Skip to main content

2017 இல் விஜயதசமி ..

பிரபஞ்சத்தின் இருண்ட பக்கம் திரும்பியிருந்த பூமியின் ஒரு பக்கம்  சூரியன்  நோக்கி திரும்ப ஒளி கசிந்தது . கசிந்த சூரிய ஒளி எல்லையில்லாத வெட்ட வெளிக்கு நீல நிறத்தை கொடுத்தது . கூடுதலான செய்மதிகளின் கண் பார்வை படாத கிராமத்தில் ஆங்காங்கே கோவில்களிலும் தேவாலயங்களிலும் பக்திப்பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன . 

தெருவெங்கும் விழாக்கோலம் , திருவிழா சுவரொட்டிகள் அருகில் திறக்க இருக்கும் புதிய தொழில்நுட்பப கல்லூரியின் விளம்பரத்தை மறைத்துக்கொண்டிருந்தது .

அன்று விஜதசாமி ஆகையால் காலையிலேயே விழித்துக்கொண்டது குட்டிநேசனின் குடும்பம் . 

வானம் விடிந்துவிட்டது இன்னும் என்னம்மா தூக்கம் என தமிழ்ச்செல்வியை தட்டி எழுப்பினாள் பாக்கியம் பாட்டி .

பாட்டி ! பொய் சொல்லாதீங்க பாட்டி வானம் எண்டு ஒண்ணுமே இல்லை பாட்டி . நேற்று தான் மனோபிரியா டீச்சர் சொன்னாங்க . என்று தமிழ்ச்செல்வியின் அண்ணன்  சொல்ல பாட்டி திகைத்துப்போனாள் .வானம் கடவுள் படைச்சதல்லோ? ஆனாலும் காட்டிக்கொள்ளவில்லை .

அவன் கொஞ்சம் சுட்டி , சொல்லிக்கொண்டே ஓடி விட்டான் .

சத்தத்தில் திகைத்து எழும்பிய தமிழ்ச்செல்வி , கொஞ்ச நேரம் கண்ணை கசக்கிவிட்டு கட்டிலை விட்டு எழுந்து நடந்தாள் . ஏதோ ஒரு நினைப்பு அவள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது . நேற்று அவள் அப்பா சொன்ன ஏடுதொடக்கும்  விடயம் ஞாபகம் இருந்தது . எங்கேயோ வெளியில் போகிறோம் என்ற சந்தோசம் அவளுக்குள் . 

 அம்மா அவளுக்கு முகம் கழுவி விட்டுவிட்டு சாமியை கும்பிட்டுவிட்டு வா அம்மா  என்றாள் . அவள் தாய் விஞ்ஞான ஆசிரியை .

சாமி அறைக்கு வந்த அவள் சாமி முன்னிலையில் அடுக்கப்பட்டு இருந்த புத்தகங்களில் அட்டையில் இருக்கும் படங்களை ஒவ்வொன்றாக தலையசைத்து பார்த்தாள் . சிலது அறிவியல் புத்தகங்கள் .நவராத்திரி  பூஜைக்கு வைக்கப்பட்டிருந்தது .  ஐங்ஸ்டேயினும் நியூட்ட்டனும் சிரித்துக்கொண்டிருக்க அதன் மீது பூ வைக்கப்பட்டிருந்தது . பூவை  விலக்கிவிட்டு அவளும் அவர்களை பார்த்து கொஞ்சம் புன்னகைத்தாள் . 

சிரிக்கும் அவள் முகத்தில் குழி விழ பேபி ஷாலினி போல இருக்கிறாய் என் கண்ணே என அப்பா வந்து கட்டியணைத்து தூக்கிக்கொண்டு சென்றார் ஹோலிட்க்கு .

ஹோலில் இருந்து அண்ணன் சில படங்கள் புரட்டுவதை பார்த்த அவளும் அப்பாவிடம் இருந்து இறங்கி ஆர்வத்தோடு சென்று பார்த்தாள் . அது அவளது மச்சானின் படங்கள் . அவனுக்கும் இவளின் வயது . ஆனால் அவன் கனடாவில் இருக்கிறான் . இவர்கள் பார்ப்பதற்கு அனுப்பி வைத்திருந்தார்கள் .

வீட்டில் உள்ளவர்கள் விஜயதசமிக்கு தயாராகி கொண்டிருக்க ராஜா மாமாவும் அவர்களோடு இணைந்து பூசை பொருட்கள் தயார் பண்ணிகொண்டிருந்தார் .ராஜா மாமா தான் ஏடு தொடக்க இருப்பவர் . அவருக்குள்ளும் ஒரு சிந்தனை . இந்தப்பிள்ளை படிக்காட்டி என்னை ராசியில்லாதவன் ன்னு சொல்லீடுவானுன்களோ என்று .

கனடா மச்சான் ஒவ்வொரு படத்திலும் மிக  சிறிய கணணியை மடியில் வைத்து அமர்ந்திருந்தான் .

அவள் அண்ணன் ஆர்வத்தோடு அருகில் இருந்த செல்விக்கு  சுட்டு விரலால் இது தான் சின்ன பிள்ளைகள் கொம்பியூட்டர் .நல்லா விளையாடலாம்,படிக்கலாம்  என்றான் . 

(ஐந்து வயது பிள்ளைகளுக்கென மிகவும் இலகுவான முறையில் ஆங்கிலம் கற்க கணணியை அறிமுகப்படுத்தி இருந்தனர் .அதை தான் அவன் மடியில் வைத்திருந்தான் .)
அவளும் சின்னக்கைகளால் அதை எடுத்து பார்த்துக்கொண்டிருக்க அப்பா வந்து தூக்கினார் . முதுகுப்பக்கமாக அவளை தூக்கி வைத்திருந்தார் . 

ஒரு கையில் செல்வியும் இன்னொரு கையில் அரிசியில் எழுதுவதற்காக அரிசிப்பையையும் அப்பா கோயிலுக்கு தூக்கிக்கொண்டு புறப்பட்டார் . "அ" எழுதுவதற்காக ......
.
 கைகளுக்குள் மடங்கியிருந்த கணணிப்படத்தையே  பார்த்துக்கொண்டிருந்தது அவள் கண்கள் ......

Comments

// . இந்தப்பிள்ளை படிக்காட்டி என்னை ராசியில்லாதவன் ன்னு சொல்லீடுவானுன்களோ என்று .//
its true . thanks for sharing.
Valaakam said…
நன்றாக இருக்கிறது... இன்னும்... ஹை லெவெலில் வேனும் எனக்கு... :)
தொடர்ந்து எழுதுங்கள்... சொந்த முயற்சி பப்ளிஸ் ஆகல என்கிற கவலை வேண்டாம்...
ஆரம்பத்தில் எல்லாம் இப்படித்தான் இருக்கும்... காரணம்... நீங்கள் ஒன்றும் சினிமாவை பற்றி எழுதவில்லையே... :)
வாழ்த்துக்கள்.
நன்றி சரவணன் :)
மிக்க நன்றி பிரபு ..ஊக்கத்திற்கு நன்றிகள் .. நிச்சயமாய் உங்கள் எதிர்பார்ப்புக்கு இன்னும் எழுத முயற்ச்சிக்கிறேன் ... :)
ஆம். எமது பிள்ளைகள் பெரும் தூரம் கடக்க வேண்டியுள்ளது. ஆயினும் முயற்சித்தால் சாத்தியமாகும். மடிக் கணணி உட்பட.
roshaniee said…
பகிர்வுக்கு நன்றி
உங்க எழுத்து நடை அருமை,இலங்கைத்தமிழ் கலந்து இருக்கறதால வாசிக்க புதுமையா இருக்குகதையில் இன்னும் வேகத்தை கூட்ட சூழ்நிலைகள் வர்ணனைகளை குறைக்கவும் சுஜாதா போல் வர வாழ்த்துக்கள்

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ