ஓவியம் - ஷண்முகவேல் |
"காதங் காமம்
ஒருக்க ஒரு தன்மை நிற்குமோ ஒல்லைச்
சுருக்கமும் ஆக்கமும் சூளுறல் வையைப்
பெருக்கன்றோ"
காமம் ஒரு நதி அன்றோ? வேகமாகச் சுருங்கவேண்டிய இடத்தினில் சுருங்கி, பெருகும் இடத்தில் பெருகிநிற்கும் வையையைப் (நதியைப்) போன்றது காமம். அத்தகைய அழகான காமம் என்றும் ஓரிடத்தில் நிற்குமோ? அது பெருகிக்கொண்டே போகும். தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கும். இங்கு 'ஒல்லை' என்பது அத்தனை அழகான சொல். சுருங்கிய இடத்தில் நதி வேகம் கொள்ளும் அழகை, அந்தச் சொல்லை உச்சரித்தே பார்த்துக்கொள்ளலாம்.
அதுபோல பெண்ணும் ஒரு நதி. பொதிகையில் தோன்றிய தமிழ்கொண்டு, தொட்டுத் திறக்கவேண்டிய நதி. வாலி, இந்த அழகுக்கு இன்பம் சமைத்திருப்பார்.
மதுரை பதியை மறந்து
உன் மடியினில் பாய்ந்தது வைகை
மெதுவா , மெதுவா , மெதுவா
இங்கு வைகையில் வைத்திடு கை
அதுபோல, தன் உறைவிடமான(பதி) மதுரையை மறந்து உன் பெண் மடியினில் பாய்ந்தது வைகை. ஒரு ஆற்று நீரை எப்படி வருடித் துழாவுவாயோ, அப்படி உன் கரங்கள் வந்து, மடியின்மீது மாண்போடு விழவேண்டும்.
வையையின் தன்மையை ஒத்தது அவன் செயல்( நின் வையை வயமாக வை) என்கிற பரிபாடல் வரியின் உள் அழகை , 'வைகையில் வைத்திடு கை' என்கிற தனது வார்த்தை விளையாட்டால் எளிமையாகச் சொல்லியிருப்பார் வாலி.
மலரினும் மெலிது காமம் 01 - ஞயம்பட உரை.
மலரினும் மெல்லிது காமம் 02 - மாதரடிக்கு நெருஞ்சிப் பழம்
மலரினும் மெல்லிது காமம் 03 - சின்னம் வைத்தல்
மலரினும் மெல்லிது காமம் 04 - பருகுதல்
மலரினும் மெல்லிது காமம் 05 - பயில்தல்
மலரினும் மெலிது காமம் 01 - ஞயம்பட உரை.
மலரினும் மெல்லிது காமம் 02 - மாதரடிக்கு நெருஞ்சிப் பழம்
மலரினும் மெல்லிது காமம் 03 - சின்னம் வைத்தல்
மலரினும் மெல்லிது காமம் 04 - பருகுதல்
மலரினும் மெல்லிது காமம் 05 - பயில்தல்
மலரினும் மெல்லிது காமம் 06 - இடஞ்சுட்டிப் பொருள் விளக்கு
Comments