Skip to main content

ஸ்கொட்லாந்தில் நிக்கோலா ஸ்டெர்ஜன் வெற்றி! அவர்களுடைய தேர்தல் முறை எப்படி வேலை செய்கிறது?



ஸ்கொட்லாந்து தேர்தலில் SNP எனப்படுகிற ஸ்கொட்லாந்து தேசிய கட்சி, தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்றிருக்கிறது. பாராளுமன்றத்தில், 129 இல் 64 இடங்களைப் பெற்றிருக்கிறது. 

2016ம் ஆண்டுத் தேர்தலில் பெற்றதை விடவும் இந்தமுறை  ஒரு இடம் அதிகமாகப் பெற்றிருந்தாலும், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை விடவும் ஒரு இடம் குறைவாகப் பெற்றிருக்கிறது. 

ஸ்கொட்லாந்தின் தேர்தல் முறை எந்த ஒரு கட்சியும் இலகுவில் பெரும்பான்மையைப் பெற்றுவிட முடியாதபடி அமைக்கப்பட்டது. எல்லாக் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் இணைந்து மக்களுக்காக வேலை செய்யவேண்டும் என்கிற வகையில் அமைக்கப்பட்டது. 

ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தில் மொத்தம் 129 இடங்கள். ஆனால் மொத்தத்  தொகுதிகளோ வெறும் 73 தான்! அப்படியானால் மிகுதி உறுப்பினர்களை எப்படித் தெரிவு செய்கிறார்கள்?  

வாக்குச் செலுத்தும்போது இரண்டு நிறங்களில் வாக்குச்சீட்டு வழங்கப்படும். ஒன்று, ஊதா நிறத்தில் உள்ள படிவத்தில் உங்கள் தொகுதியில் உங்களுக்குப் பிடித்த உறுப்பினரைத் தெரிவு செய்யலாம். இன்னொன்று, peach நிறத்தில் உள்ளதில் உங்கள் பிராந்தியத்தில் உங்களுக்குப் பிடித்த கட்சியினைத் தெரிவு செய்யலாம்.  


அதில், தொகுதியில் பிடித்த உறுப்பினரைத் தெரிவுசெய்வது, First past the post சிஸ்டம்படி வேலைசெய்கிறது. ஊதா நிறத்தில் உள்ள படிவத்தின்படி தொகுதியில் அதிகமாக வாக்குகள் பெறுகிறவர் நாடாளுமன்றத்தின் உறுப்பினராகத் தெரிவுசெய்யப்படுவார். மொத்தம் 73 உறுப்பினர்கள் இந்த முறையில் தெரிவு செய்யப்படுவார்கள். 

மிகுதி 56 உறுப்பினர்களும் பிராந்தியத்தின் வாக்குகள் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்கள். அதாவது, ஸ்கொட்லாந்து எட்டு பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு பிராந்தியத்திலிருந்தும் 7 உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படுவார்கள். 

முதலில் பிராந்தியத்தில் அதிகமாக வாக்குகள் பெற்ற கட்சியின் அடிப்படையில் தரவரிசைப் படுத்தப்படும். அதில் முதலில் பிராந்தியத்தில் ஒரு கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கையினை, அந்தப் பிராந்தியத்தில் கட்சி பெற்ற சீட்டுகளின் எண்ணிக்கையோடு ஒன்றினைக் கூட்டிப் பிரிப்பார்கள். 

உதாரணமாக, ஆப்பிள் என்கிற ஒரு கட்சி பிராந்தியத்தில் 1 லட்சம் வாக்குகள் பெற்றிருக்கிறது என்று வைப்போம். அதே கட்சி அந்தப் பிராந்தியத்தில் மூன்று சீட்டுகள் பெற்றிருக்கிறது என்றால், ஒரு லட்சத்தினை மூன்று +1 =  நான்கினால் பிரிப்பார்கள். பிரிக்கும்போது இந்தக் கட்சி 25,000 வாக்குகளோடு பின்னால் போய்விடும். அடுத்ததாக 75,000 வாக்குகளோடு இருக்கிற ஆரேஞ் என்கிற கட்சி மேலே வரும். அந்தக் கட்சிக்கு ஏழில் ஒரு சீட்டு வழங்கப்படும். மீண்டும் அதே ஆரேன்ஜ் கட்சிக்கு கிடைத்த 75,000 வாக்குகளை அந்தக் கட்சி பெற்ற சீட்டுகளின் எண்ணிக்கையோடு ஒன்றினைக் கூட்டி பிரிப்பார்கள். அது பின்னால் போல மூன்றாவதாக ஒரு ஸ்டாபெரி கட்சி வரும். அதற்கு ஒரு சீட்டு வழங்கப்படும். இப்படி இதே செயற்பாடு ஏழு உறுப்பினர்கள் கிடைக்கும் வரை மீண்டும் மீண்டும் நிகழ்ந்துகொண்டே இருக்கும். இதனால் ஏனைய கட்சிகளுக்கும் நாடாளுமன்றத்தில் இடம் கிடைக்கிறது.

இவ்வளவு சிக்கலான உறுப்பினர் தெரிவுமுறை ஏன் என்றால் உதாரணமாக ஒரு தொகுதியில் 33 வீதம் எடுக்கிறவர் உறுப்பினரான வருவதற்கான சந்தர்ப்பம் இருக்கிறது. அரசாங்கமே 33 வீதத்தோடு பெரும்பான்மை அமைப்பதற்கு சந்தர்ப்பம் இருக்கிறது. ஆனால் இதில் மிகுதி 67% சதவீதமான மக்கள் அவரை நிராகரித்திருக்கிறார்கள். ஜனநாயக முறைப்படி அந்த 67% மக்களின் குரலுக்கு இடமில்லை. இந்த hybrid தேர்தல் முறை கட்சிக்கு கிடைக்கிற வாக்கு அடிப்படையில், மக்கள் கட்சிக்கு வழங்குகிற வாக்குகளின் அடிப்படையில் விகிதாசார முறைப்படி ஏனைய கட்சி உறுப்பினர்களையும் நாடாளுமன்றத்துக்கு அனுப்புகிறது. 

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஸ்கொட்லாந்து பிரிட்டனிலிருந்து தனியாகப் பிரிந்து போவதா இல்லையா என்று வாக்கெடுப்பு நடத்துவோம் என SNP கட்சியும் Scottish Green Party என்கிற கட்சியும் பிரச்சாரம் செய்தது. இதில் ஸ்கொட்லாந்து தேசிய கட்சி 64 இடங்களையும், கிறீன் பார்ட்டி 8 இடங்களையும் பெற்றிருக்கிறது. கொரோனா இடர் முடிந்தபிறகு இரண்டாவது தடவையாக, பிரிந்து போவதா இல்லையா என்று வாக்கெடுப்பு நடத்துவோம் என ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியின் முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டெர்ஜன் சொல்கிறார்.

Comments

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : தேடல் உதிர்த்த வரிகள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் இன்று. கவிஞனுக்குக் கவிதை எழுதி வாழ்த்துவதா !  நினைச்சுப் பார்க்க  முடியவில்லை .அதனால் இந்தப் பதிவு.  வரிகளை / இசையோடு சேர்ந்துகொள்ளும் தமிழ்ச் சொற்களின்  அழகை   இரசிக்கும்  பெரும்பாலானோர்களிடம் போய் எந்த வரிகள் அதிகம் பிடிக்கும் எனக் கேட்டால், உடனே ' நறுமுகையே நறுமுகையே' என்று பதில் வரும். விதிவிலக்காக யாராவது இருந்தால் மன்னிக்க :) . அந்தளவுக்கு இலக்கியப் பாடல் வரிகளையும் சினிமாப் பாடல்களில் தைரியமாகப் புகுத்தி இரசிக்க  வைத்தவர்.  'தீண்டாய் மெய் தீண்டாய்' பாடல் தொடங்கி  'நறும்பூக்கள் தேடும் திருத் தும்பியே' வரை சில பாடல்களை சங்கத் தமிழ் கலந்து எழுதினார். காதலன் படத்தில் சில நிமிடங்கள் வரும் பாடலில் குற்றாலக் குறவஞ்சியையும், தீண்டாய் மெய் தீண்டாய் பாடலின் ஆரம்பத்தில்  குறுந்தொகையையும் அப்படியே பயன்படுத்தியிருப்பார். வரவிருக்கும்  கோச்சடையானில் கூட  இலக்கியத் தமிழில்  பாடல் எழுதுவதாகப் பகிர்ந்திருந்தார். இலக்கியத்தையும் அவர் பயன்படுத்திய உவமைகளையும் விட்டுவிட்டு கொஞ்சம் விஞ்...

மதன் கார்க்கி வரிகளின் ரசிகனாய் - 180 பாடல் வரிகள்

பாடல்கள் என்றால் முதலில் அதில் வரிகளை உன்னிப்பாக ரசிப்பவன் நான் . வரியோடு சேரும் போது தான் அதில் உயிரோட்டம் இருக்கும் . இதற்க்கு ஒரு காரணம் வைர வரிகளின் சொந்தகாரர் வைரமுத்து அல்லது  வரிகளிலேயே  இசை கொண்டுவரும் கண்ணதாசனின் வரிகளாகவும் இருக்கலாம் . எல்லாவற்றையும் விட தமிழின் அழகை உணருவது மிக முக்கிய காரணமாக இருக்கலாம் . ஆனால் அழகான தமிழ் சொற்களை கொண்டலாய்( :-) ) பொழியும்  மதன் கார்கியின்  மீதான ஈர்ப்பே இரும்பிலே ஒரு இருதயத்தில் இருந்து தொடர்கிறது  . புதிய படமான  180 இல் மதனின் பாடல் வரிகளை மிகவும் எதிர்பார்த்திருந்தேன். எதிர்பார்ப்பை சற்றும் குறைக்கவில்லை .முன்னைய கார்கியின் வரிகளுக்கான  பதிவு .. முதலில் ரசித்த பாடல் ..... சந்திக்காத கண்களில் .... -பாடலை  கேட்க்க சந்திக்காத கண்களில் இன்பங்கள்  செய்ய போகிறேன்  சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்  பெய்யப்போகிறேன் ... குவியமில்லாவுக்கு பிறகு ஈர்த்த சொல் கொண்டலாய் . கொண்டலாய் என்றால் மேகம்  . சிந்திக்காது சிந்திடும் மேகம் .அழிந்து வரும் அழகான சொற்கள் அறிம...