"அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு" - குறள்
புதிதாய் ஒரு விடயத்தை அறியும்போது என்ன தோன்றும்? அட, இதை இவ்வளவு நாளும் அறியாமல் விட்டோமே என்ற எண்ணம் தோன்றும். ஒரு நுண்ணழகை அறியும்போது என்ன தோன்றும்? இத்தனை நாளும் இந்தச் சாலையைக் கடக்கிறோமே, அந்த மதிற்சுவர்ப் பூவைக் கவனிக்கவில்லையே என்று தோன்றும். கவனிக்கையில், அன்று அந்தச் சாலையே புதிதாகத் தோன்றும். அப்படிச் சில அழகுகளை நின்று ஆராயத் தோன்றும்.
ஒரு புத்தகத்தைப் படிக்கப் படிக்க, அறியாமை விலகுவது இன்பம். அறியாமை விலகவிலக இன்னும் அறிந்துகொள்ள எவ்வளவோ இருக்கிறது எனத் தோன்றும். நுணுக்கமாக வாசிப்பவர்களுக்கு ஒற்றை வசனங்கூட மீண்டும் மீண்டும் சுவைத்தரும். அதுபோல, காமத்தை இரசிக்கத் தெரிந்தவர்க்கு அதில் நுணுக்கங்கள் பிடிபடும். அந்த நுணுக்கங்கள் அறியப் பெருக்கொண்டேபோகும். ஆசைகள் கிளைவிட்டு மலரும். அன்பு வேர்விட்டு ஊன்றிக்கொள்ளும். "ஆசை அறுபதுநாள் மோகம் முப்பதுநாள்" என்கிற பிரபல பழமொழி எல்லாம் புதியன தேடாதவரும், இரசிக்கத் தெரியாதவரும் சொல்லிவைத்த பழமொழி என்கிறான் வள்ளுவன்.

ஒரு குறிப்பிட்ட குணத்தின்மீது மீண்டும் மீண்டும் காதல் கொள்வதுபோல, ஒரு குறிப்பிட்ட பாகத்தின்மீது மீண்டும் மீண்டும் காமுற்றிருத்தல் இன்பம். ஒரு கவிஞனின் கண்களைக் கடன்வாங்கிப் பார்க்கும் நொடிகள் காமத்துக்குப் பிடித்தம். தேக வாசம் நுகரும் கணங்கள் நுரையீரலுக்குப் பிடித்தம். தேகத்தில், சின்னச் சின்ன அலைபோன்ற கோடுகள் கண்டபின்னும், செல்களைத் தேடித்திரியும் அருந்தவப் பார்வை. ஓர் இடம் சுட்டி, அதை இதழ்களால் விளம்பி விளக்குதல். கோடுபோடும் ஓவியன்போல கவனமாய்த் தீண்டிப் பொருள் ஏற்றுதல். ஒன்றன் பொருளைக் கோடிவடிவங்களில் விளக்கலாம். அதுபோல, அந்தக் காமத்தைக் கோடிமுறை கொண்டாடித் தீர்த்தபின்னும் அது தீராது.
"இளையவளின் இடையொரு நூலகம்" என்பது இடஞ்சுட்டிப் பொருள் விளக்கல். ஒரு நூலகத்துப் புத்தகங்களில் கோடிச் சொற்கள் வியாபித்து இருக்கும். அவை அத்தனையையும் நுணுக்கமாகப் படிப்பதுபோல, அவள் இடையைத் தினமும் சேருகையில் புதியன கண்டதுபோல விளங்கும். இன்னொரு பக்கம் படித்தும் தீராது.
மலரினும் மெலிது காமம் 01 - ஞயம்பட உரை.
மலரினும் மெல்லிது காமம் 02 - மாதரடிக்கு நெருஞ்சிப் பழம்
மலரினும் மெல்லிது காமம் 03 - சின்னம் வைத்தல்
மலரினும் மெல்லிது காமம் 04 - பருகுதல்
மலரினும் மெல்லிது காமம் 05 - பயில்தல்

Comments