Skip to main content

Posts

Showing posts from July, 2016

பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறாகும் இயற்கை அனர்த்தம்

இலங்கையில் தமிழரின் அரசியல் நிலை தொடர்பான பதிவுகளை நீண்ட நாட்களாக எழுதவில்லை. இருந்தாலும், நூறு நாட்கள் கழித்துப் பார்த்தாலும் புரிந்துவிடும் சீரியல் போலத்தான் நகர்கிறது. கால நீட்டிப்புத் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. பொருளாதாரத்தில் 'ரோட்டின் கிட் தியரம்' என்று ஒன்று இருக்கிறது. அதாவது, ஒரு குடும்பத்தில் நல்ல வசதியான, கொடை உள்ளம் கொண்ட பெற்றோர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தினமும் அந்த வீட்டிலுள்ள குழந்தைகளுக்குப் பரிசுப்பொருட்களும் பணமும் கொண்டுவந்து கொடுக்கிறார்கள். அதில் ஒரு குழந்தை தீய செயல்களில் ஈடுபடுகிறது. தனது சகோதரர்களை அடித்துத் துன்புறுத்தும் செயலைத் தொடர்ந்து செய்துவருகிறது. இதைப் பார்த்துப் பெற்றோர்கள் தமது பணத்தையும் பரிசுப்பொருட்களையும் தீய செயல்களில் ஈடுபடும் குழந்தைக்குக் கொடுப்பதை நிறுத்திவிட்டு, பாதிக்கப்பட்ட குழந்தையின் மேல் அதிக அளவில் அக்கறை எடுத்துக்கொள்கிறார்கள். இதைப் பார்க்கிற குழப்படிகாரக் குழந்தை தன்னுடைய சகோதரனைக் காயம் செய்வதையும் சேட்டைகள் புரிவதையும் நிறுத்திவிடும். காரணம், இந்தச் செயற்பாடு தனக்குக் கிடைக்கவிருக்கிற பரிசுகளையும் பணத்தையும் நிறு...

ஒரு நாள் கூத்து

நாம் தினமும் யாரையாவது கெட்டவர்களிடமிருந்து காப்பாற்றிக்கொண்டிருப்பதில்லை. எதனையும் திருத்த முற்படுவதில்லை. ஒவ்வொரு சிறிய தீர்மானத்தின்போதும் எங்களைச் சுற்றி இந்தச் சமூகம் கட்டமைத்திருக்கிற விதிமுறைகளையும் சிந்தனைத் திணிப்புகளையும் வைத்துக்கொண்டு எங்கள் சுயத்துடன் போராடிக்கொண்டிருக்கிறோம். சிலநேரங்களில் எங்களை எங்களிடமிருந்தே காப்பாற்றிக்கொள்ள முடிவதில்லை. எங்கள் முடிவுகளே எங்களைக் கைவிட்டுவிடுவது உண்டு. இவற்றைப் பற்றிய புரிதல் இருந்தால் வாழ்வு மகிழ்ச்சியாய் அமையும். இல்லையேல் சதாகாலமும் இன்பத்தைத் தேடி வாழவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவோம். இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது காதலும் திருமணச் சந்தையும்தான். இதை "ஒரு நாள் கூத்து" திரைப்படம் முழுவதுமாகச் சொல்ல முற்பட்டிருக்கிறது. பெண்களுக்காகப் புரட்சி செய்கிறேன் என்று வலிந்து காட்சிகளைத் திணிக்காமல் போகிற போக்கிலேயே நிறைய விஷயங்களைச் சொல்லிச் செல்கிறது. இந்தப் படத்தில் வருகிறவர்களிடம் திடமான மனநிலை இல்லை.அதேநேரம் திருப்திகரமான மனநிலையும் இல்லை. இது பெரும்பாலானோரின் இயல்பான மனநிலை. ரித்விகாவை பெண் பார்த்தவன், அவளை ...

கவிப்பேரரசு வைரமுத்து

இன்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுடைய பிறந்ததினம். இதுவரை  வைரமுத்துவின் வரிகளின் தனித்தன்மை பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். சொற்கள் மீதான எனது காதலை வைத்துக்கொண்டு எத்தனையோ இன்னல்களைக் கடந்து வந்திருக்கிறேன். அதற்கு வைரமுத்துவினுடைய சொற்களும் மிகுந்த உறுதுணையாக இருந்திருக்கிறது. சொற்களுக்குள் இசையும் இருக்கிறது. அதைக் கேட்பதற்குச் சிந்திக்கவேண்டும் என்று சொல்லுவார்கள். சொற்களுக்குத் தப்பிக்கவைக்கத் தெரியாது. உணர்வுகளை நெகிழவைக்கத் தெரியும். தவம்போல் இருந்து யோசித்து, சொற்களைத் தவணை முறையில் நேசிக்கும் அன்புள்ளங்கள் எவராலும் இந்தப் பெயரை விரும்பாமல் இருக்கமுடியாது. கவிதை என்பது மொழியின் முதிர்ச்சி. சொற்களின் ஒழுங்கமைப்பு. அதேபோல, காதல் என்பது மனித நாகரிகத்தின் உச்சம். இந்த நம்பிக்கையை நிஜ உலகம் தகர்க்கும்போதெல்லாம் கவிதைகள்தான் அவற்றைத் தாங்கிப்பிடித்திருக்கின்றன. இவை இரண்டையும் உயர்ந்த மென்சொற்களால் அனுகியவை நமது சங்ககால இலக்கியங்கள். இலக்கியக் காதலில் காமம் உண்டு. தற்போதைய எழுத்துகளில் பிரதிபலிக்கப்படும் அநாகரிகமான காமம் போலல்லாது தொழுகைக்குரிய காமமாக இருந்தது. சரணட...

கவிதாஞ்சலி 5

மணிரத்னத்தின் 'இராவணன்' திரைப்படத்தில் வீரா(இராவணன்) ஒரு மிகப்பெரிய கூட்டத்துக்குத் தலைவன். மிகுந்த பலசாலி. இந்த இராவணனுக்குக் காதல் வருகிறது.   "உசுரே போகுதே" என்கிற பாடல்  காதல் வசப்பட்ட அவனது மனநிலையைச் சொல்கிறது. அதன் துடிப்பைச் சொல்கிறது. அவ்வளவு திறமையான ஒரு மகாவீரன் ஒரு பெண்ணின் மீது காதல் கொண்டு தன்னிலை மறந்துபோகிறான். காதல் எதனையும் பொருட்படுத்துவதில்லை என்று சொல்லுவார்கள். இங்கே அவன் நிலையையே  அவன் பொருட்படுத்தவில்லை. என்னை இந்தப் பெண் வருத்துகிறாளே என்று அவன் சொல்கிறபடி பாடல் அமைகிறது. இதேபோல குறுந்தொகையில் தலைவனுக்குக் குழப்பம் வருகிறது. வருகிற வழியில்  "உனக்கு என்ன ஆச்சு"ன்னு பாங்கன் கேட்கத் தலைவன் இப்படிச் சொல்கிறான். "வெள்ளைப் பாம்போட சின்னக் குட்டிப் பாம்பு இருக்கே! அதுக்கு உடம்பெல்லாம் வரி வரியா இருக்கும். ரொம்பச் சின்னது. ஒரு பெரிய காட்டு யானைகூட அதைப் பாத்துச்சுன்னா நிலைகுலைந்து போய்டும் ! அதுபோல இந்த இளையவளின் நாணல் முளை போன்ற ஒளிரும் பற்களும் வளைக்கரங்களும் இத்தனை படைகள் வென்ற என்னை நிலைகுலையைச் செய்கி...