்றை இன்னொன்றோடு தொடர்புபடுத்தாத சமுதாயமாகவே வளர்ந்துகொண்டிருக்கிறது. இதனால் சில நிகழ்வுகளை ஆரம்பித்தில் நாம் தடுக்காத போது அவை வளர்ந்து மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும் அபாயமுடையன . Domino effect , Snowball effect உம் இதைத்தான் சொல்கின்றன . Butterfly effect எல்லோரும் கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால் snowball effect , domino effect பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். இவை மூன்றையும் ஒரு சங்கிலித்தொடர் விளைவுகள்னு பொதுவா ஒரு வகைக்குள்  சேர்த்திடலாம். ஒன்றோடொன்று தொடர்புடையன . மேலதிக விபரம் தேவைப்படுவோர் கூகிள் செய்து பாருங்கள் . விபரங்கள் தேவைப்படுமேயானால் அடுத்த  பதிவில் விளங்கப்படுத்துகிறேன். வண்ணத்துப் பூச்சி விளைவு என்னவென்று தெரியாதவர்களுக்கு ஒரு அறிமுகம் கொடுத்திடலாம் என எண்ணுகிறேன் . பிரேசிலில

கம்பனின் கவிச்சுவை !

முன்னமே இரண்டு இலக்கிய தளங்களை பரிந்துரைத்திருந்தேன். எளிய முறையில் இலக்கியத்தின் சுவையை அனைவரும் புரிந்துகொள்ளும்படி விளங்கப்படுத்தியிருப்பார்கள். தினம் ஒரு பா வாக இதுவரை வலைத்தளங்களில் எழுதி வந்த என் சொக்கன் அவர்கள் இப்போது ஒலி வடிவில் கம்பராமாயணத்தை சுவை பட கூறி வருகிறார்.    இவர்களின் பகிர்வுகளில்  சுவை மட்டுமன்றி சுவாரசியமும் நிறைந்திருக்கும். உதாரணமாக  இந்த பாடலில் வேட்கை மிகுந்தவர்கள் நிகழும் செயல்களைத் தமக்குச் சாதகமாகவே நோக்குவார்கள் என்னும் உளவியலை கம்பன் அழகா சொல்லியிருப்பார் .  நாமத்தால் அழிவாள் ஒரு நன்னுதல். ‘சேமத்து ஆர் வில் இறுத்தது. தேருங்கால். தூமத்து ஆர் குழல் தூ மொழித் தோகைப ால் காமத்தால் அன்று. கல்வியினால்’ என்றாள்.   இராமன் சீதை மீது கொண்ட காதலால் வில்லை உடைக்கல , தான் கற்ற கல்வித் திறனை ( வில் உடைக்க முடியும்னு ) நிரூபிக்கவே உடைச்சிருப்பார்னு ராமர் மீது காதல் கொண்ட இன்னொரு பெண் நினைத்துக்கொள்கிறாள். தன்னை ஆறுதல்ப்படுத்த. இதை என் சொக்கன் மிக அழகா இன்னும் விபரமாக  ஒலி வடிவில் விளங்கப்படுத்தியிருக்கார் . கம்பனை வியப்போர் இவருடைய ஒலி வடிவங்களை பின்பற்றல