சாதாரணமாக இளைஞர்கள் பெண்களிடம் பாவிக்கும் வேண்டுமென்றே பாவிக்கும் சொல் . ஆனால் நம்மில் பெரும்பாலானோர் இதை உணர்ந்திருப்போம் . சில இடங்கள் ஏற்க்கனவே பார்த்தது போல இருக்கும் !!! சிலரை ஏற்க்கனவே பார்த்தது போல இருக்கும் .
அந்த நினைவுகள் வந்த நொடி எமக்கே வியப்பாக இருக்கும் . ஏற்க்கனவே இதே நிகழ்ச்சி நடந்திருக்கிறதே . இதே இடத்திற்கு வந்திருக்கிறேனே ? மீண்டும் அதே நிகழ்ச்சி நம் வாழ்வில் அந்த நிமிடம் நடப்பது போல உணர்வு . அனைவருக்கும் வாழ்க்கையில் சில தடவைகள் கட்டாயம் வந்திருக்கும் .
உதாரணமாக அதே உணர்வு மீண்டும் எழுவது போல இருக்கும் . திடீரென நண்பனுடன் கதைத்துக்கொண்டிருக்கும் போது ஏற்க்கனவே இந்த தலைப்பில் பேசியிருக்கிறோம் என்ற எண்ணம் தோன்றும் .
அது தான் தேஜா வோ என அழைக்கப்படுகிறது . தேஜா வோ என்பது ஒரு நிகழ்வு முன்னர் நடந்தது போல நம் உணர்வில் தோன்றும் ஆனால் அது நடைபெறவில்லை என்று எமக்கு தெரிவது தான் .already experienced; déjà senti, already thought; and déjà visité, already visited என பிரெஞ்சு விஞ்ஞானி Emile Boirac என்பவர் இப்படி ஒன்று நம்முள் இருப்பதை இனம்கண்டு வெளியில் கொண்டு வந்தார் . இதற்க்கு பெயரும் சூட்டினார் .
1 லிருந்து 30 செக்கன்கள் வரை நீடிக்கும் இந்த எண்ணம் .
இதற்க்கு பல தியரிகள் இருந்தாலும் டாக்டர் அலன் பிரவுன் என்பவர் இதற்கான காரணத்தை விளக்கி செல்போன் தியரி என பெயர் வைத்தார் . இது அவருடைய கருத்து மட்டுமே .. மொத்தமாக 40 தியரிகள் உண்டு .
அதாவது நீங்கள் ஒரு வாகனத்தை ஓட்டிக்கொண்டு கைத்தொலைபேசியில் பேசும் போது இரு செயல்கள் ஒரே நேரத்தில் இடம்பெறும் போது நாம் உண்மையாக செய்து கொண்டிருக்கும் வேலை பார்வை , மனம், சத்தம் என்பவற்றிலேயே உணரப்படும் . திடீரென மீண்டும் போனை வைத்து விட்டு சாதாரண சூழலுக்கு வரும் போது அந்த இடங்கள் ஏற்க்கனவே பார்க்கப்பட்டது போல தோன்றும் .
இன்னொரு உதாரணமாக வீட்டு அறைக்குள் நாம் இன்னொருவருடன் பேசிக்கொண்டு நுழையும் போது அந்த அறையின் மீது பார்வையும் , சூழல் சத்தமும் கவனிக்கப்படிருக்கும் . திடீரென வீட்டுள் நுழையும் போது அது ஏற்க்கனவே உணரப்பட்டதாக இருக்கும் . ஏற்க்கனவே பார்த்த இடம் போல இருக்கும் .
ஆனால் தேஜா வு (முன்னரே பார்த்தது ) மருத்துவ ரீதியாகவும் விளக்கி விட முடியாது . அது மிகவும் ஆழமானது . எதிர்பார்க்கப்படாமல் உடனே நிகழ்வது .
ஆனால் பல விஞ்ஞான தியரிகள் நிகழ்வுகள் ஒரு கோர்வையில் இடம்பெறுவதையும் அவை ஒன்றுடனொன்று தொடர்பு பட்டவை என்றும் கூறுகின்றன . அயிங்ச்டேயினின் சமாந்தர உலகம் தியரி நாம் இந்த பாதையில் சென்றால் ஒரு நிகழ்வு இல்லை என்றால் இன்னொரு நிகழ்வு என கூறியுள்ளார் . நிகழ்வுகள் எம் வாழ்வில் பல இடம்பெறுகின்றன . அவற்றில் கோர்வையில் ஏற்ப்படும் மாற்றங்கள் இவ்வாறு தோன்ற வைக்கலாம் .
ஒவ்வொன்றும் ஒவ்வொன்றுடன் இணைந்தது . உதாரணமாக நாம் சில பொருட்களை தொலைத்து விட்டு தேடுவதுண்டு . ஆனால் சில சந்தர்ப்பங்களில் நாட்கள் கடந்து அவை தேடிய இடத்திலேயே கிடைக்கும் .
பல தியரிகள் இருந்தாலும் இன்னும் நிலையாக நிரூபிக்கப்படாத ஒன்று . நீங்களும் பல தடவைகள் உணர்ந்திருப்பீர்கள் ..
.
Comments
மற்ற தியரிகளையும் போடலாமே... ஆவலாக இருக்கிறேன்...
எனக்கும் ஒரு ஐடியா இருக்கு... அதை நான் பிறகு எழுதுறேன்... :)
déjà என்றால் already என்றுதான் அர்த்தம்... ( ஹீ...ஹீ... ஃப்ரென்ஞ் வேலை செய்யுது... )