Skip to main content

கங்குபாய் கத்தியவாடி




நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல.

காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள்.

இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும்.

கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள்.

இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தாலும், கங்குபாய் என்கிற இந்தப் படம், காமாத்திபுரா என்கிற இடத்தில் 1960 களில் நிகழ்ந்த கதையை மையமாக வைத்து புனையப்பட்ட கதை. கங்குபாய் கத்தியவாடி என்கிற பெண்ணின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை.

பெரும்பாலும் இதுபோல விலைமாதர் விடுதிகளில் சட்டங்கள் இல்லை. அங்கு விலைமாதர்களாக இருக்கிறவர்களுக்கு தகுந்த வசதிகள் இல்லை. அப்போது, குறிப்பிடட ஒரு பகுதியிலேனும் சட்டபூர்வமாக்கப் படாததால் அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பும் இருக்கவில்லை. இதையெல்லாம் எதிர்த்து தங்களுக்கும் தகுந்த அங்கீகாரம் வேண்டுமென்று போராடியவர் கங்குபாய் கத்தியவாடி.

இப்பொழுதும் தனிநபர் விலைமாதராக இருப்பது சட்டவிரோதம் இல்லையென்றாலும், இலங்கை இந்தியா போன்ற நாடுகளில், பெரும்பாலான இடங்களில் விடுதியாக வைத்து(Brothel house) நடத்துவது தடை செய்யப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. அப்படியிருக்கையில் விலைமாதர் பாதுகாப்பும், அவர்களுக்குரிய சட்டங்களும் இன்னமும் சவாலான ஒன்றாகவே இருக்கிறது.

அவர்களுடைய தொழிலையும் பிற தொழிலுக்குச் சமமான தொழில்களில் ஒன்றாகக் கருதி அவர்களுக்கு சமூகத்தில் அங்கீகாரம் பெற்றுத்தருவது சவாலான ஒன்றாகவே இருக்கிறது. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி, அலியா பட் நடித்து வெளியாகியிருக்கும் இந்தப் படத்தில், அலியா பட் மிக அழகாக நடித்திருக்கிறார். கண்ணுக்கு விருந்து தரும் காட்சியமைப்பு மற்றும் இசையென்று அழகாக எடுத்திருக்கிறார்கள்.

தருவது உடலென்றாலும் உள்ளமென்றாலும் அதற்குரிய மரியாதையை அவரவர்களுக்கு தந்து, தாமும் அதுபோல நடந்துகொள்ளும் கலாச்சாரம் இன்னும் வளரவேண்டும். செக்ஸின் அத்தனை சுகத்தையும் விலைமாதரிடம் அனுபவிப்பவர் எல்லோரும் அவர்களுக்கு மரியாதை தருவதில்லை. உழைப்புக்கு மரியாதையை இல்லை. அதுபோலவே, விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருப்பதால் அவர்களை வந்து சேருகிற மனிதர்களும் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். தரம் வெவ்வேறு ஆனாலும், மனிதரின் புரிதல் மாறாமல் நிறைய விடயங்களை மாற்றமுடியாது.

பெரும்பாலான மனிதர்களைப் போய்ச்சேரும் சினிமா ஊடகம் இந்தளவுக்கேனும் ஒரு கதையைப் பேசுவது மகிழ்ச்சி 




Comments

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : தேடல் உதிர்த்த வரிகள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் இன்று. கவிஞனுக்குக் கவிதை எழுதி வாழ்த்துவதா !  நினைச்சுப் பார்க்க  முடியவில்லை .அதனால் இந்தப் பதிவு.  வரிகளை / இசையோடு சேர்ந்துகொள்ளும் தமிழ்ச் சொற்களின்  அழகை   இரசிக்கும்  பெரும்பாலானோர்களிடம் போய் எந்த வரிகள் அதிகம் பிடிக்கும் எனக் கேட்டால், உடனே ' நறுமுகையே நறுமுகையே' என்று பதில் வரும். விதிவிலக்காக யாராவது இருந்தால் மன்னிக்க :) . அந்தளவுக்கு இலக்கியப் பாடல் வரிகளையும் சினிமாப் பாடல்களில் தைரியமாகப் புகுத்தி இரசிக்க  வைத்தவர்.  'தீண்டாய் மெய் தீண்டாய்' பாடல் தொடங்கி  'நறும்பூக்கள் தேடும் திருத் தும்பியே' வரை சில பாடல்களை சங்கத் தமிழ் கலந்து எழுதினார். காதலன் படத்தில் சில நிமிடங்கள் வரும் பாடலில் குற்றாலக் குறவஞ்சியையும், தீண்டாய் மெய் தீண்டாய் பாடலின் ஆரம்பத்தில்  குறுந்தொகையையும் அப்படியே பயன்படுத்தியிருப்பார். வரவிருக்கும்  கோச்சடையானில் கூட  இலக்கியத் தமிழில்  பாடல் எழுதுவதாகப் பகிர்ந்திருந்தார். இலக்கியத்தையும் அவர் பயன்படுத்திய உவமைகளையும் விட்டுவிட்டு கொஞ்சம் விஞ்...

மதன் கார்க்கி வரிகளின் ரசிகனாய் - 180 பாடல் வரிகள்

பாடல்கள் என்றால் முதலில் அதில் வரிகளை உன்னிப்பாக ரசிப்பவன் நான் . வரியோடு சேரும் போது தான் அதில் உயிரோட்டம் இருக்கும் . இதற்க்கு ஒரு காரணம் வைர வரிகளின் சொந்தகாரர் வைரமுத்து அல்லது  வரிகளிலேயே  இசை கொண்டுவரும் கண்ணதாசனின் வரிகளாகவும் இருக்கலாம் . எல்லாவற்றையும் விட தமிழின் அழகை உணருவது மிக முக்கிய காரணமாக இருக்கலாம் . ஆனால் அழகான தமிழ் சொற்களை கொண்டலாய்( :-) ) பொழியும்  மதன் கார்கியின்  மீதான ஈர்ப்பே இரும்பிலே ஒரு இருதயத்தில் இருந்து தொடர்கிறது  . புதிய படமான  180 இல் மதனின் பாடல் வரிகளை மிகவும் எதிர்பார்த்திருந்தேன். எதிர்பார்ப்பை சற்றும் குறைக்கவில்லை .முன்னைய கார்கியின் வரிகளுக்கான  பதிவு .. முதலில் ரசித்த பாடல் ..... சந்திக்காத கண்களில் .... -பாடலை  கேட்க்க சந்திக்காத கண்களில் இன்பங்கள்  செய்ய போகிறேன்  சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்  பெய்யப்போகிறேன் ... குவியமில்லாவுக்கு பிறகு ஈர்த்த சொல் கொண்டலாய் . கொண்டலாய் என்றால் மேகம்  . சிந்திக்காது சிந்திடும் மேகம் .அழிந்து வரும் அழகான சொற்கள் அறிம...