Skip to main content

காமினிக்கு புரியாத புதிர் - (சவால் சிறுகதை ) அறிவியல் விளக்கம்

வழமைக்கு மாறாக நகரின் அரச  மருத்துவமனையில் ஒரே ஆரவாரம், கூச்சல் . மருத்துவ தாதி ,மருத்துவர் என  ஒவ்வொரு மனிதர்களும் தன்னிலை மறந்து அவர் அவர் உலகத்தில் வேகமாக வேலைகளை செய்துகொண்டிருந்தனர் .நோயாளிகள்  காத்திருக்கும் இடத்தில் மேலே தொங்கிக்கொண்டிருந்த தொலைக்காட்ச்சியில் அவசர செய்திகள் ஒலித்த வண்ணம் இருந்தன.

அவற்றுள்  மிகவும் வித்தியாசமாய் கறுப்பு ஆடையுடன்,வளர்ந்த மிடுக்கான தோற்றமுடைய  பரந்தாமன் பத்திரிக்கை முகத்தை மறைக்கும் படியாக அதனை விரித்து அதில்  இருக்கும் விளம்பர படங்களை சீரியஸாக பார்த்துக்கொண்டிருந்தார் .அவர் பெயர் ஆடையில் பொறிக்கப்பட்டிருந்தது .  

அவர் காதுகளுக்குள் இன்று காலை நகரத்தில் போலீசாருக்கும்,மாபியாவின் மிகப்பெரிய கடத்தல்காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற நேரடி துப்பாக்கி சமரில் காயமடைந்தவர்கள் அரச மருத்துவமையில் அனுமதி என்ற செய்தி கேட்டது ஆனால் அவர் மூளை அதற்க்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஏற்க்கனவே அதை அறிந்தவராய் சிந்தனைக்கும் பகுத்தறிவிற்கும் வேறு எங்கேயோ வேலை கொடுத்துக்கொண்டிருந்தார் .

அதற்க்கு  மேலே முதலாவது மாடியில் காயமடைந்தவர்கள் குளிரூட்டப்பட்ட தொடர் அறைகளில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தனர் .

அதில் ஒரு அறையில்  காமினி கையில் பட்ட பலத்த காயத்துடன் படுத்திருந்தாள்.அவள் உடல் விளையாட்டு வீராங்கனை போல திடமாக இருந்தது . அவளின் உறக்கத்தின் ஆரம்ப மயக்க நிலையில் டயமண்டை கைப்பற்ற  முடியவில்லை என்ற எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது .

 அப்படியே உறக்கத்தின் இரண்டாம் ,மூன்றாம் நிலைகளுக்கு சென்று நான்காம் நிலையில் தசை நார்கள் அசைவில்லாமல் இருக்க உறங்கிவிட்டாள் . 

 டாக்டர் இளமாறன் மட்டும் மருத்துவமனையில் தனித்துவமாக இயங்கினார் .அன்று ஓய்வு நாள் ,திடீரென வந்திருந்தார் .காயமடைந்திருந்த  கடத்தல்காரன் கைகளுக்குள் ஆபரேட் செய்து வைக்கப்பட்டிருந்த டயமண்டை பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக சாதாரண பெண்ணான காமினியின் காயமடைந்த கைகளுக்குள் செலுத்திவிடலாம் என எண்ணி 90 நிமிடங்களின் பின்னர் காமினியின் அறையில் பரிசோதிப்பது போல நுழைய அங்கிருந்த காவலர்கள் நகர்ந்தனர்  . 

90  நிமிடங்களில் ஐந்தாம் உறக்க நிலைக்கு சென்ற அவள் (REM sleep ) ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் . "கனவு காணும் நேரம் பெண்ணே நீ " என மனதிற்குள் டாக்ட்டர் பாடிக்கொண்டு மிக அருகில் வந்து  கையினுள்  டயமெண்டை செருக முடப்பட்ட போது அவர் அடிவயிற்றில் தொடர்ந்து இரு உதைகள் அவள் கால்களால் கொடுக்கப்பட்டது  .

ஐயோ அம்மா என்று டாக்ட்டர் கத்த,அவர் கை தசை நார்கள் விருந்து கொடுக்க டயமென்ட்  கீழே விழுந்தது .
 இவ்வளவுக்கும் அவள் இன்னும் உறக்கத்தில் ,ஆனால் டாக்ட்டர் வலி தாங்க முடியாமல் கத்தினார் . மடங்கி சுருண்டு கீழே விழுந்து விட்டார் .குளிரூட்டப்பட்ட அறை என்பதால் வெளியில் கேட்கவில்லை . ஆனால் காமினி விழித்து   விட்டாள் .

 டயமென்ட் உருளுவதை கண்ட அவள் எண்ணத்தில் எதுவும் தோன்றவில்லை ,எவரையும் எதையும் நம்பாதே தப்பித்துவிடு என அவள் அறிவு சொல்லியது . 

விழுந்திருந்த டாக்ட்டர் க்கு என்ன ஆச்சு என மனது கேள்வி கேட்டது , ஆனால் அறிவு சொல்வதையே அப்போது கேட்டாள் .  

உடனே பிஸ்டலை எடுத்தாள். இதை எதிர்பார்க்காத அதிர்ச்சியில் இருந்து மீளாது தன்னை   சுதாகரித்து கொண்டு வெளியே கோபம்,பயம் ,வஞ்சகம் கலந்த சிந்தனையோடு சென்றார் .  .

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

வெளியே சென்ற டாக்ட்டர் தமக்கு டயமென்ட் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என்ற கோபம் கலந்த விரக்தியுடன் போலீசாரிடம் " காமினியும்  அந்த கூட்டத்தில் ஒருத்தி டயமெண்டை வைத்திருந்தாள் ,தப்பித்து ஓடிவிட்டாள் என்ற முடிக்காத வசனங்களை விழுங்கினார்.

சுதாகரித்து  கொண்ட மருத்துவமனைக்கு வெளியே இருந்த போலீஸ் அதிகாரி சிவாவின் கண்களில் அகப்பட முதலில் பெண் என்று பார்த்தவன்  

“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

கணப்பொழுதுகளில் சுதாகரித்த காமினியில் துப்பாக்கி சிவாவின் நெற்றியையும் பதம் பார்த்தது . இன்னொரு கையால் தனது அடையாள அட்டையை எடுத்து காட்டினால் .

சிவா சிரித்துக்கொண்டே" உனது வேகமும் வீரமும் நீ ஒரு புலனாய்வுத்துறை அதிகாரி என்பதை காட்டுகிறது " என வாழ்த்தினான்  ..
"வாழ்த்தும் நேரம் இல்லை மிகுதிப்பேரை கைது செய் "என காமினி கூற சிவா மருத்துவமனையுள்ளே  விரைந்தான்  .

அங்கே வந்த பரந்தாமன் 
“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

பரந்தாமன் பாராட்டிக்கொண்டே தனது ரிவால்வரை  எடுப்பதை உணர்ந்த காமினி அவன் சிந்திக்க முதல் தனது செயலை துப்பாக்கியால் செய்துவிட்டாள் .

பாவம் பரந்தாமன் டாக்ட்டர் போல அவனும் அவள் யார் என்று அறிந்திருக்கவில்லை போல ...

காமினியும் புரியாத புதிர் போல டாக்ட்டர் ஏன் கீழே விழுந்தார் என யோசித்துக்கொண்டே சென்றாள் ..........


அறிவியல்  விளக்கம் :- சிலருக்கு REM (Rapid eye movement ) உறக்கத்தின் போது தசை நார்கள் அவர்கள் காணும் கனவை பொறுத்து தானாக இயங்கும் . கால் பந்தை உதைப்பது போல கனவு கண்டால் பக்கத்தில் இருப்பவருக்கு தான் உதை விழும் . .

Comments

கதை நல்லா இருக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்
நன்றி சௌந்தர் ....பாராட்டுக்கும் ஊக்கத்திற்கும்
Valaakam said…
சூப்பரா இருக்கு...:)
<3
பட்... இது போதாது எனக்கு... இன்னும் வேனும்... :D கம் ஒன்... :D
சுதர்சன் கதை நடை அருமையாக இருக்கிறது... தங்களத ஆர்.இ.எம் பற்றி நானும் நன்கு அறிந்திருக்கிறேன்.. நான் ஞாபகசத்தி பற்றி ஆராய்கையில் canong என்ற பத்தகத்தில் தான் கிடைத்தது... அது பற்றித் தெரிந்ததை எழுதுங்கள்...
இதை சிறுபிள்ளைகளில் வடிவாக அவதானிக்கலாம்...
// வளாகம் said...
சூப்பரா இருக்கு...:)
<3
பட்... இது போதாது எனக்கு... இன்னும் வேனும்... :D கம் ஒன்... //

நிச்ச்சயம் நண்பா ... தொடர்ந்து எழுத முயற்ச்சிக்கிறேன் .. உற்சாகத்திற்கு நன்றி தோழா :)
//ம.தி.சுதா said...
சுதர்சன் கதை நடை அருமையாக இருக்கிறது... தங்களத ஆர்.இ.எம் பற்றி நானும் நன்கு அறிந்திருக்கிறேன்.. நான் ஞாபகசத்தி பற்றி ஆராய்கையில் canong என்ற பத்தகத்தில் தான் கிடைத்தது... அது பற்றித் தெரிந்ததை எழுதுங்கள்...
இதை சிறுபிள்ளைகளில் வடிவாக அவதானிக்கலாம்..//

நன்றி மதி சுதா நிச்சயம் .
வாழ்த்துக்கள்...

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : தேடல் உதிர்த்த வரிகள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் இன்று. கவிஞனுக்குக் கவிதை எழுதி வாழ்த்துவதா !  நினைச்சுப் பார்க்க  முடியவில்லை .அதனால் இந்தப் பதிவு.  வரிகளை / இசையோடு சேர்ந்துகொள்ளும் தமிழ்ச் சொற்களின்  அழகை   இரசிக்கும்  பெரும்பாலானோர்களிடம் போய் எந்த வரிகள் அதிகம் பிடிக்கும் எனக் கேட்டால், உடனே ' நறுமுகையே நறுமுகையே' என்று பதில் வரும். விதிவிலக்காக யாராவது இருந்தால் மன்னிக்க :) . அந்தளவுக்கு இலக்கியப் பாடல் வரிகளையும் சினிமாப் பாடல்களில் தைரியமாகப் புகுத்தி இரசிக்க  வைத்தவர்.  'தீண்டாய் மெய் தீண்டாய்' பாடல் தொடங்கி  'நறும்பூக்கள் தேடும் திருத் தும்பியே' வரை சில பாடல்களை சங்கத் தமிழ் கலந்து எழுதினார். காதலன் படத்தில் சில நிமிடங்கள் வரும் பாடலில் குற்றாலக் குறவஞ்சியையும், தீண்டாய் மெய் தீண்டாய் பாடலின் ஆரம்பத்தில்  குறுந்தொகையையும் அப்படியே பயன்படுத்தியிருப்பார். வரவிருக்கும்  கோச்சடையானில் கூட  இலக்கியத் தமிழில்  பாடல் எழுதுவதாகப் பகிர்ந்திருந்தார். இலக்கியத்தையும் அவர் பயன்படுத்திய உவமைகளையும் விட்டுவிட்டு கொஞ்சம் விஞ்...

மதன் கார்க்கி வரிகளின் ரசிகனாய் - 180 பாடல் வரிகள்

பாடல்கள் என்றால் முதலில் அதில் வரிகளை உன்னிப்பாக ரசிப்பவன் நான் . வரியோடு சேரும் போது தான் அதில் உயிரோட்டம் இருக்கும் . இதற்க்கு ஒரு காரணம் வைர வரிகளின் சொந்தகாரர் வைரமுத்து அல்லது  வரிகளிலேயே  இசை கொண்டுவரும் கண்ணதாசனின் வரிகளாகவும் இருக்கலாம் . எல்லாவற்றையும் விட தமிழின் அழகை உணருவது மிக முக்கிய காரணமாக இருக்கலாம் . ஆனால் அழகான தமிழ் சொற்களை கொண்டலாய்( :-) ) பொழியும்  மதன் கார்கியின்  மீதான ஈர்ப்பே இரும்பிலே ஒரு இருதயத்தில் இருந்து தொடர்கிறது  . புதிய படமான  180 இல் மதனின் பாடல் வரிகளை மிகவும் எதிர்பார்த்திருந்தேன். எதிர்பார்ப்பை சற்றும் குறைக்கவில்லை .முன்னைய கார்கியின் வரிகளுக்கான  பதிவு .. முதலில் ரசித்த பாடல் ..... சந்திக்காத கண்களில் .... -பாடலை  கேட்க்க சந்திக்காத கண்களில் இன்பங்கள்  செய்ய போகிறேன்  சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்  பெய்யப்போகிறேன் ... குவியமில்லாவுக்கு பிறகு ஈர்த்த சொல் கொண்டலாய் . கொண்டலாய் என்றால் மேகம்  . சிந்திக்காது சிந்திடும் மேகம் .அழிந்து வரும் அழகான சொற்கள் அறிம...