Skip to main content

மலரினும் மெல்லிது காமம் 06 - இடஞ்சுட்டிப் பொருள் விளக்கு


"அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் 
செறிதோறும் சேயிழை மாட்டு" - குறள் 


புதிதாய் ஒரு விடயத்தை அறியும்போது என்ன தோன்றும்? அட, இதை இவ்வளவு நாளும் அறியாமல் விட்டோமே என்ற எண்ணம் தோன்றும். ஒரு நுண்ணழகை அறியும்போது என்ன தோன்றும்? இத்தனை நாளும் இந்தச் சாலையைக் கடக்கிறோமே, அந்த மதிற்சுவர்ப் பூவைக் கவனிக்கவில்லையே என்று தோன்றும். கவனிக்கையில், அன்று அந்தச் சாலையே புதிதாகத் தோன்றும். அப்படிச் சில அழகுகளை நின்று ஆராயத் தோன்றும்.

ஒரு புத்தகத்தைப் படிக்கப் படிக்க, அறியாமை விலகுவது இன்பம். அறியாமை விலகவிலக இன்னும் அறிந்துகொள்ள எவ்வளவோ இருக்கிறது எனத் தோன்றும். நுணுக்கமாக வாசிப்பவர்களுக்கு ஒற்றை வசனங்கூட மீண்டும் மீண்டும் சுவைத்தரும். அதுபோல, காமத்தை இரசிக்கத் தெரிந்தவர்க்கு அதில் நுணுக்கங்கள் பிடிபடும். அந்த நுணுக்கங்கள் அறியப் பெருக்கொண்டேபோகும். ஆசைகள் கிளைவிட்டு மலரும். அன்பு வேர்விட்டு ஊன்றிக்கொள்ளும். "ஆசை அறுபதுநாள் மோகம் முப்பதுநாள்" என்கிற பிரபல பழமொழி எல்லாம் புதியன தேடாதவரும், இரசிக்கத் தெரியாதவரும் சொல்லிவைத்த பழமொழி என்கிறான் வள்ளுவன்.
ஒரு குறிப்பிட்ட குணத்தின்மீது மீண்டும் மீண்டும் காதல் கொள்வதுபோல, ஒரு குறிப்பிட்ட பாகத்தின்மீது மீண்டும் மீண்டும் காமுற்றிருத்தல் இன்பம். ஒரு கவிஞனின் கண்களைக் கடன்வாங்கிப் பார்க்கும் நொடிகள் காமத்துக்குப் பிடித்தம். தேக வாசம் நுகரும் கணங்கள் நுரையீரலுக்குப் பிடித்தம். தேகத்தில், சின்னச் சின்ன அலைபோன்ற கோடுகள் கண்டபின்னும், செல்களைத் தேடித்திரியும் அருந்தவப் பார்வை. ஓர் இடம் சுட்டி, அதை இதழ்களால் விளம்பி விளக்குதல். கோடுபோடும் ஓவியன்போல கவனமாய்த் தீண்டிப் பொருள் ஏற்றுதல். ஒன்றன் பொருளைக் கோடிவடிவங்களில் விளக்கலாம். அதுபோல, அந்தக் காமத்தைக் கோடிமுறை கொண்டாடித் தீர்த்தபின்னும் அது தீராது.

"இளையவளின் இடையொரு நூலகம்" என்பது இடஞ்சுட்டிப் பொருள் விளக்கல். ஒரு நூலகத்துப் புத்தகங்களில் கோடிச் சொற்கள் வியாபித்து  இருக்கும். அவை அத்தனையையும் நுணுக்கமாகப் படிப்பதுபோல, அவள் இடையைத் தினமும் சேருகையில் புதியன கண்டதுபோல விளங்கும். இன்னொரு பக்கம் படித்தும் தீராது.

மலரினும் மெலிது காமம் 01 - ஞயம்பட உரை.

மலரினும் மெல்லிது காமம் 02 - மாதரடிக்கு நெருஞ்சிப் பழம்

மலரினும் மெல்லிது காமம் 03 - சின்னம் வைத்தல்

மலரினும் மெல்லிது காமம் 04 - பருகுதல்

மலரினும் மெல்லிது காமம் 05 - பயில்தல்

Comments

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : தேடல் உதிர்த்த வரிகள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் இன்று. கவிஞனுக்குக் கவிதை எழுதி வாழ்த்துவதா !  நினைச்சுப் பார்க்க  முடியவில்லை .அதனால் இந்தப் பதிவு.  வரிகளை / இசையோடு சேர்ந்துகொள்ளும் தமிழ்ச் சொற்களின்  அழகை   இரசிக்கும்  பெரும்பாலானோர்களிடம் போய் எந்த வரிகள் அதிகம் பிடிக்கும் எனக் கேட்டால், உடனே ' நறுமுகையே நறுமுகையே' என்று பதில் வரும். விதிவிலக்காக யாராவது இருந்தால் மன்னிக்க :) . அந்தளவுக்கு இலக்கியப் பாடல் வரிகளையும் சினிமாப் பாடல்களில் தைரியமாகப் புகுத்தி இரசிக்க  வைத்தவர்.  'தீண்டாய் மெய் தீண்டாய்' பாடல் தொடங்கி  'நறும்பூக்கள் தேடும் திருத் தும்பியே' வரை சில பாடல்களை சங்கத் தமிழ் கலந்து எழுதினார். காதலன் படத்தில் சில நிமிடங்கள் வரும் பாடலில் குற்றாலக் குறவஞ்சியையும், தீண்டாய் மெய் தீண்டாய் பாடலின் ஆரம்பத்தில்  குறுந்தொகையையும் அப்படியே பயன்படுத்தியிருப்பார். வரவிருக்கும்  கோச்சடையானில் கூட  இலக்கியத் தமிழில்  பாடல் எழுதுவதாகப் பகிர்ந்திருந்தார். இலக்கியத்தையும் அவர் பயன்படுத்திய உவமைகளையும் விட்டுவிட்டு கொஞ்சம் விஞ்...

மதன் கார்க்கி வரிகளின் ரசிகனாய் - 180 பாடல் வரிகள்

பாடல்கள் என்றால் முதலில் அதில் வரிகளை உன்னிப்பாக ரசிப்பவன் நான் . வரியோடு சேரும் போது தான் அதில் உயிரோட்டம் இருக்கும் . இதற்க்கு ஒரு காரணம் வைர வரிகளின் சொந்தகாரர் வைரமுத்து அல்லது  வரிகளிலேயே  இசை கொண்டுவரும் கண்ணதாசனின் வரிகளாகவும் இருக்கலாம் . எல்லாவற்றையும் விட தமிழின் அழகை உணருவது மிக முக்கிய காரணமாக இருக்கலாம் . ஆனால் அழகான தமிழ் சொற்களை கொண்டலாய்( :-) ) பொழியும்  மதன் கார்கியின்  மீதான ஈர்ப்பே இரும்பிலே ஒரு இருதயத்தில் இருந்து தொடர்கிறது  . புதிய படமான  180 இல் மதனின் பாடல் வரிகளை மிகவும் எதிர்பார்த்திருந்தேன். எதிர்பார்ப்பை சற்றும் குறைக்கவில்லை .முன்னைய கார்கியின் வரிகளுக்கான  பதிவு .. முதலில் ரசித்த பாடல் ..... சந்திக்காத கண்களில் .... -பாடலை  கேட்க்க சந்திக்காத கண்களில் இன்பங்கள்  செய்ய போகிறேன்  சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்  பெய்யப்போகிறேன் ... குவியமில்லாவுக்கு பிறகு ஈர்த்த சொல் கொண்டலாய் . கொண்டலாய் என்றால் மேகம்  . சிந்திக்காது சிந்திடும் மேகம் .அழிந்து வரும் அழகான சொற்கள் அறிம...