நீங்க யாரும் நிச்சயம் கனவு காணாம இருந்திருக்க மாட்டீர்கள் . ஆனால் அதை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை எனலாம் . தேஜாவு போல . அதாவது சில நேரங்களில் சில இடங்கள் நிகழ்வுகள் ஏற்க்கனவே பார்த்தது போல இருக்கும் .ஆனால் இவை இரண்டும் அடிக்கடி அனைவருக்கும் நடப்பது . இதுவரை விடை காணாத புதிராய் இருப்பது கனவுகள் தான் . மருத்துவம் ,அறிவியல்,மனோதத்துவம் என பல பக்கங்களில் இருந்தும் விளக்கங்கள் குவிகிறது . இந்த வகையில் சில கனவுகள் நாம் காணும் போது அவை கனவு தான் என தெரியும் . ஆனால் சில கனவுகள் காணும் போது நிஜமாக நடப்பது போலவே இருக்கும் . அந்த வகை கனவுகள் எளிதில் மறக்க முடியாதது . உங்களால் அனைத்தையும் உணர்ந்து விளக்கமாக பார்க்க முடியும் . அது தான் லூசிட் கனவுகள் . லூசிட் கனவுகளை நீங்கள் உணர்ந்து கனவு தான் காண்கிறீர்கள் என உணர்ந்து அனுபவிக்க முடியும் . இன்செப்ஷன் படம் பார்த்தவர்களுக்கு கிட்டத்தட்ட அதே போல இருப்பது போல தோன்றும் . லூசிட் கனவுகளை எமக்கு ஏற்றது போல அமைத்துக்கொள்ளலாம் .விரும்பிய இடங்களுக்கு செல்லலாம் . இதன் முக்கியத்துவத்திட்க்காக ஒரு உதாரணம் சொல்கிறேன் . இந்த லூசிட் கனவுகள்